அதிக மகசூல் கிடைக்க மக்காச்சோளம் பயிரிடுவதற்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
மேலும் ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை அடியுரமாக இட வேண்டும்.
படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பயிரிடப்பட்ட 20 முதல் 25 நாட்களில் வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த கலப்பு பண்ணை முறையை கிடைக்கும் நன்மைகள் என்ன?
விவசாயிகளிடம் உள்ள நிலப்பரப்பில் இருந்து எப்போதும் கிடைக்கும் வருமானத்தை விட கூடுதல் வருமானமும் பயிர் சாகுபடியில் கிடைக்கும் வருமானத்துடன் மற்ற உப தொழில்கள் மூலம் நிரந்தரமான கூடுதல் வருமானமும் கிடைக்கும்.
பயிர் சாகுபடியில் எதிர்பாராத பிரச்சினை ஏற்பட்டு பயிர் இழப்பு ஏற்பட்டால் அதை சரி செய்யும் வகையில் உப தொழில்களில் ஈடுகட்டும்.
விவசாயத்தில் நீர் பாசனம் ஏன் செய்யப்படுகிறது?
விவசாயத்தில் சொட்டு நீர் பாசனம் ஆனது பயிர்களை வளர்க்கவும் நிலகட்டமைப்பே பேணவும் மழை பொய்த்த காலத்தில் வரண்ட பகுதிகளில் மண் வளம் பெறவும் மீள்பசுமையூட்டவும் பயன்படுகிறது.
மேலும் பயிரிடும்போது பயிர்களையும் காக்கவும் பனி படர் பயன்படுகிறது இது மட்டுமில்லாமல் கலைகளில் வளர்ச்சியை ம ட்டுப்படுத்துவது கடினமாவதை தடுக்க உதவுகிறது.
வீட்டு தோட்டம் மாடி தோட்டம்எப்படிஅமைக்கலாம்?
ஓரளவு வீட்டிற்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்ய ஒரு சென்ட் நிலம் போதுமானது இதில் ஒரு வாரத்தில் மூன்று மீட்டர் நீளமும் 1 மீட்டர் அகலம் இடத்தை ஒதுக்கி அதில் நீண்ட காலப் பயிர்களை பயிர் செய்யலாம்.
இதற்கு அடுத்து அடுத்த அரை மீட்டர் அகலத்தில் நடைபாதை விட்டு மீதமுள்ள அரை மீட்டர் நீள ஒரு மீட்டர் அகலம் ஆறு பாத்திகளாக பிரித்துக் கொண்டு பயிரிடலாம்.
வீட்டில் முயல் வளர்த்தால் என்ன தீவனம் கொடுக்க வேண்டும்?
வீட்டில் நான்கு அல்லது ஐந்து முயல்களை வளர்க்கலாம் இதற்கு புல் வகைகளை தீவனங்களை கொடுக்கவேண்டும்.
பச்சைப்புல் இதனை நேரடியாக கொடுத்தால்முயல் கழியும். வயிறு உப்பிக் கொள்ளும் ஆகவே காய்ந்தபுல்லும் கொஞ்சம் கொடுக்க வேண்டும்.
முயல் சுத்தமான புல்லை தான் சாப்பிடும் ஆகவே காய்ந்த புல்லை அல்லது பச்சை புல்லை பெட்டியில் கட்டி தொங்கவிட வேண்டும்.