வெள்ளை பூச்சியின் கட்டுப்படுத்தும் இதுவே போதும்!

வயலில் உள்ளகலைகளை இவ்வாறு அழைக்கலாம்?

முளைத்த களைச் செடியாக இருந்தால் ஒரு கிலோ கல் உப்பு, களைச்செடி 2 கிலோகல் உப்பை லிட்டர் கோமியத்தில் நீர் கலக்காத மாட்டு கோமியம் ஒரு மாத காலம் ஆகியிருந்தால் இன்னும் சிரிப்பு போட்டு நன்றாக கலக்கவும். பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை அறிந்து விடவும்.

அதனுடன் வேப்ப எண்ணெய் 100 மில்லி விட்டு கலக்கவும் பிறகு வடிகட்டி வைத்து ஆனால் களைச்செடிகள் மீது தெளிக்கவும் பயப்படக்கூடாது அடுத்த இரண்டு நாட்களில் அனைத்து கலைகளும் கருகிவிடும்.

மிளகாய்ச் செடியில் வெள்ளை பூச்சிகள் அதிகம் உள்ளது அதை எப்படி கட்டுப்படுத்துவது?

பச்சை மிளகாய் 250 கிராம் இஞ்சி 250 கிராம் பூண்டு 250 கிராம் ஆகிய மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊறவைத்து வடிகட்டி எடுத்து 3oo மில்லியை 10 லிட்டர் நீருடன் கலந்து இரண்டு அல்லது மூன்று முறை தெளித்தால் வெள்ளை பூச்சி தாக்குதலை குறைக்கும்.

வேப்பங்கொட்டைச் சாறு தெளிப்பதன் மூலம் வெள்ளை பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

கத்தரிக்காய் செடியில் இலை சுற்றலுக்கு என்ன செய்யலாம்?

வேப்ப எண்ணெய் ஒரு லிட்டர் புங்கன் என்னை ஒரு லிட்டர் கோமியம் 10 லிட்டர் காதி சோப்பு கரைசல் அரை லிட்டர் ஆகிய அனைத்தையும் கலந்து ஒரு நாள் கழித்து கத்தரிக்காயின் செடியின் இலை மீது தெளித்தால் இலைச் சுருட்டுப் புழு கட்டுப்படுத்தலாம்.

முட்டைகோஸ் செடியில் குழு மற்றும் வண்டு தாக்குதல் உள்ளது என்ன மருந்து தெளிக்கலாம்?

வாரம் ஒரு முறை தசகாவ்யா கரைசலைத் தெளிக்கலாம் தாய் அந்துப் பூச்சிகளை கட்டுப்படுத்த மாலையை இரவு வரை விளக்குப்பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம்.

மாடுகளுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்க எந்த மாதிரியான அடர்தீவனம் கொடுக்கலாம்?

மக்கச்சோளம் ஐந்து கிலோ கம்பு ஒரு கிலோகேழ்வரகில் 3கிலோ பாசிப்பயறு ஒரு கிலோ ஆகியவற்றைக் கலந்து 500 கிராம் முதல்ஒரு கிலோ வரை பச்சையாக ஊறவைத்து அரைத்து கொடுத்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.

மேலும் அசோலாவை ஒரு மாட்டிற்கு இரண்டு கிலோ வரை கொடுத்து வந்தால் உற்பத்தியை பெருக்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories