நிலக்கடலைபயிர் இடுவது எப்படி

ரகங்கள்

டி எம் வி 7 ,டிஎம்பி 10 ,கோ-3 ,கோஜி எண் 4, கோ ஜி என் 5 ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

பருவம்

நிலக்கடலையை விதைப்பிற்கு சிறந்த பருவம் ஜூன் ,ஜூலை மற்றும் டிசம்பர் ,ஜனவரி மாதங்கள் ஆகும்.

மண்

மணற்பாங்கான வண்டல், செம்மண் நிலங்களில் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றவை.

நிலம் தயாரித்தல்

கோடை காலத்தில் நிலத்தை நன்றாக குறுக்கு உழவு செய்து அதில் உள்ள கலைகளைநீக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கோடை மழையில் மண்ணில் மழைநீர் சேமிக்கப்படுகிறது அல்லது கோடை மழையில் சணப்பை போன்ற பயிர்களை விதைத்து பூக்கும் தருணத்தில் அதை மடக்கி உழுது நிலத்தை தயார் செய்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பருவ மழை வந்தவுடன் விதைப்புக் கருவி கொண்டு விதைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

செம்மண் நிலங்களை பொறுத்தவரையில் மேல் மண்ணின் இறுக்கமும் கடலை மகசூலை மிகவும் பாதிக்கிறது.

மேல் மண்இறுக்கத்தை நிவர்த்தி செய்ய எக்டருக்கு 2 டன் சுண்ணாம்பு மற்றும் 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு கடைசி உழவின்போது இடவேண்டும். மேலும் அடி மண் கடின அடுக்கை உடைக்க மூன்று வருடத்திற்கு ஒரு முறையும் உளிக் கலப்பை கொண்டு உழவேண்டும்.

விதை அளவு

எக்டருக்கு 125 கிலோ விதையை பயன்படுத்த வேண்டும். பெரிய விதை கொண்ட ரகங்களுக்கு விதை அளவில் 15 சதவீதம் கூடுதலாக தேவைப்படும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories