ஜூன் ஜூலை மாதத்தில் திராட்சை நடவு செய்ய ஏற்ற பருவமாகும்
நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் பூமிக்கு ஏற்றது மண்ணின் கார அமிலத்தன்மை பூமிக்கு ஏற்றதாகும் மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 க்குள் இருக்க வேண்டும் மண்ணின் உப்பு நிலை 1.0 மிகாமல் இருக்க வேண்டும்
நிலம் தயாரித்தல்
தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது சமன் படுத்தவேண்டும் பிறகு அதில் பன்னீர் ரகங்களுக்கு குழிகளை 0.6 மீட்டர் அகலம் 0.6 மீட்டர் அகலம் 3 மீட்டர் இடைவெளியில் தோன்றவேண்டும் மற்ற ரகங்களுக்கு 1x1x1 மீட்டர் அளவுள்ள குழிகளை எடுக்க வேண்டும் குழிகளில் நன்கு மக்கிய தொழு உரம் அல்லது குப்பைகள் அல்லது பசுந்தழை உரம் கொண்டு நிரப்பிட வேண்டும்
விதை
வேறு வந்த முற்றிய குச்சிகள் தான் நடவுக்கு பயன்படுகின்றன
விதைத்தல்
தயார் செய்துள்ள குழி களில் வேறு வந்த முற்றிய குச்சிகளை
மையப்பகுதியில் நடவு செய்ய வேண்டும் பன்னீர் திராட்சை 3×2 மீட்டர் இடைவெளியிலும் மற்ற ரகங்களை 4×3 மீட்டர் இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்
நீர் நிர்வாகம்
செடிகளை நட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும் பிறகு மூன்றாவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும் அதன் பிறகு வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும் கவாத்து செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பும் அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்பும் நீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்