#பப்பாளி சாகுபடி தொழில் நுட்பம்

#பப்பாளி சாகுபடி தொழில் நுட்பம்
பப்பாளி நாற்று போடுவது
கருப்பு கலர் பாலுத்தில் பையை வாங்கி வந்து அவற்றில் தென்னை நார் கழிவு உரத்தை நிரப்பி தண்ணீர் தெளித்து விட்டு வைக்கவும்.
பாப்பாளி விதையை 12 மணிநேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து விட்டு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ், 10கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதையில் தூவி நன்றாக கலந்து அதன் பிறகு பாலுத்தின் கவரில் ஒரு பைக்கு ஒரு விதை வீதம் நடவு செய்யவேண்டும்.
நடவு செய்து தினமும் பூவாளி கொண்டு தண்ணீர் தெளித்து வரவும் 5 நாட்களில் விதை நன்றாக முளைத்துவிடும்.
அதன் பிறகு ஒரு லிட்டர் தண்ணீருக்கு10; கிராம் சூடோமோனஸ், 10;கிராம் டிரைக்கோடெர்மாவிரிடி கலந்து நாற்றுக்களில் தெளித்து வரவேண்டும்
. 45 நாட்களில் பப்பாளி நாற்றை எடுத்து நடவு செய்யலாம் .
பட்டம் : ஆண்டு முழுவதும் பயிரிடலாம்
உழவு : நன்றாக உழவு செய்து கடேசி உழவில்
தொழுவுரம் – 10 டன் இடவேண்டும்
மண் : நல்ல வடிகால் வசதி உள்ள மண்
கலர் உவர் மண்ணில் வராது
ரகம் : ஜிந்தா
நாற்று : ஒரு ஏக்கருக்கு 1000 நாற்றுகள் தேவைப்படும்
விலை : 1 நாற்றின் விலை ரூபாய் 7
கம்பெனி : செந்தில் பப்பாய கம்பெனிக்காரர்கள் நாற்றுகளை கொண்டுவந்து கொடுத்து விடுவார்கள்.
இடைவெளி : வரிவைக்கு வரிசை 7 அடி , செடிக்கு செடி 7 அடி
உரம் நிர்வாகம்
25 வது நாள் ஒரு மரத்துக்கு 100 கிராம் டி.ஏ.பி போடனும்
60 வது நாள் -டி.ஏ.பி, பொட்டாஷ், இரண்டையும் கலந்து ஒரு மரத்துக்கு 100 கிராம் போடனும்
120 வது நாள்
ஒரு டன் மண்புழு உரத்தில் 6 கிலோ அசோஸ்பைரில்லம் 6 கிலோ பாஸ்போ பாக்டீரியா இரண்டையும் தண்ணீர் தெளித்து கலந்து நிழலில் கோணி சாக்கு அல்லது தென்னை ஓலை கொண்டு மூடி ஒரு வாரம் வைத்திருந்து பிறகு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி ஈரம் இருக்கும் பொழுது ஒரு மரத்துக்கு 500 கிராம் வீதம் போடனும்.
நீர் நிர்வாகம்
வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்
நடவு செய்து 5 -6 வது மாதத்தில் பால் எடுக்கலாம் ஆரம்பத்தில் ஒரு ஏக்கருக்கு ஒரு முறை பால் எடுத்தால் 25 கிலோ பால் வரும். நாம் உரம் கொடுத்தால் ஒரு ஏக்கருக்கு ஒரு முறை 50 கிலோ பால் எடுக்கலாம் .
வாரம் ஒருமுறை பால் எடுக்கனும் பால் எடுப்பது இரவு நேரத்தில் எடுத்தால் பால் விணாகாமல் நிறைய வடியும்
தண்ணீர் பாய்ச்சும் பொழுது பஞ்சகவ்யா 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தண்ணீர் பாயும் பொழுது ஊற்றி விடனும்.
பப்பாளியில் பால் எடுத்தல்
விலை : ஒரு கிலோ பாலின் விலை 112 ரூபாய்
பால் எடுப்பதற்கு கூலி ஒரு கிலோ விற்கு 30 ரூபாய்
கோயமுத்தூரில் உள்ள செந்தில் பப்பாய கம்பெனிகாரர்கள் எடுத்துக்கொள்வார்கள்.
சென்டர் : ஒட்டன்சத்திரத்திலும் உள்ளது
ஒரு மரத்தில் 60 நாட்கள் வரை பால் எடுக்கலாம்
அதன்பிறகு அந்த காயை ஒரு கிலோ 3 ரூபாய்க்கு எடுத்துக் கொள்வார்கள் ஒரு ஏக்கருக்கு 10 டன் காய் கிடைக்கும்
பப்பாளி நடவு செய்து இரண்டு வருடம் வரை மகசூல் கிடைக்கும்.
பப்பாளியில் நல்ல லாபம்தான்.
செலவு போக ஒரு வருடத்திற்கு இரண்டு லட்சத்திற்குமேல் வருமானம் கிடைக்கும்
வேரழுகல் நோயை கட்டுப்படுத்த
கார்பன்டீசம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
இயற்கை முறையில் கட்டுப்படுத்த
டிரைக்கோடெர்மா விரிடி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.
அல்லது ஒரு ஏக்கருக்கு டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோ சூடோமோனஸ் 2 கிலோவை 50 கிலோ மக்கிய தொழுவுரத்தில் கலந்து வயலில் ஈரம் இருக்கும்பொழுது தூவி விட வேண்டும்.
வைரஸ்நோய்
மேகமூட்டமாக இருந்தால் வைரஸ்நோய் வரும் அது சரிவர பாதிக்காது வைரஸ் தாக்கிய மரத்தை எடுத்து விடலாம்.
பப்பாளி பயன்
பேக்கரிசெய்ய ஜாம் தயாரிக்க
மாத்திரை ஊசி மருந்து தயாரிக்க
டூட்டி புரூட்டி தயாரிக்க பயன்படும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories