தக்காளி சாகுபடி

தக்காளி சாகுபடி
தக்காளி சாகுபடி சாதா முறையில் செய்தாலும் பந்தல் முறையில் சாகுபடி செய்தாலும் பூச்சி நோய் தாக்குதல் இருக்கும். வெயில் காலத்தில் பூ, பிஞ்சு கொட்டிவிடுகிறது, காய், பழமும் வெம்பிவிடும் பனி காலத்தில் நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும் மழைகாலத்தில் பழ அழுகல், பூ கொட்டு;வது; போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றிற்கு நாம எவ்வளவு செலவு செய்கிறோம்
இந்த செலவுகளை குறைத்து நிழல் குடில் அமைத்து சாகுபடி செய்தால் நிழல் வலை வாங்கும் செலவுதான். ஆனால் மற்ற காலங்களிலும் எப்பொழுதும் நிழல் குடிலில் வெயில், பனி, மழை, பூச்சி, நோய் தாக்குதல் இல்லாமல் இருக்கிறது.
தண்ணீர் பற்றாக்குறையும் ஓரளவிற்கு சரியாக இருக்கிறது. செடியில் பூ கொட்டுவது இல்லை. ஆள் உயரத்திற்கு செடி வளர்ந்து காய்கள் அதிகம் பிடிக்கிறது. பழம் சைனிங்கா நல்ல கலருடன் இருப்பதால் சந்தையில் முதலில் வற்பனையாகிறது.
மகசூலும் அதிகமாக கிடைக்கிறது. ஒரு பழம் 150 கிராம் முதல் 200 கிராம் வரை எடை உள்ளது .தக்காளி மட்டும் சாகுபடி செய்யாமல் வேறு பயிர்களையும் சாகுபடி செய்யலாம்.
அதிக விலை கிடைக்கும் சமையத்தில் மகசூல் கொடுப்பதுபோல நாம நடவுசெய்தால் கண்டிப்பாக நிழல் பந்தல் அமைக்கும் செலவுக்கு இரண்டு மடங்காக மகசூல் எடுக்கலாம்.
தொடர்ந்து மூன்று நான்கு வருடம் சாகுபடி செய்யலாம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories