#ஒட்டு புளிங்செடி -ஒரு புதிய யுக்தி

#ஒட்டு புளிங்செடி -ஒரு புதிய யுக்தி
தரிசு நிலங்களைத் தங்க வயல்களாக மாற்றி அமைக்க தமிழக அரசு தரிசு நில மேம்பாட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைய சில யுக்திகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.
தரிசு நிலங்களில் வளர்க்க வேண்டிய மரத்தின் ஆணிவேர் பழுதில்லாமல் இருக்க வேண்டும். வளைந்த ஆணிவேர் உள்ளவை களையும் சுருண்ட ஆணிவேர் உள்ள செடிகளையும் நடக்கக் கூடாது.
நேரான ஆணிவேர் உள்ள செடிகளை மட்டும்தான் நடவேண்டும். எனவே நாற்று வளர்க்க குறைந்த 20 ஒ 40 செ.மீ. அளவுள்ள கருப்பு நிற பாலிதீன் பையை உபயோகிக் வேண்டும். மணல், வண்டல், செம்மண், உயிர்உரங்கள் கலந்த தொழுஉரம் ஆகியவற்றை சம அளவில் கலந்து பைகளில் நிறப்ப வேண்டும்.
நடப்பட்ட புளியின் விதையானது 15 முதல் 30 நாட்களுக்குள் முளைத்து விடும். 30 நாட்களுக்கு பிறகு முளைத்து வரும் வீரியம் குறைவாக உள்ள செடிகளைப் பயன்படுத்தக் கூடாது. 3 மாத வளர்ச்சி பெற்ற செடியில் ஒட்டுக் கட்டலாம் தேர்வு செய்யப்பட்ட தாய் மரத்தின் கொப்புகளை பக்குவப்படுத்தி எடுத்து வந்து இளம் தண்டு ஒட்டு முறையில் ஒட்டுக்கட்ட வேண்டும்.
டி.ஏ.பி. மற்றும் பொட்டா~; உரத்தை சமஅளவில் கலந்து கொண்டு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் உரக்கலவை என்ற அளவில் கரைத்துக் கொள்ளவும். தண்ணீர் ஊற்றுவதற்குப் பதிலாக 15 நாட்களுக்குப் ஒருமுறை இந்த உரநீரை ஊற்றி வரவேண்டும்.
செடியின் நுனிக் குருத்து வளையாமல் நேராக வளர்வதற்கு உதவியாக அதன் அருகில் சுமார் 10 அடி உயரமுள்ள சோளத் தட்டைகளை நடவேண்டும். செடி வளர, வளர சோளத் தட்டையுடன் சேர்த்து கட்டிவர வேண்டும். செடியில் தோன்றும் பக்க குருத்துக்களை அவ்வப்போதே கிள்ளி அகற்றி விட வேண்டும்
தொடர்ந்து இவ்வாறு செடியில் பக்க கிளைகலோ இல்லாமல் ஒரு கொடி போன்ற நிலையை அடையும்.
ஆண்டுக்கு 3 அல்லது 4 அடி உயர வளர்ச்சி என இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் சுமார் 10 அடி உயரத்திற்கும் மேலாக வளர்ந்துவிடும் இதன் வளர்ப்பில் நாம் எடுத்துக் கொள்ளும் அக்கரையை பொருத்து இரண்டு ஆண்டுகளில் விரல் தடிமன் முதல் மேலும் மும் மடங்கு பருமன் ஆகிவிடும்.
மூன்று ஆண்டுகள் நாற்றங்காலில் பராமரிக்கப்பட்ட 10 அடி உயரமுள்ள புளியன் கொடிகளை பருவ மழை ஆரம்பித்தவுடன் தரிசு நிலங்களிலும், சாலை ஓரங்களிலும் நடவு செய்ய வேண்டும். இவை நிலத்தில் நட்ட இரண்டாம் ஆண்டு முதல் பூத்து, காய்த்து பலன் கொடுக்க ஆரபித்து விடும்.
நடவு செய்யப்பட்ட செடிகள் அனைத்தும் பிழைத்துக் கொள்ளும். இக் கொடிகளை நேராக நிற்கவைக்க உதவியாக எளிதில் கிடைக்கும் மரக் கம்புகளை அல்லது இரண்டு அங்குளம் விட்டமுள்ள பி.வி.சி. குழாய்களை தூண் போல இதன் அருகில் நட்டு கொடிகளை கட்டிவைக்க வேண்டும்.
நடவில் மேலும் உயரம் தேவைப்பட்டால் அதற்குத் தகுந்தாற் போல பிவிசி குழாயின் உயரத்தை அதிகமாக்கிக் கொண்டு செடியின் உயரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
நன்கு பராமரிக்கப்பட்ட செடிகள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தமது கையில் பருமனளவுக்கு பருத்து விடும். அப்போது இவை கீழே சாயதா அளவுக்கு வலிமை பெற்று விடும். இந்த சமையத்தில் பிவிசி குழாய்களை அகற்றி விடலாம்.
இந்த புதிய அனுகுமுறையால் ஏற்படும் நன்மைகள்
தரிசு நிலத்தில் நடப்பட்ட செடிகள் அனைத்தும் பிழைத்துக் கொள்கின்றன சிறிதளவு கூட ஆடு, மாடுகளால் சேதம் அடைவதில்லை அரன் அமைக்கும் செலவு இல்லை. நட்ட இரண்டாவது ஆண்டு முதல் பலன் எடுக்கலாம்
பழைய முறையில் நடவு செய்த நிலத்தில் மரம் வைத்து பூத்து காய்க்கும் வரை ஏற்படும் பராமரிப்பு செலவு இந்த புதிய முறையால் மிகவும் குறைகிறது.
டிராக்டரால் உழவு செய்வது மிகவும் எளிதாகிறது.
கொத்தமல்லி, சீனிஅவரை , கடலை, எள், துவரை, கானம் இதர பயிர்வகைகள் சாமை போன்ற பலவற்றைப் ஊடுபயிர் செய்து நல்ல பலன் பெறலாம்
ஒட்டுச்செடி என்பதால் தாய் மரத்தைப்போல தரமான புளியை எடுக்கலாம்.
நெருக்கு நடவு செய்து அதிகமான உற்பத்தியைப் பெறலாம். இதர மர வகைகளையும் பழ மங்;களையும் இதுபோல வளர்ப்பதால் அந்த மரத்தின் விலை மதிப்பு அதிகமாகும். இவற்றின் ஆணிவேர் நன்றாக பராமரிக்கப்பட்டதால் வறட்சியைத் தாங்கும் வலிமை அதிகமாக இருக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories