இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு சில குறிப்புகள்

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு
சில குறிப்புகள்
வேம்பு கவனம்.
எந்த பயிர்களாக இருந்தாலும் நடவு செய்த 15 நாட்கள் வரை பூச்சி நோய்த் தாக்குதல் பெரிதாக இருக்காது. அதற்குப் பிறகுதான் ஆரம்பமாகும். ஆனால் இயற்கை விவசாயத்தில் வருமுன் காப்பதுதான் சிறந்தது.
தொடர்ச்சியாக மூலிகைப் பூச்சி விரட்டியை பயன்படுத்திச் செடிகளைக் காப்பாற்றலாம்.
ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் பிண்ணாக்குக் கொடுப்பது உகந்தது. வேப்பிலைச்சாறு அதன் எண்ணெய் எல்லாம் அமிர்தம் போன்றது.
ஆனால் அளவுக்கு மிஞ்சக் கூடாது. வேம்பு சார்ந்த பொருட்களில் இரண்டாம் நிலை வேதியியல் கூறுகள் உள்ளதால் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் செடிகள் கருகிவிடும்.
காலை 10 மணி முதல் 11 மணி வரை உள்ள நேரம் மகரந்த சேர்க்கை நடக்கும் நேரம் என்பதால் அந்த நேரத்தில் செடிகள் மீது பூச்சி விரட்டி போன்றவற்றைத் தெளிக்கக் கூடாது.
அதிகாலை மற்றும் மாலை நேரங்கள் பூச்சி விரட்டி தெளிக்க உகந்த நேரம். அதேபோல பூக்கள் இருக்கும் பருவத்தில் பஞ்சகவ்யா தெளிக்க கூடாது.
செடிகளின் ஆரம்பக் கட்ட வளர்ச்சியின் போதுதான் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும்.
விசைத் தெளிப்பான் மூலம் தெளிப்பவர்கள் செடிகளுக்கு 7 அடி தூரத்துக்குப் பின்னால் இருந்துதான் தெளிக்க வேண்டும்.
இயற்கை விவசாயத்தின் அறிவியலை ஆழமாக புரிந்து கொண்டால் ரசாயன விவசாயத்தின் ஆபத்தில் இருந்து மாற வழி கிடைக்கும்.
முன்பு பல ஆண்டுகள் தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்தால்தான் விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் என்கிற நிலை இருந்தது.
ஆனால் தற்போது விதி முறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories