வேரழுகல் நூற்புழு கனகாம்பரம் பூவை தாக்காமலிருக்க இதுதான் வழி……

கனகாம்பரம்

கனகாம்பரம் பயிரை தாக்கும் நூற்புழுக்களில் முக்கியமானவை வேரழுகல் நூற்புழு,சுருள்வடிவ நூற்புழு,வேர்முடிச்சு நூற்புழு மற்றும் ஊசி நூற்புழு போன்றவைகளாகும்.

வேரழுகல் நூற்புழு:

“தாக்கப்பட்ட செடிகள் குட்டையாகவும்,இலைகள் இளஞ்சிவப்பிலிருந்து கருஞ்சிவப்பு
நிறமாகவோ அல்லது மஞ்சள் நிறமாகவோ மாறி மேல் நோக்கி சுருண்டு காணப்படும்.

“பூக்கள் சிறுத்துக் காணப்படும் வேரின் வளர்ச்சி குன்றியும்,கருப்பு நிறமாகி அழுகியும் காணப்படும். மலர்களின் மகசூல் குறைவாகவும்,தரமற்றதாகவும் இருக்கும்.

**இந்த வேரழுகல் நூற்புழு பியூசேரியம் சொலானி எனும் பூசனத்துடன் சேர்த்து செடியைத் தாக்குவதால் ஏற்படும் விளைவுகளே தமிழ்நாட்டில் கனகாம்பர பயிர் வளர்ச்சி குறைந்து வருவதற்கு காரணம். இதனால் பாதிக்கப்பட்ட வேர்ப்பகுதியில் பியூசேரியம் சொலானி,பியூசேரியம் ஆக்சிஸ்போரம் என்னும் பூசணங்களும் காணப்படுகின்றன.

**தொழு உரத்தை இடுவதாலும்,சாமந்தி வகைப் பயிரை ஊடுபயிராக பயிரிடுவதாலும்,நூற்புழுவை குறைக்க முடியும். கார்போபியூரான் செடிக்கு ஒரு கிராம் வீதமோ அல்லது நாற்றங்காலில் ஒரு சதுர மீட்டருக்கு 6 கிராம் வீதமோ இடுவதன் மூலம் நூற்புழுவை கட்டுப்படுத்தலாம்.

**பயிர்களில் ஒரு எக்டருக்கு 33 கிலோ என்ற வீதத்தில் இடுவதன் மூலம் நூற்புழுக்ககளை கட்டுப்படுத்த முடியும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories