வாழைப்பழத்தில் எவ்வளவு வகைகள் இருக்குனு தெரியுமா?…

1.. கற்பூரவல்லி வாழைப்பழம்: இதனை “தனைத் தேன்” வாழை என்பார்கள்.

2.. மலை வாழைப்பழம், பேயன் வாழைப்பழம்

பேய்கள் நடமாடும் சுடுகாடுகளில் சிவ பெருமான் உலாவுவதாக பேசப்படுவதால் அவர் பேயன் எனப்படுகிறார். எனவே அவர் பெயரில் பேயன் பழம்.

3.. பச்சை வாழைப்பழம்:

பச்சை நிறத்தில் இருக்கும் இதைத்தான் இரதை வாழைப்பழம் என்றும் அழைப்பர்.

4.. பெங்களூர் பச்சை வாழைப்பழம்

பெங்களூர் பச்சை என்றாலும் நிறத்தில் மஞ்சளேயாகும்.

5.. நேந்திரம் வாழைப்பழம்:

இந்த வாழைப்பழம் கேரளாவில் உற்பத்தியாகும்

6.. மொந்தன் வாழைப்பழம்:

அம்மை நோய் கண்டவர்களுக்கு இதனை உண்ணத் தருவார்கள்.

விஷ்ணு பகவானுக்கு மற்றொரு பெயர் முகுந்தன். அதுவே மருவி மொந்தன் என்றாகி அந்த பெயரில் மொந்தன் பழம்.

7.. பூவன் வாழைப்பழம்:

எப்போதும் பூவின் மீது அமர்ந்த வண்ணம் காட்சியளிக்கும் பிரம்ம தேவன் பூவன் எனப்படுகிறார். எனவே அவர் பெயரில் பூவன் வழைப்பழம்.

8.. கப்பல் வாழைப்பழம்:

இதைதான் ரசுதாளி வாழைப் பழம்.

9.. கதலி வாழைப்பழம்

இது வாழைப்பழத்திற்கு வடமொழி பொதுப் பெயர். (கதலி – வாழைப்பழம்)

10.. ஏலரிசி வாழைப்பழம் :

அளவில் சிறியதாயினும் இதன் சுவை மிகவும் இனியது. தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.

11.. மோரீஸ் வாழைப்பழம்:

செவ்வாழைப் பழம் செந்நிறத்தில் விளையும் இந்த வகைப் பழங்கள் மிகுந்த சுவையும், மணமும் உடையதாய் உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது.

இப்படி பல்வேறு வகைகள் வாழைப்பழத்தில் இருக்கு. அதில், நம் மண்ணிற்கு ஏற்ற ரகத்தை பயிரிட்டு நல்ல மகசூல் பெறலாம். வாழை எல்லா பருவத்திலும், அனைத்து மக்களாலும் விரும்பக்கூடிய ஒரு இனமாக இருப்பதால் இதற்கு எப்பவும் மௌசு அதிகம்.

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories