#சம்மங்கி சாகுபடி செய்த விவசாயின் அனுபவம்

#சம்மங்கி சாகுபடி செய்த விவசாயின் அனுபவம்
விவசாயி – முருகேசன்
கடந்;த மூன்று வருடங்களாக ஒரு ஏக்கர் சம்மங்கி நடவு செய்தள்ளேன். எனக்கு சம்மங்கி நடவு செய்துள்ளதால் நல்ல லாபம்தான். தற்பொழுது இவற்றில் மாவுப்பூச்சியின் தாக்குதல் இருக்கிறது மாவுப்பூச்சி தாக்குதல் உள்ள இலையை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.
அரிவாள்மணை இலை அரைக்கிலோவை 2 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும் கொதித்தும் ஒரு லிட்டர் ஆக சுண்டவும் இறக்கி ஆறவைத்து அவற்றுடன் 10 கிராம் பெருங்காயம் சேர்த்து கரைத்து 10 லிட்டர் தண்ணீருக்கு (ஒரு டேங்) அளவில் கலந்து பயன்படுத்தினால் மாவுப்பூச்சி குறையும்.
தாவர இலைச்சாறு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி என்ற அளவில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளித்து கட்டுப்படுத்தலாம்
இரசாயன முறையில் அசிப்பேட் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் புரப்பனாபாஸ் 2மில்லி (ஒட்டும் பசை கலந்து) கலந்து தெளிக்கலாம்
பூ வெள்ளை இல்லாமல் மங்கலாக இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு போரான் 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம் அல்லது
கால்சியம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்
திண்டுக்கல் பூ சந்தையில் அதிகாலை 6 மணிக்கு கொண்டு சென்றால் நல்ல விலை கிடைக்கும்
முகூர்த்த நாட்களில் நல்ல விலை கிடைக்கும் வேலைகளும் குறைவுதான் எனவே விவசாயிகள் சம்மங்கி நடவு செய்து நல்ல லாபம் பெறவும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories