மகசூலை அதிகரிக்க விதை முளைப்புத்திறன் பரிசோதனை முக்கியம்!

விதைகளின் முளைப்புத்திறனை அறிந்துகொண்டு, பயிரிடுவதுதான் மகசூலை அதிகரிக்க உதவும் என திருநெல்வேலி வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது எனவே,

இது தொடர்பாக, திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலு லர் ஜா.ரெனால்டா ரமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

வீரியத்தைக் கண்டறிய (To find the dose)
முளைப்புத்திறன் என்பது விதையின் உயிர்த்தன்மை, வீரியத்தை அறிய உதவும்.

நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகள் மட்டுமே, நன்கு செழித்து வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கும். எனவே, விதை பரிசோதனை மிக மிக அவசியமாகும்.

அதேநேரத்தில் ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச முளைப்புத்திறன் தரம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

அதன்படி, மக்காசோளத்திற்கு – 90 சதவீதமும், நெல், எள், கொள்ளு ஆகியவற்றுக்கு 80 சதவீதமும் முளைப்புத்திறன் இருக்க வேண்டும் மற்றும்,

சோளம், கம்பு, கேப்பை, வீரிய ஒட்டு பருத்தி மற்றும் பயறு வகைகளுக்கு 75 சதவீதமும், நிலக்கடலை மற்றும் சூரியகாந்திக்கு 70 சதவீதமும் இருப்பதை உறுதிசெய்துகொண்டு விதைப்பது சிறந்தது.

இதேபோல், பருத்திக்கு 65 சதவீதமும், மிளகாய்க்கு 60 சதவீதமும் முளைப்புத் திறன் இருக்க வேண்டியது கட்டாயம்.

இதனைச் செய்துகொள்ளாமல், கிடைத்த விதைகளை பயிரிட்டால், எதிர்பார்த்த மகசூல் கிடைக்க வாய்ப்பு இல்லை.

எனவே விவசாயிகள் தங்கள் பயன்பாட்டுக்கென வைத்திருக்கும் விதைகளை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி முளைப்புத்திறன் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றார்.

இந்த பரிசோதனைக்கு மாதிரி ஒன்றுக்கு ரூ.30 கட்டணம் செலுத்தி முளைப்புத் திறனை அறியலாம் என்று கூறினர்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories