மக்காச் சோளத்தை தாக்கும் அமெரிக்கன் படைப்புழு கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

மே, ஜீன் மாதங்களில் *கோடை உழவு* செய்தல் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப் புழுக்களை அழிக்கலாம்.

*ஓரே சமயத்தில் விதைத்தல்* :
அனைத்து விவசாயிகளும் பருவத்தில் ஒரே சமயத்தில் விதைப்பு செய்ய வேண்டும். பல்வேறு நிலைகளில் விதைப்பு செய்தால் வளர்ச்சி நிலையில் உள்ள மக்காச்சோளப் பயிர்களில் அமெரிக்கன் படைப்புழு அதிக அளவில் தாக்கும்.

*விதை நேர்த்தி செய்து விதைத்தல்* :
பேவேரியா பேசியானா 1 கிலோ விதைக்கு 10கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் பூச்சி தாக்குதலை குறைக்கலாம்.

*ஊடுபயிர் மற்றும் வயல் ஓரபயிர் சாகுபடி* :
மக்காச் சோளம் விதைக்கும் போது அதனுடன் வயல் ஓரங்களில் தட்டைப்பயிறு, ஆமணக்கு, சூரிய காந்தி, சாமந்திப் பூ ஆகியவற்றை விதைப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம் எனவே, அனைத்து விவசாயிகளும் கண்டிப்பாக ஊடுபயிர் மற்றும் வயல் ஓரப்பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.

*முட்டைக்குவியல்கள், கூட்டமாக காணப்படும் இளம் புழுக்களை கண்காணித்து அழித்தல்* :
விவசாயிகள் பயிர் விதைத்த 1 வாரம் முதல் 3 அல்லது 4 தினங்கள் இடைவெளியில் வயல் முழுவதும் நடந்து, கண்காணித்து இலையின் மேற்புரம் அல்லது பின்றம் காணப்படும் முட்டை குவியல்கள் மற்றும் இளம்புழுக் கூட்டங்களை அழிக்க வேண்டும்.

*இனகவர்ச்சிப்பொறிவைத்தல்*:
எக்டருக்கு 12 எண்கள் வீதம் வைத்தல்

*வேப்ப எண்ணெய் கரைசல் தெளித்தல்*:
விதைத்த 7 ஆம் நாள் அசாடிராக்டின் 1சதம் (வேப்ப எண்ணெய்)2மிலி ஒருலிட்டர் தண்ணீருக்கு கலந்து தெளிப்பதன் மூலம் தாய் அந்துப்பூச்சிகள் பயிரில் முட்டைகள் இடுவதை தவிர்க்கலாம்.

*பூச்சிகளை கட்டுப்படுத்தும் பூஞ்சாணங்கள் தெளித்தல்*:
மெட்டாரைசியம் அனிசோபிலே 4 கிலோ எக்டருக்கு தெளித்தல், விதைத்த 15-20 நாட்களுக்கு மேல் தெளித்தல்.

*ஓட்டுண்ணிகள் வெளியிடுதல்*:முட்டை ஒட்டுண்ணி டிரைகோகிரம்மா பெர்டியோசம் 5சிசி எக்டருக்கு வெளியிடுதல்
பூஞ்சாணங்கள் தாக்கிய புழுக்களை சேகரித்து அவற்றை மீண்டும் அரைத்து பயிருக்கு அடிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

*சாம்பல், மணல் ஆகியவற்றை குருத்தில் இடுவதன் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்*.

வேளாண்மை துறை

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories