#தக்காளியின் பயன்கள்
தக்காளி காய்கறி வகையைச் சேர்ந்தது என்று பலரும் நினைக்கிறார்கள் அது தவறு தக்காளி பழவகையைச் சேர்ந்தது
தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, அதிக அளவில் உள்ளது. இதுதவிர கால்சியம், பாஸ்பரஸ்; மற்றும் இரும்புச்சத்து வைட்டமின் பி, மாவுச்சத்து ஆகியவையும் உள்ளது. இதில் மாவுச்சத்து குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். தக்காளி சிறுநீரை நன்கு வெளியேற்றுவதுடன் கிருமிகள் அண்டாமல் தடுக்கும். ரத்தசோகை, கல்லீரல் கோளாறு ஆகியவற்றுக்கும் மருந்தாகும். தக்காளி பழச்சாற்றை தினசரி குடித்து வந்தால் போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
இவ்வளவு மருத்துவக் குணங்கள் தக்காளியில் இருப்பதால் மலிவாக கிடைக்கும் சமையத்தில் வாங்கி பயன்படுத்தலாம்
தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையுடன் இருக்கிறார்கள் ஏனென்றால் தக்காளியின் விலை குறைந்து விட்டது விவசாயிகளுக்கு அதிக மகசூல் கொடுக்கும் சமையத்தில் அவர்களுக்கு விலை சரியாக கிடைக்கவில்லை ஆனால் விலை அதிகம் இருக்கும் பொழுது விவசாயிகளிடம் சரியான மகசூல் இல்லாததுதான் காரணம்.
இருந்தாலும் விவசாயிகள் கொஞ்சம் திட்டமிட்டு விவசாயம் செய்தால் நல்ல லாபம் பெறலாம் நாம் எப்பொழுதுமே நமக்கு ஒருகஷ்டம் வந்தபிறகு தான் அவற்றை பற்றி யோசிப்போம் ஆனாலும் அவற்றை எவ்வாறு சரிசெய்ய போகிறோம் என்று சிந்திக்க வேண்டும் எந்த பட்டத்தில் தக்காளி நடவு செய்தால் நமக்கு விலை கிடைக்கும் வேறு விவசாயிகள் யாரும் அதிகஅளவில் தக்காளி பயிரிட்டு இருக்கிறார்களா? என்பதையும் நாம கவனித்து எந்த ஒரு பியிரும் சரியாக நடவு செய்யாமல் இருந்தால் (மிக குறைவாக பயிரிட்டு இருந்தால் நமக்கு அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை தெரிந்து கொண்டு பிறகு நடவு செய்ய கூடிய பயிர்களை தேர்வு செய்யலாம்
புதுப்பட்டியை சேர்ந்த திரு கணேசன் என்ற விவசாயி நாட்டுத் தக்காளி நடவு செய்திருந்தார் அவர் தக்காளியில் விலை மிகவும் மலிவாக இருப்பதால் அவற்றை விதையாக எடுத்து விற்பனை செய்யலாம் என்று விதையாக ஆட்களை வைத்து பிரித்தெடுத்து விற்பனை செய்தார் அவரை போன்று நாமும் விலைபொருட்களை மதிப்பூட்டுதல் செய்து விற்பனை செய்தாலும் நாம நஷ்ட பட தேவையில்லை
விவசாயிகளுக்கும் நஷ்டம் வராமல் பார்த்துக் கொள்ளலாம்