கோ (சியு) 9 கம்பு & கோ (தி) 7 தினை

கோ (சியு) 9 கம்பு & கோ (தி) 7 தினைa

சிறு தானியங்கள் என்பது எல்லாத் தட்பவெட்ப நிலைகளிலும் மற்றும் மண்களிலும் வறட்சி மற்றும் பூச்சி நோய்களை தாங்கி வளரக் கூடிய பயிர்களாகும். சோளம், கம்பு ஆகிய பயிர்கள்  சிறு தானியபயிர்களாகவும், கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனிவரகு, மற்றும் குதிரைவாலி ஆகிய பயிர்கள் குறுதானிய பயிர்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிறுதானியப் பயிர்கள்  மலைப் பிரதேசங்களின் பயிரிடும் பரப்பளவு வெகுவாக குறைந்து காணப்பட்டாலும் இவை மண்வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் பயிரிட ஏற்றதாகும்.

இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் மொத்த நிலப்பரப்பு 141.0 மில்லியன் ஹெக்டேர் ஆகும் இவற்றில் மானாவாரி சாகுபடி நிலத்தின் பரப்பளவு 85.0 மில்லியன் ஹெக்டேர் ஆகும். இந்தியாவில் 177 மாவட்டங்களில் மானாவாரி சாகுபடி நிலப்பரப்பு பரவி உள்ளது. இது மொத்த விளை நிலத்தில் 44% ஆகும். சிறு மற்றும் குறுதானியப் பயிர்கள் 8000 வகை 600 தலை முறைகளுக்கு முன்னர் இருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் தானிய வகைகள் வெகுவாக குறைந்து தற்போது 35 வகையான சிறு மற்றும் குறு தானியங்கள் மட்டுமே தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது

சிறு மற்றும் குறு தானியங்கள்  மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி நீரிழிவு நோய் நிகழா வண்ணம் நம்மை பாதுகாக்கிறது. தமிழகத்தில் 45% சதவிகிதத்திற்கு மேலான பெண்கள்  மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக பல்வேறு சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றைப் போக்க மாநிலத்திட்டக்குழு தனது ஐந்தாண்டு திட்ட அறிக்கையில் சிறுதானியப் பயிர்கள்  உற்பத்தியை ஊக்குவிக்கவும் சிறு தானியங்களிலிருந்து மாவு, பிஸ்கட், ரவை, மற்றும் அவல் போன்ற மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்புக்கு ஊக்கம் அளித்தும் சிறு தானியங்களின் அறுவடை பின் சார் நேர்த்திக்கு முக்கியத்துவம் அளித்தும் வருகிறது.

சிறுதானிய வளர் பரப்பளவு குறைகிறது. 50 ஆண்டுகால பயிர் சாகுபடி பரப்பினை ஆராயும் போது தமிழகத்தில் சிறு தானியங்கள் பயிரிடும் பரப்பளவு குறைந்து கொண்டே வருவது தெளிவாகத் தெரிகிறது. சோளப் பயிரின் பரப்பளவு 7.74 லட்சம் ஹெக்டேரிலிருந்து 2.43 லட்சம் ஹெக்டேராகவும் கம்பு பயிரிடும் பரப்பு 4.89 லட்சம் ஹெக்டேரிலிருந்து 0.45 லட்சம் ஹெக்டேராகவும், கேழ்வரகு பயிரிடும் பரப்பளவு 3.36 லட்சம் ஹெக்டேராகவும், கேழ்வரகு பயிரிடும் பரப்பளவு 3.36 லட்சம் ஹெக்டேரிலிருந்து 0.76 லட்சம் ஹெக்டேராகவும் குறைந்துள்ளது. தனிநபர் வாங்கும் திறன் அதிகரிப்பு, பெருகிவரும் நகரமயமாதல் மற்றும் அரிசி உணவின் மீதான ஈடுபாடு அதிகரித்தல் ஆகியவை சிறுதானியங்கள் விளையும் பரப்பளவு குறைவதற்கான காரணங்கள் ஆகும். சிறு தானியங்களை நேரடி உணவாக உட்கொள்ளுவதற்கான தேவை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் சில்லறை வணிகத்தில் சிறுதானியங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்புகூட்டுப் பொருட்கள் மற்றும் ஊட்ட மிகு உணவு பொருட்களின் பங்கு உயர்ந்து கொண்டே வருகிறது, சிறு தானியங்கள் உணவுக்கு மட்டுமின்றி சிறந்த, கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சிறு தானியங்களில் மிகுதியான தாதுப்பொருட்கள், உயிர்சத்துகள் நார் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் அடங்கி இருப்பதால் இவை சிறந்த ஆரோக்கியத்திற்கான உணவாக கருதப்படுகிறது.  சிறு தானியங்களின் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் மாநிலத் திட்டக்குழு தமிழகத்தில் சிறுதானிய அபிவிருத்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. சிறுதானியப் பயிர்களின் பரப்பளவை அதிகப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகமும் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி வருகிறது. இந்த இதழில் கம்பு மற்றும் தினை சாகுபடி முறைகள்  குறித்து காண்போம்.

கம்பு

சிறுதானியப் பயிர்களில், கம்பு மிகவும் முக்கியமான சத்து மிகுந்த உணவுப் பயிராகும். இது தமிழ்நாட்டில் நெல், கோதுமை, சோளம், ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக பயிரிடப்படும் உணவுப் பயிராகும். கம்பு குறைந்த நீர்வளம், மண்வளம் உள்ள இடங்களில் செழித்து வளரக்கூடியது உணவுத் தன்மையிலும் மற்ற தானியங்களைவிட அதிகமான, தரமான சத்துப் பொருட்களை பெற்றுள்ளது. கம்பு தானியமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த தீவனப் பயிராகவும் விளங்குகின்றது. அரிசியை மட்டுமே உட்கொள்வதால் வரும் உணவுச் சத்து குறைபாட்டை போக்க கம்பு இன்றியமையாத பயிராகும். கம்பு தானியம் அதிகமான அளவில் உணவுச் சத்துகனைப் பெற்று உணவுச் சத்து தரத்தில் முதன்மைப் பெற்று விளங்குகின்றது. மற்ற தானியங்களைவிட கம்பு அதிகப் புரதச்சத்து மட்டுமல்லாது அமினோ அமிலங்களையும் அதிகம் பெற்று தரம் வாய்ந்ததாக விளங்குகின்றது. போதிய அளவு மாவுச் சத்தும், அதிக ருசியைக் கொடுக்க கூடிய கொழுப்பும், வைட்டமின்களும், தாது உப்புகளும் இத்தானியத்தில் நிறைந்துள்ளது. மேலும், இரத்த அபிவிருத்திக்காண இரும்புச்சத்து மற்ற தானியங்களைவிட இதில் அதிக அளவு உள்ளது.  கம்பு குறைந்த இடுபொருளில் மானாவாரியிலும், இறவையிலும் நல்ல விளைச்சலைத் தருகின்றது. தற்காலத்தில் நிலவும் நீர் பற்றாக்குறையால் ஏற்படும் வறட்சியையும், அதிக வெப்பமான சூழ்நிலைகளையும் தாங்கும் தன்மை கொண்டது. கம்பு குறுகிய காலப்பயிராகவே பெரும்பாலும் பயிரினை நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம். கம்பு இரகங்கள்  மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் கம்பு பயிரினைச் சாகுபடி செய்வதற்கு முன்பு சிறந்த உயர்விளைச்சல் தரக்கூடிய இரகங்கள்  அல்லது வீரிய ஒட்டு இரகங்களை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

சிறுதானியத் துறையில, கம்பு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, பல இரகங்கள்  மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள்  வெளியிடப்பட்டுள்ளன.

கோ (சியு) 9

கம்பில் கோ (சியு) 9 என்ற இரகம் புதிதாக வெளியிடப்பட்ட அதிக விளைச்சலை அளிக்கக் கூடியது ஆகும். இந்த இரகம் இறவையில், சராசரியாக ஒரு ஹெக்டருக்கு 2865 கிலோ விளைச்சலும், மானாவாரியல் 1950 கிலோ விளைச்சலும் கொடுத்துள்ளது. இந்த இரகம் அடிச்சாம்பல் நோய்க்கு எதிர்ப்புத் முதிர்ச்சியடையும் தன்மை கொண்டது.

நீளமான கதிர்கள் மற்றும் அதிக அளவு புரதச் சத்தினைக் கொண்டுள்ளது. டி.என்.ஏ.யு.கம்பு வீரிய ஒட்டு இரகம் கோ9 மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் டி.என்.ஏ.யு. வீரிய ஒட்டு கம்பு கோ 9 என்ற புதிய வீரிய ஒட்டு இரகம் கண்டறியப்பட்டு 2011 ஆம் ஆண்டு சாகுபடி செய்வதற்கு வெளியிடப்பட்டது. இது இறவையில், சராசரியாக ஒரு எக்டருக்கு 3728 கிலோவும், மானாவாரியில் 2707 கிலோ விளைச்சலும் அளிக்க வல்லது. இந்த இரகம் குறுகிய காலத்தில் முதிர்ச்சியடையும் தன்மையுடையது (70&75 நாட்கள்), மேலும் இந்த வீரிய ஒட்டு இரகம் அடிச் சாம்பல் மற்றும் துரு நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டுள்ளது. அதிக இரும்புச் சத்தினையும், நெருக்கமான பெரிய மணிகளையும் உடைய இரகம் ஆகும்.

சாகுபடி குறிப்புகள் பருவம்

கோ (சியு) 9 இரகம் மற்றும் டி.என்.ஏ.யு. வீரிய ஒட்டு கம்பு கோ 9 ஆகியவை மானாவாரி மற்றும் இறவையில் பயிரிடுவதற்கு ஏற்றதாகும்.  மேலும், இந்த இரகங்களை மானாவாரியில் ஆடிப்பட்டம் மற்றும் புரட்டாசிப் பட்டத்திலும், இறவையில் மாசிப்பட்டம் மற்றும் சித்திரைப் பட்டங்களில் பயிரிடலாம்.

விதையளவு

ஒரு எக்டருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதைப்பு முறை பொறுத்து விதை அளவு மாறுபடும். சால் விதைப்பு பரவலாக நடைமுறையில் உள்ளது.

விதைநேர்த்தி

ஒரு கிலோ விதையுடன் மெட்டலாக்ஸில் 6 கிராம் என்ற விகித்தில் விதைப்பதற்கு 24 மணி நேரம்

பயிரிடும் முறை

இரண்டில் ஒரு பாகம் தலைச்சத்தையும், முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள தழைச்சத்தை விதைத்த 30 ஆம் நாள் மேலுரமாக இட வேண்டும்

இறவை & வீரிய ஒட்டு இரகம்

இரண்டில் ஒரு பாகம் தலைச்சத்தையும், முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள தழைச்சத்தை விதைத்த 30 ஆம் நாள் மேலுரமாக இட வேண்டும்

நேரத்திற்கு முன்னதாக கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பதற்கு சற்று முன்பு அசோஸ்பைரில்லம் கலந்து பின்பு விதைக்க வேண்டும்.

விதைப்பு

வரிசைக்கு வரிசை 45 செ.மீ., செடிக்கு செடி 15 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும்.

பயிர் களைப்பு

கம்பு விதைத்த 2 வது வாரத்தில் களையெடுக்கும் சமயத்தில் பயிருக்கு பயிர் 15 செ.மீ இடைவெளி இருக்குமாறு பயிர்களைக் களைத்து பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.

களை நிர்வாகம்

பொதுவாக விதைத்த 15 வது மற்றும் 30 வது நாளில் களையெடுக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

நீர்ப்பாசனம் 7 & 10 நாள்களுக்கு ஒரு முறை கொடுக்கவும்.

பயிர்ப்பாதுகாப்பு குருத்து ஈ

குருத்து ஈக்களை’ கட்டுப்படுத்த 5 சத வேப்பங்கொட்டைச் சாறு (அ) ஒரு சத நீம் அசால் தெளிக்க வேண்டும்.

கதிர் நாவாள் ப்பூச்சி

கதிர்நாவாய்ப் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க 25 கிலோ கார்பரில் 10 சத தூள்  (அ) மாலத்தியான் 5 சத தூள்  50 சதம் பூவெடுக்கும் சமயத்தில் தூவ வேண்டும்.

அடிச்சாம்பல் நோய்

அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த எக்டருக்கு 500 கிராம் மெட்டாலாக்ஸில் (அ) 1000 கிராம் மேன்கோசெப் தெளிக்க வேண்டும்.

துருநோய்

துரு நோயைக் கட்டுப்படுத்த எக்டருக்கு நனையும் கந்தகம் 2.5 கிலோ (அ) மேன் கோசெப் 1 கிலோ தெளிக்க வேண்டும். தேவையெனில் பத்து நாள்கள் இடைவெளியில் மற்றொரு முறை தெளிக்க வேண்டும்.

அறுவடை

இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தைத் தரும். தானியங்கள் கடினமாகும். கதிர்களை தனியாக அறுவடை செய்யவும். தட்டை ஒரு வாரம் கழித்து வெட்டி நன்கு காய வைத்த பின் சேமித்து வைக்கவும்.

தினை

நமக்கு மட்டும் தேனும் தினைமாவும் தெவிட்டாத பண்டமல்ல, அலங்காரப் பறவைகளுக்கும் ஏற்ற தீவனம். மானாவாரியில் தினைப் பயிரை தீவிரமாக பயிரிட்டால், ஒரு பணப்பயிரைப் போன்ற இலாபம் ஈட்டலாம். முன்னோர்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து கிடந்தவை சிறுதானியங்கள் . இவற்றுள் தினைப்பயிர் மக்களின் முக்கிய சடங்குகளில் இன்றளவும் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு மனிதர்களுக்கு மட்டுமல்லாது, இனிமையான இசையை ஏற்படுத்தும் குருவிகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன.

மலைவாழ் மக்களால் பெரிதும் பயிரிடப்படும் இரகங்கள் வயது (நாட்கள்) யூரினிய விளைச்சல் (கிலோ/எக்டர்) சிறப்புப்பண்புகள் கோ&6 85&90 1500&1700 இறைவை மற்றும் மானாவாரியில் பயிர் செய்ய ஏற்றதாகும்.

கோ (தி) 7 85 & 90, 1900 & 2000 அதிக விளைச்சலைத் தரும் இறைவை மற்றும் மானாவாரியல் பயிர் செய்ய ஏற்றதாகும். விரும்பி பயிரிடப்படும் தினை கடினமாக வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது. தினை, தமிழ்நாட்டில் பெரும்பாலும் மானாவாரியாகவே பயிரிடப்படுகின்றது. குறிப்பாக சேலம், ஈரோடு, கோவை, திண்டுக்கல், மதுரை திருநெல்வேலி மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றது. தினையில் உள்ள சத்துக்கள்  நாம் அன்றாட உணவில் பயன்படுத்தி வரும் நெல்லரிசி மற்றும் கோதுமையில் உள்ளதைவிட அதிகமானவை.

இரகங்கள்

உயிர் விளைச்சலைத் தரகூடிய இரகத்தினைப் பயன்படுத்தும் போது அதிக விளைச்சலைப் பெறலாம். அதிலும் குறிப்பாக கோ(தி) 7 என்ற தினை இரகத்தினைப் பயன்படுத்தும் போது நல்ல விளைச்சலைப் பெறலாம்.

பருவம்

ஆடி மற்றும் புரட்டாசிப்பட்டம்

நிலம் தாயாரித்தல்

செம்மண் மற்றும் இருமண் கலந்த நிலங்கள் உகந்ததாகும். கோடை மழையைப் பயன்படுத்தி பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பை கொண்டு அழமாக உழவு செய்ய வேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன், கோடை மழையில் இருக்கும் கூட்டுப் புழுக்கள் உழவின் போது மேலே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க் காலத்தில் பூச்சித் தாக்குதல் குறையும்.

விதையளவு

வரிசை விதைப்பு : 10 கிலோ/ எக்டர்  தூவுவதற்கு : 12.5 கிலோ/ எக்டர்

இடைவெளி

வரிசைக்கு வரிசை 25 செ.மீ

செடிக்கு செ.டி 10 செ.மீ.

விதையும் விதைப்பும்

கைவிதைப்பு அல்லது விதைப்பான் கருவி கொண்டு வரிசை விதைப்பு செய்யலாம் இப்படி செய்வதால் அதிகப் பரப்பளவில் மண் ஈரம் காயும் முன்பே விதையை விதைத்து முடிக்கலாம்.

நுண்ணுயிர் உரங்களைக் கொண்டு விதை நேர்த்தி

ஒரு எக்டருக்குத் தேவையான விதையளவிற்கு 3 பொட்டலம் (600 கிராம்) அஸோபாஸை அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு எக்டருக்கு 10 பொட்டலம் (2000கிராம்) அஸோபாஸை 25 கிலோ மணல் மற்றும் 25 கிலோ தொழுஉரம் கலந்து தூவ வேண்டும்.

உரமிடுதல்

ஒரு எக்டர் நிலத்தில் அடியுரமாக 12.5 டன் மக்கிய தொழுஉரத்தை கடைசி உழவின் போது பரப்பி பிறகு நிலத்தை உழ வேண்டும். பின்னர் 20 கிலோ தழைச்சத்து மற்றும் 20 கிலோ மணிச்சத்து ஆகியவற்றை விதைப்பின் போது அடியுரமாக இடவேண்டும். மேலுரமாக 20 கிலோ தழைச்சத்தை விதைத்த 20 & 25 நாட்கள் கழித்து கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி இடவேண்டும்.

களை நிர்வாகம்

விதைத்த 18&20 ஆம் நாள் ஒரு களை எடுத்தல் அவசியம். பின்னர் 40 ஆம் நாளில் தேவைப்பட்டால் இன்னொரு களையும் எடுக்கலாம்.

பயிர்களைத்தல்

விதைத்த 18 & 20 ஆம் நாளில் செடிகளைக் களைத்து, தேவையான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

இந்த பயிரை பொதுவாக பூச்சிகள மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. ஆதலால் பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அறுவடையும் விளைச்சலும்

கதிர்கள் நன்கு காய்ந்து, இலைகள் பழுத்தவுடன் அறுவடை செய்து களத்தில் காயவைத்து அடித்து தானியங்களைப் பிரித்து சுத்தம் செய்தல் வேண்டும். உயர் விளைச்சல் இரகங்களைப் பயன்படுத்துவதாலும், சீரிய சாகுபடிக் குறிப்புகளைக் கடைபிடிப்பதாலும் தோராயமாக எக்டருக்கு 1855 கிலோ தானிய விளைச்சலையும் 5500 கிலோ தட்டை விளைச்சலையும் பெறலாம். இவ்வாறு கிடைத்த தானியத்தைச் சாக்குப்பைகளில் வைத்து நீண்டகாலம் சேமிக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories