தக்காளி விதைகளை கூட விதை நேர்த்தி செய்யலாமா?
வெள்ளை ஈக்கள் பயிர்களை எப்படி பாதிக்கிறது?
வெள்ளை ஈக்கள் சுமார் 20 முதல் 30 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்த ஈக்களாக மாறி கூட்டம்கூட்டமாக இலைகளின் அடிப்பகுதியில் காணப்படும்.
காற்றின் எதிர் திசையில் பரவி அடுத்தடுத்த தோட்டங்கள் வயல்களில் உள்ள பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
நெல் பயிரில் மாவுப்பூச்சியை பூச்சியை எப்படி கட்டுப்படுத்தலாம்?
நெற்பயிரில் மாவுப் பூச்சியின் தாக்கமானது புதிய தூர்கள் உருவாகும் காலங்களில் தொடங்கி தண்டுகள் வளர்ச்சி அடையும் காலங்களில் அதிகமாக தாக்குதலை ஏற்படுத்தும்.
வயல் வரப்புகளில் உள்ள புல்வகை களைகளை அகற்றி வரப்புகளை சீர்செய்தல் வேண்டும் இயற்கை பூச்சி எதிரிகளான பொறி வண்டு, குளவி, மற்றும் தட்டான்களை பாதுகாக்க வேண்டும்.
தக்காளி விதைகளை எப்படிவிதை நேர்த்தி செய்யலாம்?
ஒரு எக்டருக்கு தேவையான 350 முதல் 400 கிராம் தக்காளி விதைகளை 40 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
ஒரு மீட்டர் அகலமுள்ள மேட்டுப் பாத்திகளில் 10 சென்டிமீட்டர் வரிசை இடைவெளியில் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை விதைக்க வேண்டும்.
உளுந்து விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் அதிகமாக உள்ள களைகளை ஒரு முறை கையால் பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும்.
காய்கள் 80 சதவீதம் முதிர்ச்சி அடைந்தவுடன் செடிகளை அறுத்து வெயிலில் காயவைத்து பிறகு எந்திரங்களைக் கொண்டு அல்லது கையினாலும் உளுந்து பயிர்களை பிரித்தெடுக்கலாம்.
மாடுகளின் தீவனத்தில் கட்டாயம் உப்பு சேர்க்க வேண்டுமா? எவ்வளவு சேர்க்க வேண்டும்?
மாடுகளின் தீவனத்தில் உப்பு கட்டாயம் சேர்க்க வேண்டும். உப்பில் சோடியம் மற்றும் குளோரைடு என்ற இரண்டு தாது உப்புகள் இருக்கின்றன. உடலில் உள்ள செல்களில் இவ்விரு தாது உப்புக்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.
மேலும் தாதுக்கள் உடலில் சவ்வூடு பரவல் சரியாக நடைபெற உதவுகின்றன. ஒரு வளர்ந்த மாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 30 கிராம் உப்பினை தீவனத்துடன் கொடுக்க வேண்டும் .