பருத்தியில் கவனிக்க வேண்டிய மேலாண்மை

பருத்தியில் கவனிக்க வேண்டிய மேலாண்மை
பருத்தி நடவு பாருக்கு பார் 3.5 அடி செடிக்கு செடி 2
நடவுசெய்த 10 முதல் 25 நாட்களுக்குள் மெக்னீசியம் சல்பேட் ஒரு ஏக்கருக்கு 25 கிலோ மணல் அல்லது காட்டு மண் 10 கிலோ கலந்து தூவ வேண்டும்.
40 ஆம் நாளில் களை எடுத்த பிறகு தனி உரம் கொடுப்பது ஒரு ஏக்கருக்கு 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், ஒரு மூடை அமோனியம் சல்பேட் , 35 கிலோ பொட்டாஷ் கலந்து செடியிலிருந்து 4 இஞ்சு தூரத்தில் வைத்து மூட வேண்டும்.
65 ஆம் நாளில் இரண்டாவது மேலுரம் 20 கிலோ பொட்டாஷ், 50 கிலோ அமோனியம் சல்பேட் இடவேண்டும்
35 நாட்களுக்குள் இலையில் எறும்புகள் ஊற ஆரம்பிக்கும் செடியை பின்புறம் திருப்பிப் பார்த்தால் கருப்பாக இருக்கும் இதனை கட்டுப்படுத்த இரசாயன முறையில் மோனோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3முதல் 4 மில்லி வரை காலை அல்லது மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்
அல்லது இமிடாக்குளோர் 1 மில்லி அசிப்பேட் 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
மெக்னீசியம் சத்தின் பற்றாக்குறை அறிகுறி
பருத்திச் செடியில் இலைகள் சிவந்து காணப்படும் இது நோயின் தாக்குதல் இல்லை இவை மெக்னீசியம் சத்தின் பற்றாக்குறை இதுமாதிரி ஆனி மாதம் செடியில வந்தால் பூ பிஞ்சு உதிர்ந்து மகசூல் இழப்பு ஏற்படும்
இதனைக் கட்டுப்படுத்த மெக்னீசியம் இடிடி (EDT) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.5 கிராம் தெளித்து கட்டுப்படுத்தலாம்
கிளையை அகற்றுதல்
60 நாட்களுக்கு மேல் பருத்திச் செடியின் அடியில் மொத்தமாக வரும் கிளையை அகற்றுதல் வேண்டும் அவ்வாறு செய்தால் பருத்தியின் மற்ற கிளைகள் விரிந்து நீளமாகஓடி அதிக காய் பிடித்து பருத்தியில் மகசூலைக் கூட்டலாம்
வரப்பு ஓரங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்து வெள்ளை ஈ, மற்றும் பறக்கும் பூச்சியை கட்டுப்படுத்தி மகசூலைக் கூட்டலாம்
80 நாட்களுக்கு பிறகு வயலில் ஈரம் இருந்தால் நோயின் தாக்குதல் இருக்கும் இலைகள் சாம்பல் பூத்து காணப்படும் இதனைக் கட்டுப்படுத்த சாப் பவுடர் 2.5 கிராம் தெளித்து நோயை கட்டுப்படுத்தி மகசூலைக் கூட்டலாம்
90 வது நாள் பருத்தியின் வளர்ச்சி 16 கிளைகளுக்கு மேல் வரும் 16 கிளைகள் வரை மட்டும் விட்டு அதற்கு மேல் உள்ள கொண்டையை அகற்றி ( ஒடித்து) விடவேண்டும்
அவ்வாறு ஒடித்துவிட்டால் காயின் எண்ணிக்கையும் மேலும் பருத்தியின் எடை, விதையின் எடை அதிகமாக வந்து மகசூல் கூடும்
முன் அறுவடை
பருத்தியின் செடியின் வளர்ச்சி குறைந்து இருந்தால் 19:19:19 என்ற ஆல் நயன்டீன் என்ற வளர்ச்சி ஊக்கி 10 லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் என்ற விகிதத்தில் கலந்து இலைவழியாக தெளித்து மகசூலைக் கூட்டலாம்
100 நாட்களுக்கு பிறகு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 13. 0. 45 மல்டிகே என்ற வளர்ச்சி ஊக்கியை தெளித்து மகசூலைக் கூட்டலாம்
மேற்கண்ட தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்து வந்தால் விவசாயிகள் லாபம் பெறலாம்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories