பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி வேப்ப எண்ணெய் சிறிதளவு, காதி சோப்பு கரைசல் கலந்து தெளிப்பதன் மூலம் வெட்டுக்கிளி மற்றும் மற்ற பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த நோய் கட்டுப்படுத்தும் முறைகள்
வேப்ப எண்ணெயை 400 மில்லி 100 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும். மேலும் தசகாரியம் 3 சத கரைசலை 15 நாள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.
ரோஜா செடியில் பாரிஜாதம் செடியில் நல்ல துளிர் வருகிறது. ஆனால் பூ வைக்க வில்லை என்ன செய்வது
டீ தூள் போடலாம் அல்லது முட்டை ஓடு போடலாம்.
மிளகாய் செடி பூ பிஞ்சு பிடிக்க என்ன செய்ய வேண்டும்.
மீன் அமிலக் கரைசல் 200 மில்லி எடுத்து 10 லிட்டர் நீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம் மற்றும் ஜீவாமிர்தக் கரைசல் முறையில் மாறி மாறி வாரம் ஒரு முறை தெளித்து வந்தால் பூக்கள் உதிர்வதைத் தடுக்கலாம் .அரப்பு மோர் கரைசலை பூ பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும் .நிறைய பூக்கள் உற்பத்தி ஆகி காய்கள் காய்க்கும்.