வாடும் பயிர்கள் : கரும்பு பயிர் பாதுகாப்பில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டியவை!!

கோடை வெயில் காரணமாக கரும்பு பயிர்கள் வாடி வருவதால் விசாயிகள் கவலையடைந்து வருகின்றனர். இந்த கோடை வெயிலை சமாளிக்க கரும்பு பயிர்களில் இந்த வகையான மேலாண்மை முறைகள் கடைபிடிக்க வேண்டும் என வேளாண்துறையினர் அறிவுரைகூறினார்.

கோடை வெயில் – வாடும் பயிர்கள்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி, தாராபுரம், உடுமலை உள்ளிட்ட பல இடங்களில், 850க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ள நிலையில் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் வாடி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பயிர் பாதுகாப்பு வழிமுறை குறித்து, கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையத்தினர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பயிர் பாதுகாப்பு – வேளாண்துறை அறிவுரை
கரும்பு விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய சாகுபடி முறை குறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில்,

காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் கரும்பு பயிர் சாயாமல் இருக்க அவற்றின் தோகையை உரிக்க வேண்டும்.

முன் மற்றும் இடைப்பட்ட கரும்பில், இளங்குருத்து புழு தாக்குதல் தென்படும்.இதனை தடுக்க, அடிக்கடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும் இதில்

பூச்சி தாக்குதல் தென்பட்டால், ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் தண்ணீரில், கார்டால் ஹைட்ரேட் குளோரைடு, 2 கிராம் கலந்து தெளிக்க வேண்டும் மற்றும்,

இவ்வாறு சில எளிமையான ஆலோசனை வழங்கினர். மேலும் தகவல்களுக்கு விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை அணுகி தெரிந்துகொல்லலாம் என்றும் ஆலோசனை கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories