வெண்டையின் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கான உத்திகள்

வெண்டையின் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கான உத்திகள்

பலவகையான காய்கறிகளில், வெண்டையானது நாடு முழுவதும் பெரும்பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் சாகுபடியில் அதிக பூச்சிதாக்குதல், நோய் மற்றும் நூற்புழு தாக்குதல் காணப்படுகிறது. சில சமயங்களில் இது குறிப்பிடதக்க இழப்பையும் மகசூலில் ஏற்படுத்துகிறது. சாகுபடியானது அதிகமான ஈரப்பதம் மற்றும் இடுப்பொருட்கள் உள்ள இடங்களில் செய்வதாலும் மேலும் அதன் மென்மை தன்மையாலும் இதனை பூச்சிகள் தாக்குகின்றன. பூச்சிகளால் வெண்டைக்கு ஏற்படும் இழப்பு தோராயமாக 35-40%. என்று மதிப்பிடப்பட்டுள்ளது

அதிக பூச்சிகொல்லிகள் உபயோகிப்பதினால் ஏற்படும் பாதிப்புகள்

பூச்சியினால் ஏற்படும் இழப்பை தடுப்பதற்கு அதிகமான பூச்சி கொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது,

 • பூச்சிகொல்லி அடித்து குறுகிய காலத்தில் அறுவடை செய்யப்படும் காய்களில் பூச்சிகொல்லியின் தாக்கம் இருப்பதனால் அவை இக்காய்களை உட்கொள்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம்.
 • அதிகமாக இரசாயணங்களை உபயோகப்படுத்தினால் அவை பயிர்களின் பூச்சி எதிர்ப்பு திறன், பூச்சியின் மறு உற்பத்தி, சுற்றுபுறத்தை மாசுபடுத்துதல் போன்ற பாதிப்பையும், சில உயிரினங்கள் மற்றும் செடிகள் அழியவும் காரணமாக அமையும்.

வெண்டை-முக்கிய பூச்சிகள்

இலைதத்து பூச்சி

 

இளம் மற்றும் பெரிய பூச்சிகள், வெளிர் நிறத்துடன் காணப்படும். குறுக்கு வாட்டாக நகர்ந்து செல்லும். பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சளாகி வளைந்து விடும்.அதிக தாக்குதலில் இலை செடிகள் சிவப்பாக மாறி நொறுங்கிவிடும்.

 

தண்டு மற்றும் காய் துளைப்பான்

 

செடி சிறிதாக இருக்கும் போது, இதன் புழுவானது மென்மையான தண்டுகளில் துளையிட்டு, பின்னர் கீழ் நோக்கி குடைந்துக் கொண்டு செல்லும். இதனால் தண்டானது வாடி கீழே தொங்கியும், வளரும் முனைகள் காய்ந்தும் விடும். காய்களில் புழுக்கள் துளைத்து, உட்பகுதியை தின்பதனால், காய் உருமாறி, சந்தை விலையை இழந்துவிடும்.

சிவப்பு சிலந்தி

புழு மற்றும் இளம் பூச்சிகள் பழுப்பு நிற சிவப்பினை உடையதாகவும், பெரிய பூச்சிகள் முட்டை வடிவில் காப்பி சிவப்பில் காணப்படும். பூச்சிகள் இலையின் அடிப்புறத்தை தின்று கொஞ்சம் கொஞ்சமாக இலை வளைய தொடங்கி, நொறுங்கிவிடும்.

மஞ்சள் நரம்புத் தேமல் நோய்

நரம்புகள் மஞ்சளாகி, திட்டு திட்டாக பச்சையம் காணப்படும். கடைசியில் இலை முழுவதும் மஞ்சளாக மாறிவிடும். இது வெள்ளை ஈயால் பரவக்கூடியது. பொருளதார சேதத்தை ஏற்படுத்தக்கூடிய நோயாகும்.

 

வேர் முடிச்சு நூற்புழு

இது மைக்ராஸ்கொப்பில் மட்டும் காணப்படக்கூடியது. மண்ணினால் பரவக்கூடியது. மண் உயிரிணம். இவை வேர் பகுதியை உணவாக உட் கொள்ளக்கூடியவை. இதனால் வேர் பகுதியல் முடிச்சுகள் தோன்றும். பாதிக்கப்பட்ட செடிகள் மஞ்சள் இலைகளுடன் வளர்ச்சி குன்றி காணப்படும்.

ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக யுக்திகள்

  • கரீப் (ஜூன் – ஜூலை) பருவத்தில் மஞ்சள் நரம்பு தேமல் தாங்கி வளரக்கூடிய இரகங்கள் ஆன மாக்மலி, துளசி, அனுபாமா மற்றும் சன் – 40 போன்ற இரகங்களை விதைக்க வேண்டும்.
  • தண்டு மற்றும் காய் துளைப்பானின் பொறி பயிராக சோளம்/மக்காசோளத்தை, வெண்டையை சுற்றி வளர்க்க வேண்டும்.

 

  • வெள்ளை ஈ தாக்குதலை தடுக்க ஒட்டும் பொறி அல்லது டெல்டா பொறியை இடவும்.
  • பறவைகள் புழுக்கலை தின்னும் வகையில், பறவை இருக்கைகளை ஒரு எக்டருக்கு பத்து என்ற வீதத்தில் இடவும்
  • இலை தத்து பூச்சி, வெள்ளை ஈ, சிலந்தி மற்றும் அசுவனியை கட்டுபடுத்த 5% வேப்பங்கொட்டை சாறு கரைசலை 2-3 முரை பூச்சிகொல்லி தெளிப்பதற்கு இடையிடையே தெளிக்கவும்.இலை தத்து பூச்சி மற்றும் ஏனைய உறிஞ்சும் பூச்சிகளின் எண்ணிக்கை பொருளாதார சேதத்தை உண்டாக்கும் அளவுக்கு மேல் இருப்பின், (5 பூச்சி/ செடி), ஒரு ஹெக்டருக்கு 150 மில்லி, இமிடாகோலோபிரிட் 17.85 SL தெளிக்க வேண்டும்.
  • காய்ப்புழுக்களின் (இரியாஸ் விட்டல்லா) அந்து பூச்சிகளை மொத்தமாக பிடிப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 2 என்ற வீதத்தில் இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும். 15-20 நாள் இடைவெயியில் கவரும் பொருளை மாற்ற வேண்டும்.

 • முட்டை ஒட்டுண்ணியான டிரைகோகிராமா கிலோனியை, (1-1.5 இலட்சம்/ஹெக்ட்ர்) விதைத்த 30-35 நாளில் வார இடைவெயியில் 4-5 முறை தண்டு மற்றும் காய் துளைப்பான் கட்டுப்பாட்டிற்கு இடவும். தண்டு மற்றும் காய் துளைப்பானின் எண்ணிக்கை பொருளாதார சேத நிலையின் எண்ணிக்கையை (5.3% பாதிப்பு) கடந்தால் ஒரு ஹெக்டருக்கு 200 கிராம் சைபர்மெத்ரீனை தெளிக்க வேண்டும்.
 • மஞ்சள் நரம்பு தேமல் நோய் தாக்கிய செடிகளை உடனடியாக நீக்க வேண்டும்
 • பாதிக்கப்பட்ட தண்டு மற்றும் காய்களை நீக்கி அழிக்க வேண்டும்.
 • தேவையான நேரத்தில் பின்வரும் இரசாயண உரங்களை தத்துபூச்சி, அசுவனி, வெள்ளை ஈ, துளைப்பான் மற்றும் சிலந்தியை கட்டுப்படுத்த அடிக்கலாம்.

நன்மை தரும் பூச்சிகள்

 

செய்யக்கூடியது மற்றும் கூடாதது

செய்யக்கூடியது செய்யக்கூடாதது
 • சரியானகாலத்தில் விதைப்பது
 • வயல் சுகாதாரம்
 • புதிதாக தயார் செய்யப்பட்ட வேப்ப கொட்டை கரைசலை (NSKE) உபயோகிக்க வேண்டும்.
 • தேவைப்பட்டால் மட்டும் பூச்சி கொல்லிகளை உபயோகிக்க வேண்டும்
 • உபயோகிப்பதற்கு முன்னர் கத்திரி காய்களை கழுவ வேண்டும்
 • பரிந்துரைக்கப்பட்ட அளவை விட பூச்சி கொல்லிகளை அதிகம் உபயோகிக்க கூடாது
 • ஒரே பூச்சி கொல்லியை திரும்ப திரும்ப அடிக்க கூடாது
 • பூச்சி கொல்லிகளை கலந்து அடிக்கக்கூடாது
 • மோனோகுரோட்டோபாஸ் போன்ற அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சி கொல்லிகள் உபயோகிக்க கூடாது
 • அறுவடைக்கு முன் பூச்சிகொல்லியை அடிக்க கூடாது
 • பூச்சிகொல்லி அடித்து, 3-4 தினங்களுக்குள் காய்களை திண்ணக்கூடாது.

 

 

ஆதாரம் : வேளாண் ஆராய்ச்சி கழகம், பூசா, புது டெல்லி – 110 012.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories