பட்டாணி சாகுபடி
ரகங்கள்
பட்டாணி சாகுபடி செய்ய போனி வில்லே புளு போண்டம் ஆர் கேள் அலாஸ்க்கா லிங்கோலன் அசாத் போன்ற ரகங்கள் ஏற்றவை.
மண்
செம்மண் களிமண் நிறைந்த நிலங்களிலும் பட்டாணி வளர ஏற்றது. வடிகால் வசதி கொண்ட நிலங்களில் நன்கு வளரும்.
உவர் நிலங்களில் வளராது. அட்டவணையை குளிர் காலத்தில் சிறந்த வளர்ச்சியும் மகசூல் தரவல்லது.
பருவம்
பிப்ரவரி- மார்ச் மட்டும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் பயிரிட ஏற்ற பருவம்.
நிலம் தயாரித்தல்
விதைகளை நடவு செய்வதற்கு முன் நிலத்தை 4 முதல் 5 முறை உழவு செய்ய வேண்டும். பிறகு தொழுவுரம் வேப்பங்கொட்டை தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு உழவேண்டும்.
நிலத்தை உழுத பிறகு 45 சென்டிமீட்டர் இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.
விதை நேர்த்தி
விதைகளை இந்த கரைசலில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும். பிறகு விதைகளை நிழலில் உலர்த்தி அதன் பிறகு விதைகளை விதைக்கலாம்.
விதைத்தல்
விதை நேர்த்தி செய்த விதைகளை ஒவ்வொரு குழிக்கும் 4 விதைகள் வீதம் விதைப்பு செய்ய வேண்டும்.
பார்களின் பக்கவாட்டில் விதைகளை 34 சென்டிமீட்டர் ஆழத்தில் ஊன்ற வேண்டும்.
விதைக்கு விதை 10 சென்டி மீட்டர் இடைவெளியில் விட்டு விதையை ஊன்ற வேண்டும்
நீர் நிர்வாகம்
விதைகள் விதைத்த 3 நாட்களில் நீர் பாய்ச்சவேண்டும் .செடிகள் முளைத்த உடன் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.
ஜீவாமிர்தக் கரைசலையும் தண்ணீரோடு கலந்து விட்டால் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.