செம்மை கரும்பு சாகுபடி

நோக்கம்
முக்கிய கொள்கைகள்
சாகுபடி நோக்குகள்
நடவு வயல் தயாரிப்பு
சால்கள் மற்றும் பார்கள் அமைத்தல்
இயற்கை முறை சாகுபடி
நீர் மேலாண்மை
முடிவுரை

நோக்கம்

கரும்பு உற்பத்தியின் மற்றொரு செயல்முறை நோக்கம்தான் “செம்மை கரும்பு சாகுபடி”. வேளாண்மையில் திருந்திய நெல் சாகுபடி (எஸ்.ஆர்.ஐ) திட்டத்தின் கொள்கையான “குறைவுடன் மிகுதி” என்ற கொள்கையை இத்திட்டம் சார்ந்துள்ளது. செம்மை கரும்பு சாகுபடி திட்டம் நீர், நிலம் மற்றும் வேலையாட்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது.  அதே சமயத்தில் நீர் வளங்களின்  மேல் உள்ள மொத்த அழுத்தத்தையும் குறைக்கின்றது.

கரும்பு உற்பத்தியின் நிலையான துவக்க முறையில், குறைவான விதைகளை உபயோகித்தல், குறைவான நீர் மற்றும் போதுமான உரங்களை பயன்படுத்தல், அதிக மகசூல் பெறுதல் ஆகிய செயல்களை உள்ளடக்குகிறது.  மேலும் மரபு வழி/ வழக்கத்திலுள்ள விதை, நீர் இடைவெளி தீவிர கரும்பு சாகுபடிக்கு மாறாக செம்மை கரும்பு சாகுபடி முறை செயல்படுகிறது என்பது விவசாயிகளின் கணிப்பு.

முக்கிய கொள்கைகள்

 • ஒரு அரும்புடைய கரணைகளைக் கொண்டு நாற்றங்கால் அமைக்க வேண்டும்.  (மரபு வழியில், 2-3 அரும்புகள் கொண்ட கரணைகளைப் பயன்படுத்தல்: பொதுவாக நாற்றங்கால் தயாரிப்பு முறை இல்லை.)
 • தரம் பிரிக்கப்பட்டபின் இளங்கரணைகளை (25-35 நாட்களான) நடவு செய்தல் (மரபு வழியில், 3 அரும்புகளுடைய கரணைகளை நேரடியாக நடுதல்). நாற்றங்கால் அமைத்து, தரம் பிரிக்கப்படுதலால் மரவு வழி சாகுபடியை விட இம்முறையில் பயிர் இறப்பு விகிதம் சற்றே குறைவாக உள்ளது.
 • நடவு வயலில் அகன்ற இடைவெளி ( 5 x 2 அடி) பாதுகாத்தலினால் 75 சதவிகிதம் விதை தேவையை குறைக்க முடிகிறது.  அதாவது ஏக்கருக்கு (16000, 3 அரும்புடைய கரணைகள்) 48,000 கரணைகளிலிருந்து, 5000 ஒரு அரும்பு  கரணைகளாக குறைந்துள்ளது.   (மரபு வழி இடைவெளி 1.5 x 2.5 அடி) அகன்ற இடைவெளி அமைப்பு பயிருக்கு எளிதான காற்று மற்றும் சூரிய ஒளி ஊடுறுவதலுக்கு வழிவகிக்கிறது.  இதனால் சிறந்த மற்றும் ஆரோக்கியமான கரும்பு வளர்ச்சி ஏற்படுகிறது.  மேலும் ஊடுசாகுபடி முறைகளும் எளிதாக செயல்பட முடிகிறது.
 • போதுமான ஈரத்தன்மையை வழங்கி, வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்கிறது.  இதனால் 40 சதவிகிதம் நீரை சேமிக்க முடிகிறது.  (மரபு வழியில், வெள்ளப்பெருக்கு ஏற்படும்).  ஒரு கிலோ கரும்பு உற்பத்திக்கு 2500 லிட்டர் நீரை பயிர்ச்செடி உட்கொள்கிறது.
 • இயற்கை முறை ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் பயிர்பாதுகாப்பை வலியுறுத்துகிறது.
 • ஊடுபயிர் சாகுபடி முறைகளை வழக்கப்படுத்துகிறது.  (அகன்ற இடைவெளி மற்றும் வெள்ளப்பெருக்கில்லாத),  இதனால் பயிர்கள் நிலத்தினை வெகுவாக பயன்படுத்திக் கொண்டு அதிக வருமானம் மற்றும் 60 சதவிகிதம் குறைந்த களைப்பயிர் வளர்ச்சியை அளிக்கிறது.
 • மேற்கூரிய முறைகளால், கரும்பின் நீளம் மற்றும் எடை அதிகமாகிறது.  குறைந்தது ஒரு பயிருக்கு 20-25 துார்கள் மற்றும் ஒரு பயிருக்கு  9-10 பல கரும்புகளையும் அளிக்கிறது.  இதுவே மரபுவழி சாகுபடியில் 10-15 துார்கள்/பயிர்  மற்றும் 4-5 பல கரும்புகள்/பயிர் அளவில் குறைவான உற்பத்தியே இருக்கும்.

சாகுபடி நோக்குகள்

பரு/அரும்பு தேர்ந்தெடுத்தல்

 • ஒரு கரும்புக்கு 10-12 பருக்கள் கொண்ட, 7-9 மாதங்களான நல்ல ஆரோக்கியமான கரும்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 • தேர்ந்தெடுக்கப்பட்ட கரும்புகளில் உள்ள பருக்களை பரு வெட்டுங்கருவியின் மூலம் அகற்ற வேண்டும்.
 • வெட்டிய பருக்களை இயற்கை அல்லது இரசாயனக் கரைசலில் போட்டு நேர்த்தி செய்ய வேண்டும்.
 • 1 ஏக்கருக்கு 450-500 கரும்புகள் தேவைப்படும்.

நாற்றங்கால் தயாரிப்பு

 • நன்கு மக்கிய கோகோ- தக்கையை எடுத்துக் கொள்ள வேண்டும்.  குழித்தட்டிலுள்ள ஒவ்வொரு கூம்பின் பாதிவரை கோ கோ- தக்கையால் நிரப்ப வேண்டும்.
 • குழித்தட்டிலுள்ள கூம்பில் பருக்களை தட்டையாக அல்லது சற்று சாய்ந்த நிலையில் வைக்க வேண்டும்.
 • அனைத்து பருத் துண்டுகளையும் முழுவதுமாக கோ கோ தக்கையால் மூடி விட வேண்டும்.
 • நீர், காற்று, சூரிய ஒளி ஆகியவை தட்டினுள் புகாதவாறு நன்கு இறுக்கமாக கட்டி நிழல் வலைக்குக்கீழ் வைக்க வேண்டும்.  ஏதாவது ஒரு அறைக்குள் வைப்பதும் சிறந்தது.
 • வானிலை மிகவும் குளிராக இருப்பின், மின் விளக்குகளைக் கொண்டு செயற்கை வெப்பம் அளிக்க வேண்டும்.  இதுவே நாற்றங்கால் மேலாண்மையின் முக்கிய நிலையாகும்.
 • முறையான நிலைகளில் (குறிப்பாக சூடான வெப்பநிலை) 3-5 நாட்களுக்குள், வெள்ளை வேர் (முன் வளர்ச்சி) தோன்றும்.  அடுத்த 2-3 நாட்களில் தண்டுகளும் தோன்றிவிடும்.
 • கோ கோ – தக்கையின் ஈரத்தன்மையைப் பொருத்து, தட்டுகளுக்கு (நாற்றுப்பயிர்கள்) அடுத்த 15 நாட்களுக்கும், பூவாளியைப் பயன்படுத்தி மாலை நேரத்தில் நீர் தெளிக்க வேண்டும்.
 • 6 இலைப் பருவத்தில் (20 நாட்களான பயிர்), தரம்பிரித்தல் மேற்கொள்ளலாம்.

 

 

 

நடவு வயல் தயாரிப்பு

உரம் இடுதல்

மரபு வழி முறை நடவு வயல் தயாரிப்பைப் போலவே செம்மை கரும்பு சாகுபடி முறையிலும் வயல் தயாரிக்கப்படுகிறது.  சிறந்த நிலம் தயாரிப்பு மேற்கொள்ள வேண்டும்.

எஞ்சிய துார்களை அகற்றுதல்

கரும்பின் வயல் தயாரிப்பு முறை, முன் பயிரின் எஞ்சிய பயிர்த்துார்களை அகற்றுவதிலிருந்து ஆரம்பமாகிறது.  பயிர்த்துார்களை சேகரித்து வயலிலிருந்து அகற்ற வேண்டும்.  அனைத்து எஞ்சிய துார்களையும் சுழல்கலப்பை கொண்டு மண்ணுள் புதைத்துவிட வேண்டும்.

நிலம் பண்படுத்தல்

டிராக்டரால் இயங்கப்படும் பண்ணைக் கருவிகளைக் கொண்டு நிலத்தை பண்படுத்தல் மிகவும் சிறந்தது.  மற்றும் விரைவானது.  முதல் 1 அல்லது 2 உழவுக்குப் பின்னர், அடுத்த பண்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பண்ணை 1 அல்லது 2 வாரங்கள் நன்று உலர விட வேண்டும்.

இயற்கை எரு இடுதல்: (கரிம எரு)

செம்மை கரும்பு சாகுபடி முறையானது கரிம எரு இடுதலை உற்சாகப்படுத்துகிறது. இதனால் மண்ணுக்கு பசுமை நட்பு முறையில் பெரு ஊட்டச்சத்து மற்றும் நுண்ஊட்டச்சத்தினை அளிக்கிறது.  மேலும், உகந்த அளவு இராசயன உரங்களை எடுத்துக் கொள்ளவும், மண் தரம் குறைத்தலிலிருந்து பாதுகாக்கவும், மற்ற தீங்கு விளைவுகளிலிருந்தும் மண்ணைப் பாதுகாக்கிறது.

சால்கள் மற்றும் பார்கள் அமைத்தல்

 • சால்களுக்கிடையே 5 அடி துாரம் இடைவெளிவிட்டு அமைக்க வேண்டும்.
 • ஆழக்கலப்பை பொருத்தப்பட்ட சால் அமைக்கும் கருவி/கலப்பையைப் பயன்படுத்தி மண்ணை தளர்த்தி விட வேண்டும்.
 • மண்ணை இழகச் செய்வதால், உரத்தை முறையாக மண்ணுள் செலுத்தவும், ஆழமான நடவு செய்யவும் உதவுகிறது.
 • மேலும் கரும்பு (தண்டு) சாய்தலைத் தடுக்கிறது.
 • கரும்பு பயிர் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து மேலாண்மை மிகவும் இன்றியமையாதது. மண் பரிசோதனை மூலம் மண்ணின் தன்மையை அறிந்து, தேவையான அளவு ஊட்டச்சத்தினை அறிந்து மண்ணை வளப்படுத்த முடிகிறது.  மண் பரிசோதனை வசதி இல்லையெனில், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்தினை ஒரு ஏக்கருக்கு 112 கிலோ, 25 கிலோ மற்றும் 48 கிலோ என்ற அளவில் இயற்கை அல்லது செயற்கை முறையில் அளிக்கலாம்.

நடவு செய்தல்

 • நாற்றங்காலிலிருந்து நடவு வயலுக்கு இளநாற்றுக்களை மாற்றி நடுவதற்கான தக்க வயது 25-35 நாட்கள்.
 • நாற்றுப் பயிரை நடும்போது, வளைவு நெளிவான நடவு முறைப் பின்பற்றினால், அதிக இடைவெளி மற்றும் மிகுந்து துார்களைப் பெறலாம்.
 • பயிருக்கு பயிர் 2 அடி அளவு துாரம் இருப்பின் எளிதாக சூரியஒளி ஊடுருவுதல் மற்றும் மிகுந்த துார்கள் உற்பத்தியைப் பெறலாம்.
 • மற்ற சாகுபடி முறைகள் அனைத்தும் மரபுவழி சாகுபடி முறையைப் போன்றது.

ஊடுபயிரிடுதல்

 • நிலையான கரும்பு துவக்க முறை கரும்பு சாகுபடியில் ஊடுபயிர் சாகுபடி முறையினை பரிந்துரைக்கிறது.  கோதுமை, உருளைக்கிழங்கு, தட்டைப்பயிறு, சீமைக் கொத்தவரை, கொண்டைக்கடலை, நீர்முலாம் பழம், கத்திரிக்காய் போன்ற பயிர்களை ஊடுபயிராக பயிரிடுதல்.
 • முறையான நில பயன்படுத்தலோடு, இம்முறை களை வளர்ச்சியை 60 சதவிகிதம் வரை குறைத்து, விவசாயிகளுக்கு அதிக வருமானத்தைக் கொடுக்கிறது.

 

 

 

களையெடுத்தல்

 • சிறந்த ஊட்டச்சத்து உட்கொள்ளுதலுக்கு களையில்லா சூழ்நிலை மிகவும் முக்கியமானது.  இச் சூழ்நிலையினை அடைவதற்கான வழிகள் பின்வருமாறு:
 • ஆழமான உழவு மற்றும் பல்லாண்டு களைச்செடிகளை அகற்றுதல்
 • நீண்ட கால நன்மைகளுக்கு, கைக்களைகள் மற்றும் இயந்திரக் களைகள் (நடவு செய்து 30, 60 மற்றும் 90 நாட்களில்) மிகவும் சிறந்தது.

நிலப்போர்வை: (மூடாக்கிடல்)

கரும்பு சாகுபடியில் களைகளைக் கட்டுப்படுத்தவும், போதுமான ஈரத்தன்மையை வழங்கவும், சருகு நிலப்போர்வை முக்கியமானது.  கரணை நடவு செய்த 3 நாட்களுக்குள் ஒரு ஏக்கருக்கு 1.5 டன் என்ற அளவில் கரும்பு சருகை போட வேண்டும்.  அதே போன்று சருகு உரித்தபின், உரித்த இலைகளை இடைவெளியில் போர்வையாக போடவேண்டும்.

இயற்கை முறை சாகுபடி

 • செம்மை கரும்பு சாகுபடி முறையானது, கரிம எரு (இயற்கை எரு) இடுதலை உற்சாகப்படுத்துகிறது.  இதனால் பசுமை முறையில், பெரு ஊட்டச்சத்து மற்றும் நுண் ஊட்டச்சத்தினை, அதிகப்படுத்துகிறது.  மேலும் உகந்த அளவு இராசாயன உரங்களை எடுத்து கொள்ளவும், மண் தரம் குறையாமல் பாதுகாக்கவும், மற்ற தீங்கு விளைவுகளிலிருந்தும் மண்ணைப் பாதுகாக்கிறது.
 • இயற்கை உரங்களான தொழு உரம்/மக்கிய எரு/நன்கு மக்கிய  கரும்பாலைக்கழிவு ஆகியவற்றை ஏக்கருக்கு (8-10 டன்கள்) என்ற அளவில் அளிக்க வேண்டும்.
 • தழைச்சத்தின் அளவைப் பொருத்து, இயற்கை எரு அளவினை சரிசெய்து கொள்ள வேண்டும்.  ஒன்று அல்லது பல வழிகளின் மூலம் ஏக்கருக்கு 112 கிலோ தழைச்சத்தினை வழங்க வேண்டும்.
 • சூடோமோனாஸ், ட்ரைகோடெர்மா மற்றும் மக்கும் வளர்ப்பு ஊடகம் ஆகியவற்றை (ஒவ்வொன்றும் 1 கிலோ/ஏக்கர்) கரிம எருவுடன் கலக்க வேண்டும்.  இம்முறையால் மண்வளம் அதிகரித்து அதிக மகசூல் பெற முடிகிறது.

நீர் மேலாண்மை

 • செம்மை கரும்பு சாகுபடி முறையில், அகன்ற இடைவெளி மற்றும் ஒற்றை நாற்று முறையானதால், சொட்டு நீர்ப் பாசன முறையை மேற்கொள்ளலாம்.
 • அதிக நீரைப் பயன்படுத்தி வெள்ளப்பாசனம் செய்வதை விட நேரத்திற்கு போதுமான அளவு நீர் பாய்ச்சி முறையான பாசனம் செய்வது சிறந்தது.
 • மரபு வழி வெள்ளப்பாசன முறையில், பயிரின் உயிரியல் தேவைக்கும் அதிகமாக நீர் அளிப்பதால், பயிர் வளர்ச்சி பாதிக்கிறது.
 • நடவிற்குப் பிறகு மண்ணின் வகை, பயிர் வயது, மழைப்பொழிவு மற்றும் ஈரத்தன்மையைப் பொருத்து பாசன அலைவெண் வேறுபடும்.  மணல் கலந்த மண்ணிற்கு அதிக பாசன அலைவெண் மற்றும் களிமண்ணிற்கு குறைந்த பாசன அலைவெண் தேவைப்படுகின்றது.
 • பயிர் துார்விடும் நிலையில் 10 நாட்களுக்கு ஒரு முறையும் (36-100 நாட்கள்) பெரும் வளர்ச்சிப் பருவத்தில் 7 நாட்களுக்கு ஒரு முறையும் (101-270 நாட்கள்) மற்றும் முதிர்ச்சிப் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறையும் (271 நாட்களிலிருந்து அறுவடை முடிய) பாசனம் செய்தல் வேண்டும்.
 • சால் பாசனம் செய்வதால் முறையான பாசனம் மற்றும் நீர் சேமிப்பு ஏற்படுகிறது. மாற்றுச்சால் பாசனம் என்பது ஒற்றைப்படை சால்களை முதலில் பாசனம் செய்து, பின் அதனைத் தொடர்ந்து 7-15 நாட்களுக்குப் பின்னர், மண்ணின் ஈரத்தன்மை மற்றும் பயிர் வயதினைப் பொருத்து இரட்டைப்படை சால்களுக்குப் பாசனம் செய்ய வேண்டும். இம்முறைப் பாசனத்தால் 50 சதவிகிதம் வரை நீர் சேமிப்பு செய்யலாம்.

மண் அணைத்தல்

 • வலிமையான பயிர் நிறுத்தத்திற்கு (பிடிப்பு) வேர் மண்டலத்தில் மண் இடுதல் முறையே மண் அணைத்தல் எனப்படுகிறது.
 • பயிர் காலத்தில் பொதுவாக இரண்டு முறை மண் அணைத்தல் (பகுதி மற்றும் முழுமையாக) மேற்கொள்ள வேண்டும்.
 • செம்மை கரும்பு சாகுபடி முறையில் கரும்பிற்கான நீர் வழி உரமிடுதல் அட்டவணை:
 • (பரிந்துரைக்கப்பட்ட உர அளவு) – 275:63:115 (தழைச்சத்து:மணிச்சத்து:சாம்பல் சத்து)   (கிலோ/எக்டர்)  (10 நாட்களுக்கு ஒரு முறை)
பயிர் நிலை
(நடவிற்குப் பின்)
கிலோ/எக்டர்
தழைச்சத்து மணிச்சத்து சாம்பல் சத்து
0-30 39.4 0 0
31-60 48.6 26.25 9
61-90 51.4 20.50 13.5
91-120 55.2 16.25 14.6
121-180 57.8 0 40.5
181-210 10.5 0 35.0
மொத்தம் 275.0 63.0 115.0

சொட்டு நீர் உரப்பாசனம் மேற்பரப்பு நீர் பாசனம் ஓர் ஒப்பீடு

விவரம் மேற்பரப்பு நீர் பாசனம் சொட்டு நீர் உரப்பாசனம்
பாசன நீர் தேவை 2200 மி.மீ 1000 மி.மீ
பாசன காலம் 250 நாட்கள் 250 நாட்கள்
பாசன இடைவேளை 7 நாட்கள் 1 நாள்
பாசனங்களின் எண்ணிக்கை 36 250
ஓவ்வொரு பாசனத்திற்கான நீர்த்தேவை (லி) 6.1 இலட்சம் 0.4 இலட்சம்
கரும்பு மகசூல் 92 – 105 டன் /எக்டர் 150 – 200 டன் /எக்டர்
உர உபயேகிப்பு திறன் 30 சதவிகிதம் 60 சதவிகிதம்
வரவு – செலவு விகிதம் 1.97 4.1

நிலையான கரும்பு துவக்க முறை மற்றும் மரபு வழி கரும்பு சாகுபடி முறை ஒப்பிடுதல்

விவரங்கள் மரபுவழி சாகுபடி முறை நிலையான கரும்புப் பயிர் துவக்க முறை
விதைகள்/கரணைகள் 48,000 அரும்புகள் (16,000 மூன்று பருக்கள் கொண்ட கரணைகள்) 5000 ஒற்றை அரும்புடைய கரணைகள் (5000 பருக்கள் /ஏக்கர்)
நாற்றங்கால் அமைப்பு இல்லை உண்டு
நடவு நடவு வயலில் கரணைகளை நேரடியாக நடுதல் பருயுடைய கரணை/துண்டுகளிலிருந்து வளர்ந்த இள நாற்றுக்களை 25-35 நாட்களில் நடவு செய்தல்
இடைவெளி வரிசைகளுக்கிடையே 1.5-2.5 அடி இடைவெளி வரிசைகளுக்கு இடையே 5 அடி இடைவெளி
நீர் தேவை அதிக அளவு (வெள்ளப் பாசனம்) குறைந்த அளவு (சால்களில் ஈரத்தன்மையை பராமரித்தல் மற்றும் சொட்டு நீர்ப்பாசன முறை அளித்தல்).
பயிர்களின் இறப்பு விகிதம் அதிகம் குறைவு
துார்களின் எண்ணிக்கை/பயிர் குறைவு (10-15) அதிகம் (15-20) (மிகுதி)
காற்று மற்றும் சூரிய ஒளி செயல்பாடு குறைவு அதிகம்
ஊடுபயிருக்கான வாய்ப்புகள் குறைவு அதிகம் (மிகுதி)

அறுவடை

கரும்பு தொழிற்துறையுடன் (ஆலை) ஒப்பந்தம் வைத்தே கரும்புப் பயிர் அறுவடை மேற்கொள்ளப்படுகிறது.  இதனால் கரும்பு ஆலைகளின் காலத்திற்கேற்றார்போல் அறுவடை செய்யமுடிகிறது.  1 வருட பயிர் காலத்தின் 10 வது மாதத்தில் பயிர் போதுமான அளவு சர்க்கரைத் தன்மையை அடைந்துவிடும்.  பின்பு அடுத்த 2 மாதத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும்.

 

 

 

 

மொத்த நலன்கள்

 • மரபு வழி முறையில் பயிர் சாகுபடி செலவில் பெரும்பங்கு வகிப்பது கரணையின் விலை.
 • நிலையான கரும்புப் பயிர் துவக்க முறையைப் பின்பற்றினால், விதைக்கான செலவை 75 சதவிகிதம் வரை குறைக்க முடியும்.
 • பயிர் இறப்பு விகிதம் குறைகிறது.
 • ஒவ்வொரு கரும்பின் நீளமும், எடையும் அதிகரிக்கிறது.
 • இளநாற்றுப் பயிர்களை நீண்ட துாரத்திற்கு, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்திச் செல்ல எளிதாக உள்ளது.
 • அகன்ற இடைவெளி இருப்பதால், ஊடுபயிர் சாகுபடி முறைகளை எளிதாக மேற்கொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில் செம்மை கரும்பு சாகுபடி முறையின் நோக்கம்

 • கரும்பு உற்பத்தித்திறனில் (> 100 டன்/எக்டர்) முதல் மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, செம்மை கரும்பு சாகுபடி முறைக்கு மிக நிறைவான ஆற்றலுடையது.  தமிழ்நாடு கரும்புத் துறையின் செம்மை கரும்பு சாகுபடி முறையின் பெரு விளைவுகளை முன்னறிவதற்கான  சில காரணிகளை பின்வருமாறு:
 • அனைத்து புதிய தொழில்நுட்பங்களை மிக ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும், ஒத்துழைப்போடும், சிந்திக்கும் திறனுடையவர்களாக விவசாயிகள் ஏற்றுக் கொண்டு செயல்படுத்துகின்றனர்.
 • தற்போதைய பிரச்சினைகளான அதிகமான விதையின் விலை, வேலையாட்கள் கூலி, மற்ற மண் வளப் பிரச்சினைகள் உற்பத்தித்திறன் குறைவு ஆகியவற்றை  சரிசெய்வதற்கு செம்மை கரும்பு சாகுபடி முறை சிறந்த வழியாகும்.
 • அகன்ற பயிர் இடைவெளியினால், ஊடுசாகுபடி செயல்கள் எளிதாகிறது.  மேலும் வேலையாட்களுக்கு இடையே ஏற்படும் நெருக்கடிகளைக் குறைக்கிறது.
 • செம்மை கரும்பு சாகுபடி முறை வலியுறுத்திய அகன்ற இடைவெளியால், இயந்திர அறுவடை செய்யும் கருவியை பயன்படுத்த முடிகிறது.  இம்முறை தமிழ்நாட்டின் சில ஆலைப்பரப்புகளில் முன்னரே வழக்கத்தில் இருந்து வருகிறது.

முடிவுரை

செம்மை கரும்பு சாகுபடி முறையில், குறைந்த கரணைகள், நீர், உகந்த நிலப் பயன்பாடு ஆகியவை உள்ளடங்கும். இதனால் அதிக மகசூல் பெற முடிகிறது. அதிக மகசூல் என்பது, ஒரு அரும்பு துண்டுகளை பயன்படுத்தல், நாற்றங்கால் அமைத்தல், அகன்ற இடைவெளி, போதுமான நீர்ப்பாசனம் மற்றும் ஊடுபயிர் சாகுபடி முறை ஆகிய சில செயல்களை பின்பற்றுவதன் மூலம் அடைய முடிகிறது. மேற்கூறிய முறைகளைச் செயல்படுத்துதலின் மூலம், கீழ்காணும் நன்மைகளைப் பெற முடிகிறது.

 • சிறந்த முளைப்பு சதவிகிதம்
 • அதிக எண்ணிக்கையிலான ஆலயக் கரும்புகள்
 • பயிர்க் கால அளவை சில பரப்புக்கு குறைத்தல்
 • நீர்ப்பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பு
 • உகந்த அளவு உரங்களைப் பயன்படுத்துதல் மூலம், ஊட்டச்சத்து செயல்பாட்டின் திருத்தம், (அதிகரித்தல்)
 • அதிக காற்று மற்றும் சூரிய ஒளி செயல்பாடு
 • பயிர் சாகுபடி செலவு குறைவு மற்றும்
 • ஊடுபயிர்களின் மூலம் அதிக வருமானம்

மொத்தத்தில் செம்மை கரும்பு சாகுபடி முறையைச் செயல்படுத்துதலின் மூலம், குறைவான இடுபொருள்களான உரங்கள் மற்றும் முக்கிய வளமான நீர் ஆகியவற்றை குறைத்துப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொள்ள முடிகிறது. எனவே, சூழ்நிலை அமைப்பை பாதுகாத்து பெரிய அளவிலான பொருளாதார நன்மைகளை கரும்பு விவசாயிகள் எளிதில் பெற முடிகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories