சாமை கோ-4 ரகத்தில் 2000 கிலோ மகசூல் கிடைக்க என்ன செய்யலாம்?…

ஒரு காலத்தில் நம் மக்களின் முக்கிய உணவுப் பொருட்களாக இடம் பற்றிருந்த தானியப் பயிர்களான ராகி, கம்பு, கேழ்வரகு, சாமை, திணை, பனிவரகு போன்றவை தான்.

பாலிஸ் செய்த அரிசி இரகங்களை பயன்படுத்த ஆரம்பித்தபிறகு தானியப் பயிர்களை மெல்ல, மெல்ல மறந்து போனோம். தானியப் பயிர்களை பயன்படுத்தி வந்த காலங்களில் சர்க்கரை, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற நோயின் தாக்கம் வெகுவாக குறைந்திருந்தது.

மக்களிடம் குறைந்து போன தானியப் பயிர்களின் முக்கியத்துவதையும், தானியப் பயிர்களின் சாகுபடியைப் பெருக்க வேண்டியதன் அவசியம் நம் அனைவருக்கும் உண்டு.

மானாவாரி பயிரான சாமை கோ-4 பயிர் விதைத்த 75 நாட்களிலிருந்து 80 நாட்களில் அறுவடை செய்ய முடியும். சாமை சாகுபடிக்கு ஆடிப்பட்டம் சிறந்ததாக கருதப்படுகிறது.

ஒரு ஹெக்டேரில் 1600 கிலோ தானிய மகசூலாகவும், தட்டை மகசூலாக 5800 கிலோவும் விளைச்சலாகக் கிடைக்கிறது. வறட்சியைத் தாங்கி வளரும் சாமை இருபோக பயிர் சுழற்சிக்கு ஏற்றது.

காற்று, மழையைத் தாங்கி சாயாத தன்மையுடன் விளங்கும் பயிராக சாமை விளங்குகிறது.

தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும், வடகிழக்கு பருவ மழை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலும் கோ-4 சாமை ரகங்களை விதைக்கலாம்.

இதுதவிர பையூர்-2 சாமை ரகங்களையும் விதைக்கலாம். இவ்வகை விதைகளை ஒரு ஹெக்டேருக்கு கைவிதைப்பு மூலம் 12.5 கிலோவும், கொர்ரு மற்றும் விதைப்பான் மூலம் ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ விதைகளை பயன்படுத்தலாம்.

ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் அல்லது கார்பன்டாசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். நிலத்தை இரும்பு கலப்பை கொண்டு நன்கு உழுத பிறகு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் ஒரு ஹெக்டேருக்கு 12.5 டன் தொழு உரம் இட வேண்டும்.

மேலும் ஹெக்டேருக்கு அடியுரம் மற்றும் மேலுரமாக தழைச்சத்து தலா 22 கிலோவும், மணிச்சத்து அடியுரமாக மட்டும் 22 கிலோவும், இட வேண்டும். முதல் களை 15 நாட்களில் எடுக்கவும், இரண்டாவது களை 40 நாட்களிலும் எடுக்க வேண்டும். அளவுக்கதிகமான செடிகளை 20 நாட்களுக்குள் நீக்க வேண்டும்.

இவ்வாறு மகசூல் செய்வதன் மூலம் ஒரு ஹெக்டேரில் சாமை கோ-4 ரகங்களில் தானிய மகசூல் மூலம் 1600 முதல் 2000 கிலோவும், தட்டையின் மகசூல் மூலம் 3000 முதல் 5000 கிலோவும் மகசூல் கிடைக்கும். பையூர்-2 சாமை ரகத்தில் ஹெடேருக்கு 850 கிலோ வீதம் மகசூல் கிடைக்கும்.

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories