மண்புழு உரம் தயாரிக்கும் முறை

மண்புழு உரம் தயாரிக்கும் முறை
விவசாயிகளின் நண்பனாக விளங்கும் மண்புழுக்களை பயன்படுத்தி, உரம் தயாரித்து அதை பயன்படுத்துவதால் பாதுகாப்பான சூழ்நிலையில் அதிக விளைச்சலைப் பெற முடியும்.
தேவையானப் பொருட்கள்
மட்கக்கூடிய கழிவுகள், மாட்டுச் சாணம், கால்நடை கழிவுகள், கரும்பு சக்கை, வைக்கோல் ஆகியவற்றை ஒரு டன் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மண்புழு உரம் தயாரிக்கும் முறை
மண்புழு உரத்தை வீடுகளில் நிழலான எந்த இடத்திலும், விளை நிலங்கள்,
தோட்டங்களில் நீர்த்தேங்காத மேட்டுப் பகுதியிலும் அமைக்கலாம்.
மண்புழு உரம் தயார் செய்வதற்கு முதலில் தரையில் செங்கல் அல்லது
கூழாங்கற்களை பரப்பி அதன் மேல் மணலை பரப்பி, பின்னர் பண்ணைக் கழிவுகளை நிரப்ப வேண்டும்.
பண்ணைகழிவுகளை நிரப்புவதற்கு முன் பாலீதின் பை அல்லது செங்கலை கொண்டு 12 அடி நீளம், 4 அடி அகலம், 3 அடி உயரம் என்ற அளவில் தொட்டி அமைக்க வேண்டும்.
பாலிதீன் பைகளை கொண்டு தொட்டி அமைப்பதாக இருந்தால் 15 அடி நீளமுள்ள மூங்கில் கம்பு நான்கை, பாலிதீன் பையை சுற்றி நட்டு வைத்து, மூங்கிலுடன் பாலிதீன் பையை கட்டி, தொட்டி போன்ற அமைப்பில் உருவாக்க வேண்டும்.
பின்னர் அந்த குழியில் தென்னைநார் கழிவை கொட்டி, அதன் மீது கரும்புக்கூழ் கழிவு, அதன் பிறகு மட்கக்கூடிய கழிவு என ஒவ்வொரு அடுக்காக போட்டு நிரப்ப வேண்டும். அடுத்ததாக, நன்கு காய்ந்த சாணத்தை தூளாக்கி அந்த படுக்கையின் மீது பரப்பி அதன் மீது ஈரமான சாணத்தை கொட்டி அதில் மண்புழுக்களை விடவேண்டும்.
ஒரு டன் அளவிற்கு உள்ள கழிவுகளுக்கு அல்லது (தொழு எருவில்) இரண்டு கிலோ மண்புழுக்கள் தேவைப்படும். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீர் கட்டாயம் தெளிக்க வேண்டும். 60 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
காலை அல்லது மாலை வேளையில் தண்ணீரினைத் தெளிக்க வேண்டும். அப்படியே ஊற்றக் கூடாது. மண்புழு எடுப்பதற்கு முன்னதாக தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி விடவேண்டும். 40 நாட்களில் மண்புழு உரம் ரெடியாகிவிடும்
மண்புழு உரம் எடுக்கும் முறை
40 முதல் 60 நாட்களில் மண்புழு உரம் தயாராகி விடும். மண்புழு உரமானது அடர் நிறத்தில் பொடியாக, குருணையாக, எடைகுறைவாகும் பொழுது உரத்திற்காக எடுக்கலாம். மண்புழு உரப்படுக்கையின் மேல் உள்ள மண்புழு கழிவுகளை மட்டும் எடுக்க வேண்டும். மண் புழுவை வாரம் ஒரு முறை எடுக்க வேண்டும்.
மண்புழு உரங்களை கைகளால் எடுத்து சேகரித்து நிழலில் குவித்து வைக்க வேண்டும். இந்த மண்புழு உரம் தகுந்த இடைவெளியில் செய்வதன் மூலம் நல்ல தரமான உரம் கிடைக்கும். மண்புழு எடுத்த பிறகு, மண்புழுக்களை உரங்களிலிருந்து பிரித்து எடுக்க வேண்டும்.
சிறிய அளவில் மாட்டு சாணகரைசலை உரக்குழியில் பல இடங்களில் வைக்க வேண்டும். இந்த வாசனையால் மண்புழுக்கள் கவரப்படுகிறது.
அதன் பின் சாணகரைசலை தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும் சாணம் மண்புழுக்கள் பிரித்து எடுக்க வேண்டும். இந்த புழுக்களை அடுத்த உரம் தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
மண்புழு உரங்களை சேமிக்கும் முறை
இந்த உரங்களை நேரடியாக வயல்களில் பயன்படுத்தி கொள்iலாம். இதை சேமித்து வைக்க நினைத்தால் மண்புழு எடுத்த உரங்களை இருட்டான அறையில் 40 சதவீதம் ஈரப்பதம், சூரிய ஓளி படாதவாறு சேமித்து வைக்க வேண்டும். திறந்த வெளியில் உரத்தை சேமித்து வைக்கும் பொழுது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை காக்க வேண்டும். இதனால் நுண்ணுயிர்கள் அழிவதை தடுக்கலாம். 40 சதவீதம் ஈரப்பதத்துடன் வைப்பதினால் மண்புழு உரத்தின் தரம் குறையாமல் பாதுகாக்கலாம்.
விற்கும் சமயத்தில் மட்டுமே பைகளில் நிரப்ப வேண்டும்.
பயன்கள்
மண்புழு கழிவு உரத்தில் நைட்ஜைன் நிலை நிறுத்தும் பாக்டீரியாக்களும், பாஸ்பேட்டை கரைக்க வல்ல பாக்டீரியாக்களும் உள்ளன. இதனால் சாகுபடி செலவு குறையும்.
மண்புழு கழிவு உரத்திற்கு ஈரத்தை நிலை நிறுத்தும் திறன் இருப்பதால், பயிரிருக்கு நீர் பாய்ச்சும் இடைவெளி அதிகமாகி நீரை சேமிக்கும் திறன் உண்டு எனலாம்.இதனை மண்ணில் இடுவதால், மண்ணில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்களின் பற்றாக்குறை சரி செய்யப்படுகிறது.
மேலும் மண்ணில் தாவரங்;களின் வேர்கள் எளிதில் ஊடுருவ வகை செய்கின்றன. இதனை பயன்படுத்துவதால் மண்ணின் வளம், சுற்றுப்புறச்சூழல், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் ஆகியவை அழிக்கப்படாமல் காக்கப்படுகின்றன. இதை கரும்பு, நெல், காபி, தேயிலை, கோதுமை போன்ற பயிர்களுக்கு மட்டுமல்லாது எல்லா பயிர்களுக்கும பயன்படுத்தலாம் இதில் அனைத்துவகையான சத்தக்களும், நுண்ணூட்ட சத்துக்களும் உள்ளன . அளவு அதிகமானாலும் பயிருக்கு இதனால் எந்Nவிதமான பாதிப்பும் ஏற்படாது. இவற்றுடன் உயிர் உரங்களை கலந்து பொட்டாலும் நன்றாக இருக்கும் உரச்செலவு மிகவும் குறையும் உயிர் உரங்கள் விளக்கம் பெற மற்றும் தேவைக்கு

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories