#கொய்யா சாகுபடியில் விவசாயின் அனுபவம்

#கொய்யா சாகுபடியில் விவசாயின் அனுபவம்
திரு. சசிக்கண்ணன் என்ற விவசாயி கொய்யா சாகுபடி செய்துள்ளார் சாதா முறையில் கொய்யா சாகுபடி செய்தால் 15 அடிக்கு ஒரு செடி என்ற அளவில் நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 120 செடிதான் நடவு செய்ய முடியும். அதிக மகசூல் எடுக்க 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.
அடர் ஒட்டு முறையில் கொய்யா சாகுபடி செய்வது வரிசைக்கு வரிசை 10 அடியும் செடிக்கு செடி 8 அடியும் இடைவெளி விட்டு நடவு செய்யனும் ஒரு ஏக்கருக்கு 500 செடி வரை நடவு செய்யலாம்.
கொய்யா நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 600 கிலோ தொழுவுரம் , அசோஸ்பைரில்லம் 10 கிலோ, பாஸ்போபாக்டீரியா 10 கிலோ, வேம் 10 கிலோ அனைத்தையும் எருவில் கொட்டி நன்றாக கலந்து 1..5 அடி ஆழம், அகலம் உள்ள குழி எடுத்து அதில் நடவு செய்யும் பொழுது ஒரு கிலோ வீதம் உயிர் உரங்களின் கலவையை போட்டு நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்
இவ்வாறு தொடர்ந்து நான்கு மாதத்திற்கு ஒரு முறை உயிர் உரங்களை எருவில் கலந்து போடவும் ஆறு மாதத்தில் காய் வர ஆரம்பிக்கும.
;
காய்களை பரித்துவிட்டு வளரக் கூடிய செடிகளை ஒரு கணு விட்டு செடியை மேலே வெட்டி விடனும் ஒவ்வொரு கணுவு விட்டும் செடியை வெட்டும்; பொழுது செடியின் கணு பகுதி கருப்பாக இருக்கனும்
அவ்வாறு இருந்தால் அவை பக்க கிளை எடுக்க தயாராக உள்ளது என்பதை தெரிந்து அவற்றை வெட்டி விடவும்.
இதேபோல ஒரு மரத்திற்கு 25 பக்க கிளைகள் வரும் வரை வெட்டி வரவேண்டும். பக்க கிளைகள் அதிகமாக வந்தால் தான் நமக்கு மகசூல் கூடும். தொழுவுரம், நுண்ணுரம் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை காய் காய்க்கும் கவாத்து செய்து கொண்டே இருந்தால் மரமாக வளராமல் செடியாக இருக்கும். செடியாக இருந்தால் காய் தொடர்ந்து ஆண்டு முழுவதும் காய்த்து கொண்டே இருக்கும்.
ஒரு காய் 200 கிராம் அளவு இருக்கும். ஒரு மரத்துக்கு 50 காய் என்று வைத்தால் கூட 10 கிலோ வரும் ஒரு ஆண்டுக்கு மூன்று முறை காய் வரும் என்று வைத்தால் மொத்தம் 30 கிலோ காய் கிடைக்கும்.
ஒரு கிலோ விலை ரூபாய் 20 என்று விற்றால் ஒரு மரத்துக்கு 600 ரூபாய் கிடைக்கும் (செலவு ஒரு மரத்துக்கு 100 ரூபாய் வரும்) – 500 மரத்துக்கும் மூன்று லட்சம் வருமானம் கிடைக்கும் செலவு போக நமக்கு நல்ல லாபம் தான்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories