குதிரைவாலி சாகுபடி

குதிரைவாலி சாகுபடி
குதிரைவாலி பயிரானது வறட்சி, தாங்கி வளரக்கூடிய மானாவாரி சிறுதானியப் பயிராகும்.
குதிரைவாலி பயிரிட ஒரு ஏக்கருக்கு மூன்று முதல் நான்கு கிலோ விதை போதும். கோடையில் நிலத்தை 2 முறை கலப்பையை கொண்டு உழுது பக்குவப்படுத்தி, தொழுவுரமோ அல்லது ஆட்டுக்கிடையோ போட்டு நிலத்தை ஊட்டமேற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
மழை பெய்தவுடன் சரியான ஈரத்தில் உழும்போதே, விதைத்துவிட வேண்டும். தேவைப்பட்டால் களை எடுத்துக்கொள்ளலாம். பலர் களைகூட எடுப்பது கிடையாது. களையை மீறி வளரும் திறன் கொண்டது குதிரைவாலி.
ஈரம் இருந்தால் ஒருமுறை அமுதக் கரைசல் என்ற ஊட்டக் கரைசலைத் தெளிக்கலாம். மழை குறைவாக இருந்தால் விளைச்சல் 500 கிலோவும், போதிய அளவு இருந்தால் 700 கிலோவும் கிடைக்கும். கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு . 90 நாட்களில் அறுவடை செய்யலாம்
தானியங்களை பிரித்த பின் உள்ள தட்டையையும் நன்கு உலர்த்தி சேமித்து வைத்தால் ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாம்.
ஆதாரம் : தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை
குதிரைவாலியின் மருத்துவ பயன்கள்
1. குதிரைவாலியை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
2. செரிமான பிரச்சனைகள், ரத்தசோகை நோய் உள்ளிடவற்றை குணப்படுத்துகிறது.
3. இது சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி கொண்டது. இதனால் உடலில் உள்ள
தேவையற்ற உப்புகளை கரைக்கும்.
4. கண் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யும் ’பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக
உள்ளது.
5. இது ஆண்டி ஆக்சிடன்ட் ஆகவும் வேலை செய்கிறது.
6. ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. இது உடலில் ஏற்படும் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பின் அளவை குறைப்பதிலும் உதவுகிறது.
7. செரிமானத்தின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.
8. உடலில் கபம் அதிகமாகி அதனால் அடிக்கடி சளி,காய்ச்சலால் அவதிப்படுவார்கள் குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.
9. குதிரைவாலியில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.
10. உடல் உறுப்புகளைத் தூய்மையாக்கும், மேலும் நல்ல ஆண்டி ஆக்சிடன்டாகவும் செயல்படுகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories