இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி

 

ரசாயன உரங்களையே பயன்படுத்தி நிலக்கடலை உற்பத்தி செய்வதைவிட விவசாயிகள் இயற்கை வழி வேளாண் மூலம் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறமுடியும்.

இதன் பருவகாலங்கள்

ஏப்ரல், மே, ஜூன், ஆகஸ்ட், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் இதன் பருவ காலங்கள் ஆகும்.கார்த்திகை மாதத்திற்குள் விதைப்புச் செய்வது அதிக மகசூலுக்கு வாய்ப்பை அதிகரிக்கிறது.விதையின் பரிமாணத்தையும் இடத்தையும் பொறுத்து ஒரு ஹெக்டேருக்கு 100 கிலோ வீதம் பயிரிடலாம்.மண்பாங்கான நிலத்துக்கு 15-க்கு 15 செ.மீ. என்ற முறையிலும், சாதாரண நிலத்தில் 30-க்கு 10 செ.மீ. என்ற இடைவெளியில் பயிரிட வேண்டும்.தொடிப்புழுதி உண்டாகும் வரை நன்கு உழவு செய்ய வேண்டும்.இறுதி உழவுக்குப் பின்னர் ஒரு ஹெக்டேருக்கு 25 டன் தொழு உரம் இடவேண்டும்.விதைத்த 45 நாள்கள் கழித்து 400 கிலோ ஜிப்சம் உரமாக இடவேண்டும்.

மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் நிலக்கடலைக்கு  ஏற்றதாகும்.சட்டிக் கலப்பை பயன்படுத்தி உழுதபின் 3 அல்லது 4 முறை இரும்புக் கலப்பை அல்லது நாட்டுக் கலப்பைக்  கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை (புழுதி ஆகும் வரை) உழ வேண்டும்.

நீர்ப்பாசன முறை

விதைப்புக்கு பிறகு உடனடியாக நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.அதை தொடர்ந்து 5-ம் நாள்களுக்குப் பிறகு 2-ம் பாசனம், பூக்கும் பருவமான 20 நாளுக்குப் பின்னர் 3-ம் பாசனம், அதைத் தொடர்ந்து 30 நாள்களுக்குப் பின்னர் 4-ம் பாசனம் செய்ய வேண்டும்.40 நாள்கள் கழித்து வேர் முளை விடும் பருவத்திலும், 50 நாள்கள் கழித்து ஒருமுறையும் பாசனம் செய்ய வேண்டும்.இதையடுத்து காய் பிடிக்கும் பருவமான 60-ம் நாள், அதை தொடர்ந்து 70, 80 என 110 நாள்கள் வரை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

விதைப்பிற்கு 110 நாள்கள் கழித்து அறுவடை காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேர் அழுகல் நோயை தடுக்க விதைத்த 30 நாள்களுக்குப் பின்னர் 50 கிலோ தொழு உரம், 50 கிலோ மணல் ஆகியவற்றுடன் பி.எப். பொருளை கலந்து உரமாக இட வேண்டும்.

சரியான நேரத்தில் போதுமான ஈரம் மண்ணில் இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும்.அறுவடைக்குப் பின்னர் நீண்ட நாள்களுக்கு நிலக்கடலை கொடியை வயலில் விடக் கூடாது.அதிகமான சூரிய வெளிச்சத்தில் நிலக்கடலையை காய வைக்க கூடாது.
தரையில் இருக்கிற ஈரம் தாக்காதவாறு தரையின் மேல் பரப்பில் வறண்ட மணலைப் பரப்பி அதன் மேல் நிலக்கடலை மூட்டைகளை அடுக்க வேண்டும்.

நிலக்கடலைப் பயிரில் போதுமான பயிர் எண்ணிக்கை இல்லாதது மகசூல் குறைவுக்கு முக்கியமான காரணமாதலால், விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியமாகும்.

அவ்வாறு செய்வதன் மூலம் விதை முளைக்கும் திறனையும், கால அளவையும் அதிகரிக்கச் செய்யும்.

நிலக்கடலை உற்பத்தியை அதிகரிக்க பயிருக்கு ஜிப்சம் இடுதல் மிகவும் அவசியம்.  இதில் 23 சதம் – சுண்ணாம்பு சத்தும், 18 சதம் – கந்தக சத்தும் அடங்கியுள்ளது.  இதில் சுண்ணாம்பு சத்தானது காய்கள் திரட்சியாகவும், அதிக எடையுடன் காய் உருவாகவும் வழி செய்கிறது.கந்தகச் சத்தானது நிலக்கடலையில் எண்ணெய்ச்சத்தை அதிகரிக்கிறது. ஒரு ஏக்கருக்கு 80-கிலோ ஜிப்சத்தை அடியுரமாக விதைக்கும்போது இடவேண்டும், பின்னர் 40-45-ம் நாளில் களை வெட்டும் போது மீண்டும் ஒரு முறை 80-கிலோ ஜிப்சத்தை இட்டு பிறகு மண் அணைக்க வேண்டும்.

சுருள் பூச்சி மற்றும் சிகப்பு கம்பளிப்புழுவை கட்டுபடுத்த துவரை, தட்டை (அ) உளுந்து பயிர்களை ஊடுபயிர் செய்வதால் அவற்றில் இடப்படும் முட்டைகளை எளிதில் சேகரித்து அழித்து விடலாம்.பொருளாதாரச் சேதநிலையை அறிந்து வேளாண்மைத்துறை பரிந்துரைக்கும் மருந்துகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். இப்படிப் பல்வேறு நவீன உத்திகளைக் கையாண்டு நிலக்கடலை சாகுபடியில் இரட்டிப்பு மகசூல் பெறலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories