பாரம்பரிய முறையில் புளிச்சைக் கீரைசாகுபடி

பாரம்பரிய முறையில் புளிச்சைக் கீரைசாகுபடி
முதலில் நிலத்தை நன்றாக உழவு செய்து கடேசி உழவின் போது புளிச்சக்கீரை விதைகளை விதைத்து விடவேண்டும்4-5 நாட்களிலேயே கீரை முளைத்து விடும். தண்ணீர் பாய்ச்சி ஒரு களை எடுக்க வேண்டும்.
நன்கு மக்கிய ஆறவைத்த தொழுவுரம் 100 கிலோ உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம் 3கிலோ , பாஸ்போபாக்டீரியா3 கிலோ பொட்டாஷ் பாக்டீரியா 3 கிலோ, சூடோமோனஸ் ஒரு கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோ இவற்றை எருவில் கொட்டி நன்கு கலக்க வேண்டும்.
கலந்த கலவையில் ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரையை தண்ணீரில் கரைத்து; அவற்றில்; ஊற்றி நன்றாக தெளித்து பிரட்ட வேண்டும் அவை புட்டு பதம் வருமாறு பிரட்டி நிழலில் 2 நாட்கள் வைத்திருந்து பிறகு வயலில் ஈரம் இருக்கும் பொழுது தூவி விட வேண்டும்.
40 நாட்களிலேயே கீரை அறுவடைக்கு தயாராகி விடும். கீரை நல்ல சுவையுடனும் பார்ப்பதற்கு பளபளப்புடனும் மக்கள் விரும்பி வாங்க தூண்டக் கூடியதாகவும் இருக்கும்.
நாம் தினந்தோறும் அவற்றை அறுவடை செய்து விற்பனை செய்து வருமானத்தை பார்க்கலாம்
இவற்றை மற்ற பயிர்களுடன் ஊடுபயிராகவும் வாய்க்காலிலும் வரப்பு ஓரங்களிலும் கூட விதைக்கலாம்.
இவற்றில் இரும்பு சத்துக்கள் நிறைந்து காணப்படும் சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையுடன் இருக்கும் ஒருமுறை சாப்பிட்டால் மறுமுறையும் சாப்பிடத் தூண்டும்.
இப்பொழுது விதைப்பதற்கு நல்ல தருணம் தண்ணீர் பாய்ச்சக்கூட தேவைப்படாது
முதலில் 30 சென்ட் மட்டு விதைத்து பாருங்கள் நல்ல லாபம் கிடைக்கும் .

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories