சப்போட்டா சாகுபடி

ஜூலை-ஆகஸ்ட் பருவங்கள் சாகுபடிக்கு ஏற்றது.

சப்போட்டா எந்த வகை மண்ணிலும் செழித்து வளரக்கூடியது. நல்ல வடிகால் வசதி மன் ஏற்றது. வண்டல் மண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தது.

சாகுபடி செய்ய தேர்வு செய்த நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும் .பிறகு அதில் 8 மீட்டர் இடைவெளியில் 60 சென்டி மீட்டர் நீளம் அகலம் என்ற அளவில் குழிகள் எடுக்க வேண்டும். ஒரு கிலோ மக்கிய தொழு உரம் ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு மேல் மண் போட்டு பத்து நாட்களுக்கு ஆற விட வேண்டும்.

ஒட்டுக் கட்டிய செடிகள் தான் நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.

ஒட்டுக் கட்டிய கன்றுகளை குழியின் நடுவில் ஒட்டுப் பகுதி தரைமட்டத்தில் இருந்து அரை அடி உயரத்தில் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும் .பிறகு குச்சி நட்டு தளர்வாக கட்டி விட வேண்டும் .இதனால் செடிகள் சாய்ந்து விடாமல் பாதுகாக்கப்படும்.

செடி நட்ட உடன் நீர் பாய்ச்ச வேண்டும் .மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். பிறகு ஒரு வாரம் அல்லது 10 நாள் இடைவெளியில் தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories