மரங்கள் நடவு செய்ய தகுந்த இடங்கள்

மரங்கள் நடவு செய்ய தகுந்த இடங்கள்
மனிதர்களுக்கு மகத்தான மாற்றங்கள் யாவும் மரத்தடியில்தான் நிகழ்ந்திருக்கின்றது.
அரச மரத்தடியில் அமர்ந்தால்- புத்தருக்கு ஞானம் கிடைத்தது
ஆப்பில் மரத்தடியில்தான் – புவி ஈர்ப்பு விசையை நியூட்டன் கண்டுபிடித்தார்
செம்மண்ணில் நடும் மரம்
புளி, வேம்பு, முந்திரி, இலந்தை, நாவல், சூபாபுல், மா, வாதநாராயணன், வாகை, முருங்கை, செம்மரம், புங்;கமரம் நடவு செய்யுங்;கள்
வண்டல் மண்ணில் நடும் மரம்
நெல்லி, இலுப்பை, மூங்கில், கருவேல், வேம்பு, நாவல், புங்கம்
களிமண்ணுக்கு
வேம்பு, புளி, கருவேலம், மஞ்சணத்தி, நாவல், வாதநாராயணன், கொன்றை, இலுப்பை, நெல்லி, வாகை ஏற்றவை
கரிசலுக்கு
பூவரசு, நுணா, வேம்பு புளி,
உவர் மண்ணில்
வேம்பு புளி, நெல்லி, வெள்வேல், வேலிக்கருவேல்,
களர் நிலத்தில்
வேம்பு வெள்வேல், நீர்மருது, நெல்லி, இலுப்பை, சுபாபுல், சீமைக்கருவேல், விளா
மணற்பாங்கான இடங்களுக்கு
சவுக்கு. கொடுக்காப்புளி, பூவரசு, புளி, முந்தரி, பனை, தென்னை, புன்னை,
ஆற்று படுக்கை மண்
தேக்கு, கொடுக்காப்புளி, தைலம், நீர்மருந்து, நெல்லி, மூங்கில், சவுக்கு, பூவரசு, சூபாபுல், நாவல், நொச்சி,
சதுப்பு நிலம் ஏரி குளக்கரைகளில்
நெல்லி, பூவரசு, வேம்பு, புங்;கம், புளி, நுணா, வாதநாராயணன், மூங்கில், நீர் மருது ஏற்றவை.
வயல் வரப்புகளிலும், தோட்டங்களைச் சுற்றிலும்
தேக்கு, சூபாபுல், முள்முருங்கை, இலவம், வேம்பு, புங்கம், சவுக்கு, தைலம்
வீட்டின் முன்புறம்
வேம்பு, புங்கம்,
வீட்டின் பின்புறம்
பலா, முருங்கை, சீதா, பப்பாளி
வீட்டின் இருபக்கங்களிலும்
தேக்கு, பப்பாளி,
சாலையோரங்களில்
புளி, வேம்பு, புங்கம், மா, நாவல்
இருப்புப் பாதைகளில்
புளி, வேம்பு, புங்கம், மா, நாவல்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories