சுண்டல் எப்படி பயிரிடுவது

ரகங்கள்

கோ-3 கோ-4 ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை

பருவம்

ஐப்பசி மற்றும் கார்த்திகை பட்டங்களில் சாகுபடி செய்யலாம்

மண்

கரிசல் மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்டது

நிலம் தயாரித்தல்

டிராக்டர் மூலம் இரண்டு முறை உழவு செய்யவேண்டும் கடைசி உழவின்போது அடியுரமாக எக்டருக்கு 5 டன் தொழு உரமிட வேண்டும்

விதை அளவு

ஒரு எக்டருக்கு 20 முதல் 25 கிலோ விதைகள் தேவைப்படும்

விதை நேர்த்தி

விதைப்பதற்கு முன்பு விதையை 200 கிராம் சூடோமோனாஸ்200 கிராம் டிரைகோடெர்மா விரிடி ஆகியவற்றின் மூலம் நிவர்த்தி செய்ய வேண்டும்

விதைத்தல்

30×10 சென்டி மீட்டர் இடைவெளியில் விதை நேர்த்தி செய்த விதைகளை விதைக்கவேண்டும். மானாவரியாக விதையை தூவ வேண்டும் பிறகு தேவைக்கு ஏற்ப பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும்

நீர் நிர்வாகம்

விதைத்த பிறகு தண்ணீர்பாய்ச்சவேண்டும் . மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories