தக்காளி சாகுபடி!

நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவுகளில் தக்காளியின் பங்கு அதிகமாக உள்ளது. அத்தகைய தக்காளி சாகுபடி செய்யும் முறை பற்றி இங்கு காணலாம்.

தக்காளி சாகுபடிக்கு கோ-1 ,கோ-2 ,கோ-3, பிகேஎம் 1, பூசாரூபி , பையூர் 1 .சி ஓ .எல். சி .ஆர். எச். 3 அர்கா அபிஜித் , அர்கா அஹா ,அர்கா அநான்யா ஆகிய ரகங்கள் ஏற்றவை.

நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 இதிலிருந்து 7.0 என்ற அளவில் இருக்க வேண்டும் .ஜூன்- ஜூலை நவம்பர்- டிசம்பர் மற்றும் பிப்ரவரி- மார்ச் ஆகிய மாதங்களில் தக்காளியை விதைக்க ஏற்ற காலங்களாகும்.

நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்றாக உழ வேண்டும். இதற்கு தொழு உரம் ,மண்புழு உரம், வேப்பம் கொட்டை புண்ணாக்கு ஆகியவற்றை சேர்த்து நன்கு நிலத்தை சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

விதைகளை ஜீவாமிர்தக் கரைசலை ஊறவைத்து பிறகு விதைக்க வேண்டும். அல்லது அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம் . விதை நேர்த்தி செய்த விதைகளை ஒரு மீட்டர் அகலம் உள்ள மேட்டுப் பாத்திகளில் பத்து சென்டிமீட்டர் இடைவெளியில் விதைக்க வேண்டும்.

பயிர் வளர்ந்து 20 நாட்களில் களை எடுக்க வேண்டும் அதன் பிறகு ஒரு வாரம் இடைவெளியில் களை எடுக்கலாம். களை எடுக்கும் பொழுது வேப்பம் புண்ணாக்கு கடலை புண்ணாக்கு எருவுடன் கலந்து விட்டு மண் அணைக்க வேண்டும் .சொட்டு நீர் பாசனமாக இருந்தால் கடலைப்புண்ணாக்கு நீரில் ஊறவைத்து அதன் பிறகு நீரில் கலந்து விடலாம். வாடல் நோயை கட்டுப்படுத்த பஞ்சகாவ்யா கரைசல் தெளித்து வந்தால் நோயிலிருந்து பாதுகாக்கலாம் .தக்காளி செடிகளை தாக்கும் பூச்சிகளான அசுவினி பூச்சிகளை அழிக்க வேப்ப எண்ணெய் கரைசல் தெளித்து வரலாம். மூன்று மாதம் ஆன பிறகு நீர் கலந்த தேமோர் கரைசல் அல்லது மீன் அமிலம் தெளித்து வரலாம்.

தக்காளி செடியை அதிகம் தாக்கும் இலை முடக்கு நோய்கள் மற்றும் காய்த்துளைப்பான் போன்றவை ஆரம்ப காலம் முதலே கற்பூரகரைசல் தொடர்ந்து அளிப்பதனால் பூச்சிகள் தாக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.

தக்காளி பயிரில் கற்பூர கரைசல் தெளித்தால் அளவுக்கு அதிகமாக பூக்கள் உருவாகும். தக்காளி செடியில் பூக்கள் உதிர்வதை தடுக்க தேங்காய் பால் ,கடலை புண்ணாக்கு கரைசல் தொடர்ந்து தெளித்தால் பூக்கள் உதிர்வதை முற்றிலும் தடுக்கலாம்.

தக்காளி நடவு செய்த இரண்டாவது மாதத்தில் அறுவடைக்கு தயாராகும். அதிலிருந்து 120 நாட்கள் வரை தக்காளியைப் பறிக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories