சூரியகாந்தி பயன்கள் மற்றும் சாகுபடி குறிப்புகள்

சூரியகாந்தி பயன்கள் மற்றும் சாகுபடி குறிப்புகள்
சூரியகாந்தி விதைகளில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் துத்தநாக சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பயன்படுகிறது. பாஸ்பரஸ் சத்து இதய தசைகளை சுருக்கவும், சிறுநீரக செயல்களை சீராக்கவும் பயன்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய்யில் உள்ள விட்டமின் ஈ இதயம், வாஸ்குலார், மூளை மற்றும் நரம்பு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.
சாகுபடி குறிப்புகள்
சூரியகாந்தி விதையளவு
சாதா ரகம் 3 கிலோ ஒரு ஏக்கருக்கு ஒட்டுரகம் 2 கிலோ, ஒரு ஏக்கருக்கு தேவைப்படும்
விதைப்புக்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
வீரிய ஒட்டு ரகமாக இருந்தால் ஒரு நாள் ஊரவைத்து அந்த விதையை எடுத்து 200 கிராம் அசோஸ் பைரில்லம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியா 200 கிராம், டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் மூன்றையும் கலந்து நிழலில் உலர்த்தி நடவு செய்ய வேண்டும். நட்ட உடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இல்லை என்றால் விதையை எறும்பு அரித்து முளைப்புத்திறன் குறையை வாய்ப்பள்ளது
விதை நேர்த்தி செய்வது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும், முளைப்புத் திறனை மேம்படுத்தவும் உதவும். மேலும் ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து மேலாண்மையில் உயிர் உரமாக தழை, மணி, சாம்பல் சத்துக்களை தேவையான அளவில் போடலாம் சூரியகாந்தி பூக்களை பொறுத்தவரை மகரந்த சேர்க்கை மிக முக்கிய இடம் பிடிக்கிறது
சூரியகாந்தி சாகுபடியை பொறுத்தவரை ஆடிப் பட்டம், கார்த்திகை பட்டம் ஆகிய இரு பட்டங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யலாம். இறவை பாசனத்தில் மார்கழி பட்டம் மற்றும் சித்திரை பட்டங்களில் சாகுபடி மேற்கொள்ளலாம். ஆண்டுக்கு 4 பட்டங்களில் சூரியகாந்தி சாகுபடி செய்யலாம். பட்டத்துக்கு தகுந்தாற் போல விதைகளை தேர்வு செய்வது அவசியமாகும்
வீரிய ஒட்டு ரகங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் அவை நோய் எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும், அதிக மகசூல் தரக்கூடியவையாகவும் உள்ளன. விதைப்புக்கு முன் விதை நேர்த்தி செய்வது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும், முளைப்புத் திறனை மேம்படுத்தவும் உதவும்.
செயற்கை மகரந்தச் சேர்க்கை
ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து மேலாண்மையில் உயிர் உரமாக தழை, மணி, சாம்பல் சத்துக்களை தேவையான அளவில் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டிரியா, பொட்டாஷ் பாக்டிரியா போன்ற உயிர் உரங்களை பயன்படுத்தலாம்.
சூரியகாந்தி பூக்களை பொறுத்தவரை மகரந்த சேர்க்கை மிக முக்கிய இடம் பிடிக்கிறது. நன்றாக மணிகள் பிடிப்பதற்கு மகரந்த சேர்க்கை உதவுகிறது.தற்போது தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் நாமே செயற்கையாக மகரந்த சேர்க்கை செய்யலாம்
பூக்கொண்டைகளை ஒன்றோடொன்று லேசாக தேய்த்து விடுவது நல்ல பலன் தரும். சூரியகாந்தியைப் பொறுத்தவரை 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். ஆனால் மணிகள் முற்றும் தருணத்தில் கிளிகளிடமிருந்து பாதுகாப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது.
கிளிகளுக்கு மிகவும் பிடித்த உணவாக சூரியகாந்தி விதைகள் உள்ளது. எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்டம் கூட்டமாக கிளிகள் படையெடுக்கும்.அவற்றை தட்டுகள் மற்றும் தகரங்களில் தட்டி ஓசையெழுப்பி விரட்டுவோம்.மேலும் தற்போது அறுவடைக்குப் போதிய ஆட்கள் கிடைக்காததால் எந்திரங்கள் மூலமே அறுவடை மேற்கொள்ள வேண்டியதுள்ளது.ஒரு ஏக்கருக்கு 750 கிலோ முதல் 900 கிலோ வரை மகசூல் கிடைக்கும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories