பணம்குவிக்கும் முருங்கயின் பயன்களை பற்றி பார்க்கலாம்

பணம்குவிக்கும் முருங்கயின் பயன்களை பற்றி பார்க்கலாம்
சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் . கற்பகத் தரு என்றே அழைக்கின்றனர். முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும்.
மரங்களில் முருங்கைக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. முருங்கைக் கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா வகையில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது.
ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது
பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது
காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது
வாழைப் பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது
தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது
இரும்பு சத்து அபரிமிதமாக உள்ளது .
எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.
அதிக வைட்டமின்’ C ‘ மற்றும் ‘ A ‘ சத்தையும், மனித உடலுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 அமினோ அமிலத்தை உள்ளடக்கிய முருங்கை.
இலையில்(moringa leaves), கால்சியம்,இரும்பு மற்றும் பாஸ்பரஸ் சத்தும் மிகுதியாக உள்ளது.
இந்த பண்புகளால் சர்க்கரை நோய் , நரம்பு தளர்ச்சி ,உடல் பருமன் ,ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளை கட்டுபடுத்துகிறது.
முருங்கை விதையை வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்தால் இனிப்பாக
20 கிராம் முருங்கைப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து… மிளகு, சீரகம், உப்பு சேர்த்து சூப் தயாரித்துக் குடித்து வந்தால், முழங்கால் வலி குறையும்
முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது..
முருங்கை கீரை மட்டும் அல்லாமல் முருங்கைக்காய், முருங்கைப்பூ, முருங்கை காம்பு, முருங்கை மரப் பட்டை என்று எல்லாமே மருத்துவகுணங்களையும் கொண்டிருக்கிறது.
அற்புதமான சக்தி படைத்த முருங்கை கீரை பொடி தயாரிக்கும் முறை பற்றி தான் இந்த பதிவில் காணப்போகிறோம்.
முருங்கைகீரையை பொடி செய்தும் தேநீர் தயாரித்து குடிப்பதும் அதிகரித்துவருகிறது.
நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் இந்த பொடியை வீட்டிலும் தயார் செய்து பயன்படுத்தலாம்.
பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது . அதில் முருங்கை இலை சார்ந்த தொழில் முனைவோர்கள் அதிகம் கலந்து கொண்டு ஸ்டால் அமைத்திருந்தார்கள்
முருங்கயில் என்னென்ன மதிப்பூக்கூட்டு பொருட்கள் தயாரிக்கலாம் என்பதை கொண்டு வந்தார்கள்.
முருங்கை மரத்தில் நன்றாக இலை வந்தவுடன் மரத்தின் அடிப்பகுதியில் இரண்டடி உயரம் வரை விட்டு விட்டு அவற்றின் இலையை ஒடித்து நிழலில் காயவைத்து பவுடராக தயாரிக்கலாம் .
அங்கு வந்த அனைவருக்கும் முருங்கை பவுடரில் சூப்செய்து கொடுத்தார்கள். அவை கறியில் சூப் செய்தது போல மிகவும் சுவையாகவும் இருந்தது.
முருங்கையில் பல மதிப்புக்கூடிய பொருட்கள் தயாரித் வைத்திருந்தார்கள், முருங்கை பவுடர், எண்ணைய், மாத்திரைகள், முருங்கை தேன், மிட்டாய்கள் போன்ற அனைத்துப்பொருட்களும் கொண்டு வந்து காட்டினர். முருங்கையில் இவ்வளவு மருத்துவக் குணங்கள் இருப்பதால் முருங்கை விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது.எனவே முருங்கை நடவு செய்ய முன்வருவோம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories