தாவரங்களுக்குத் தேவையான சத்துக்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
ஆரம்ப காலங்களில் விதைக்கும்போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளிக் கிள்ளிக் கொடுத்து வருகிறது. இதற்கான காரணம் மண்ணை சரியாக பராமரிக்காததுதான்..
மனிதர்களுக்கு எப்படி அனைத்துச் சத்துக்களும் அடங்கிய சரிவிகித உணவு தேவைப்படுகிறதோ, அப்படித்தான் பயிர்களுக்கும் 16 வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்றும் முதன்மை தாவர ஊட்டச்சத்துக்கள் என்றே கூறலாம்.
கால்சியம், மெக்னீசியம் மற்றும் கந்தகச்சத்து ஆகியவை இரண்டாம் நிலை துணைச்சத்து. ஊட்டச்சத்துப் பொருட்கள்
இரும்புச்சத்து, மேங்கனீஸ், தாமிரச்சத்து, துத்தநாகம், போரான், மாலிப்டினம் மற்றும் குளோரின் ஆகியவை நுண்ணூட்ட சத்துப் பொருட்கள்.
பயிர்களுக்கு தேவையான இதர சத்துக்களான ஆஸ்சிஜன், கார்பன், ஹைட்ரஜன் போன்றவற்றை பாசனம் செய்யும் நீரிலிருந்து பெற்று கொள்கின்றன. பெரும்பாலான சத்துக்களை நீரிலிருந்தும், மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கிறது. பயிறுக்கு மிக தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்றும் அடிப்படை என்பதால் இவற்றை நாம் உரங்களுடன் கலந்து பயிர்களுக்கு செலுத்துகிறோம்.
பேரூட்டம்> இடைப்பட்ட ஊட்டம்> நுண்ணூட்டம் என்பதாகும்
பேரூட்டம்
(தழை) (மணி) (சாம்பல்)
நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாஷ்
இடைப்பட்ட ஊட்டம்
மெக்னீசியம் – Mg
கால்சியம் – Ca
கந்தகம் – S
நுண்ணூட்டம்
இரும்பு – Fe
தாமிரம் – Cu
போரான் – B
துத்தநாகம் – Zin
மாங்;கனீசு – Mn
காரியம் – Pb
கார்பன் – C
ஹைட்ரஜன் – H
ஆக்சிஜன் – O
மாலிபிடினம் – Mo .
இவற்றில் பெரும்பாலும் பயிர்களுக்கு பேரூட்ட சத்துக்களே அதிகம் தேவைப்படுகின்றன. பேரூட்ட சத்துக்கள் போதிய அளவு இருந்தாலும் நுண் ஊட்டம் பற்றாக்குறை ஏற்படின் விளைச்சல் பெரும் பாதிக்பு ஏற்படும்.
பேரூட்ட சத்துக்களை நைட்ரஜன் (தழை), பாஸ்பரஸ் (மணி) பொட்டாஷ்; (சாம்பல்) ஆங்கிலத்தில் N.P.மு என்று குறிப்பிடலாம். இந்த சத்துக்களை பயிருக்கு ஏற்ற பரிந்துரையின் படி இட வேண்டும் என்றால் அவற்றை சிறிய எளிய முறையில் கணக்கு போட்டு வைத்துக்கொண்டு இரசாயன உரத்தை பயிருக்கு இடலாம். எவ்வளவு உரம் போட்டால் எவ்வளவு சத்து பயிருக்கு கிடைக்கும் என்ற கணக்கை போட்டு வைத்து உரம் போட்டால் மண்ணில் வீணாகும் அளவும் குறையும் வெயிலுக்கு ஆவியாகும் சத்தின் அளவும், பயிர் சத்தை எடுக்க முடியாத நிலையையும் தடுக்கலாம்.
விவசாயிகள் இரசாயன உரம் வாங்க செல்லும் பொழுது அந்த உரத்தின் மூட்டையில் உள்ள எண் மற்றும் என்ன எழுத்துக்கள் உள்ளது என்றும் பார்த்து வாங்க வேண்டும்.அந்த மூட்டையில் உள்ள எண்; (சதவீதத்தில்) % என்று காணப்படும். ஒரு மூடை என்பது 50 கிலோவை கொண்டதாக இருக்கும். அந்த நம்பரில் உள்ள சதவீதம் 100 கிலோவின் சத்துக்களைக் கொண்டதாக இருக்கும்..