சிறுதானிய பயிர்களில் முக்கியமானது குதிரைவாலி

சிறுதானிய பயிர்களில் முக்கியமானது குதிரைவாலி
விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் பயிர்களில் சிறுதானியங்களும் குதிரைவாலி முக்கியமானவை.
தொடர்ந்து சிறுதானியங்களை விடாமல் பயிர் செய்து பாரம்பர்யத்தைக் காத்து வரும் விவசாயிகளும் தற்போது பரவலான கிராமங்களில் குதிரைவாலி பயிரிட்டு வரும் விவசாயிகளும் உள்ளனர்.
குதிரைவாலி பயிரை சாகுபடி செய்தால் செலவு குறைவு கூடுதல் லாபம் கிடைக்க பயிரிடலாம்
லேசான மழை பெய்தால் பொதுமானது இவற்றை மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்கிறார்ககள் .
கிணற்றுப் பாசனம் உள்ளவர்கள் தங்களது நிலங்களில் குறுகிய காலப் பயிர்களை பயிரிட ஆரம்பித்துள்ளனர்.
குறுகிய காலப்பயிரில் கூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி பயிரிடலாம்
குதிரைவாலி பயிரிட கோ 1, கோ (கேவி)2 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும்.
இறவையாக சித்திரை மற்றும் ஆடிப் பட்டங்களிலும், மானாவாரியாக ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டங்களிலும் குதிரை வாலியைப் பயிரிடலாம்.
கை விதைப்பு முறையாக இருந்தால் 6 கிலோ விதையும், விதைப்பான் கொண்டு வரிசை விதைப்பாக இருந்தால் 5 கிலோ விதையும் பயன்படுத்த வேண்டும்.
இடைவெளி 10 சென்டிமீட்டருக்கு 10 சென்டிமீட்டர் என்று இருக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பி, பின் உழ வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு முறையே 20 கிலோ தழை மற்றும் சாம்பல் சத்துகளைப் பரிந்துரைக்கப்பட்ட அளவில் இட வேண்டும்.
வரிசை விதைப்பு செய்திருந்தால் கை களையும் எடுக்க வேண்டும்.
சரியான பருவத்தில் விதைக்கும்போது எந்த வகை பூச்சி மற்றும் பூஞ்சாணமும் அதிகமாக இந்தப் பயிரை தாக்குவதில்லை.
இலைக்கருகல் நோய்:
சிறு இளஞ்சிகப்பு புள்ளிகள் இலையில் தோன்றும். பின்பு இலையின் அனைத்துப்பகுதியும் கருகி விடும். நுனியில் கருகி கீழ்நோக்கி தாக்கம் அதிகரிப்பதால் இலையின் நுனிப்பரப்பு கருகி மடிந்து விடுகிறது.
தடுக்கும் முறைகள்: சிறு தானியப்பயிர்களில் பெரும்பாலும் விதை மூலம் மற்றும் சிறிய அளவில் மண் மூலம் தாக்கும் நோய்களே தாக்குகிறது.
இதனால் கீழ்க்கண்ட முறைகளைக் கையாள வேண்டும்.
சிறு தானிய விதைகளை டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ்
விதை ஏக்கருக்கு 6 கிலோவை 15 கிலோ சாண உரம் அல்லது 10 கிலோ மணலில் கலந்து கடைசி உழவின் போது இட வேண்டும்.
பூஞ்சாணக்கொல்லிகள்- 2 கிராம் கார்பென்டாசிமை 1 கிலோ விதையில் கலந்து விதைக்கவும்.
நோய்கள் பெரிய அளவில் மகசூல் இழப்பைத் தருவதில்லை.
அதனால் மானாவாரியில் சிறுதானியப் பயிர்களைப் பயிரிட்டு குறைந்த நாளில் அதிக மகசூலைப் பெறலாம்.
அறுவடை:
முற்றிய கதிர்களை அறுவடை செய்து, களத்தில் காய வைத்து அடித்து தானியங்களைப் பிரித்தெடுக்கவும்.
சிறு தானிய அரிசியிலிருந்து நம் பாரம்பரிய உணவுகள் செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
இவற்றிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்களும் செய்யலாம்.
சிறு தானியத்திலிருந்து ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகள் தயாரிப்பதால் சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.
குதிரைவாலி அடித்த பிறகு அதன் தட்டையையும் நன்கு உலர்த்தி சேமித்து வைத்தால் ஆண்டும் முழுவதும் கால்நடைகளுக்குத் தீவனமாகத் தரலாம்.
தற்பொழுது குதிரைவாலி கதிர் அறுவடைக்கு தயாராக இருக்கிறது
அவற்றை தகுந்த நேரத்தில் அறுவடைசெய்து சேதாரம் இல்லாமல் பாதகாக்கவும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories