விதை அளவு
பதியன் செடிகளை தான் நடவு செய்ய வேண்டும் .ஒரு ஏக்கருக்கு நூறு பதியன் செடிகளைதேவைப்படும்.
விதைத்தல்
40 நாட்கள் வயதுள்ள பதியன் செடிகளை குழியின் மையத்தில் ஒரு அடி ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க ஒவ்வொரு செடியின் அருகிலும் ஒரு நீளமான குச்சியை ஊன்றி அதனுடன் செடியை இணைத்துக் கட்ட வேண்டும்.
நீர் நிர்வாகம்
நடவு செய்த 15 நாள் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட வேண்டும் .அதற்கு பிறகு மண்ணின் தன்மையை பொறுத்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் செய்தால் போதும்.