மாடித்தோட்டம் முருங்கைக்காய்

 

தேவையான பொருட்கள் தேவை

75 லிட்டர் முதல்100 லிட்டர் கொள்ளளவு உள்ள டிரம்.

அடியுரமாக இடுவதற்கு மணல் ,தென்னைநார் கழிவு ,மண்புழு உரம், வேப்பம்புண்ணாக்கு ,பஞ்சகாவியம்

நடுவதற்கு ஏற்ற ஒட்டு நாற்றுகள்.

நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்.

தொட்டிகள்

முருங்கையில் செடிமுருங்கை ஏற்ற மூலம் விளக்கலாம். இதற்கு இடங்களில் அடியுரமாக ஒரு பங்கும் பங்கும் ஒரு பங்கை இயற்கை உரம் மற்றும் தென்னை நார் கழிவு ஆகியவற்றை கலந்து வைக்க வேண்டும். பத்து நாட்களுக்கு பிறகு நடவு செய்யலாம்.

விதைத்தல்

செடி முருங்கை நடுவதற்கு ஓட்டு நாற்றுகளை பயன்படுத்த வேண்டும். நாற்றுகளை தொட்டியில் நடுப்பகுதியில் வைத்து நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பிறகு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்றவேண்டும்.

உரங்கள்

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்து தூள் செய்து கொள்ள வேண்டும் .இந்த தூளை செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர்ப்பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும் பூச்சி கொல்லியாகவும் செயல்படும்.

செடிகளில் பூச்சி கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். சமையல் கழிவுகள் உரமாக இடலாம்.

பாதுகாப்பு முறை

பூச்சிகளை கட்டுப்படுத்த பூண்டு, பச்சை மிளகாய் ,இஞ்சி ஆகியவற்றை அரைத்து வடிகட்டி தெளிக்க வேண்டும்.

அதிக கிளைகள் வராதவாறு கவாத்து செய்ய வேண்டும் .நல்ல திடகாத்திரமான நான்கு கிளைகளில் மட்டும் வளரவிட அனுமதிக்க வேண்டும்.
வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி மண் அணைக்க விடவேண்டும். பஞ்சகாவியா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும் .இதனால்பூக்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்.

அறுவடை

காய்களை முற்றி விடாமல் இரு நாட்கள் ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும். இலை, காய், பூ என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதால் அனைவரும் வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வளர்ப்பது சிறந்தது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories