முருங்கை சாகுபடி
முருங்கை வறட்சிக்கு ஏற்ற பயிர் பொதுவாக முருங்கையை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை தேவைப்படும் விதை நடவு செய்வதற்கு முன்பு முதல்நாள் இரவு ஒரு விதையை தண்ணீரில் ஊறவைத்து பிறகு அடுத்தநாள் எடுத்து நடவு செய்தால் முளைப்புத்திறன் நன்றாக இருக்கும்.
ஒரு கன்றின் விலை 40 ரூபாய் 25 X 25 அடி இடைவெளியில் முருங்கை கன்றுகளை நடவு செய்து சொட்டுநீர் பாசனமுறையை பயன்படுத்தலாம். ஒரு கன்றுக்கு வேப்பம் புண்ணாக்கு 150 கிராம் 1 கிலோ மண்புழு உரத்தை போட்டு தண்ணீர் பாய்ச்சி மரம் ஒரு கணுவு விட்டு அடுத்தகணுவில் கிள்ளி விடவேண்டும்
முருங்கை மரத்தின் அடியிலேயே கிள்ளி விட்டால் மரம் நிறை போத்துகள் வெடித்து அதிக பக்ககன்றுகளுடன் இருக்கும் உயரம் வராது மாதத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சனும் 6 மாத்திலேயே காய் வந்துவிடும். தொடர்ந்து 5 வருடங்கள் வரை காய்வரும் பூச்சி, புழு தென்பட்டால் வேப்பு சார்ந்த மருந்துகள் அடித்தாலே போதும் இயற்கைமுறையிலேயே சாகுபடி செய்கிறார்கள் .
செடி 1.5அடி வளர்ந்தவுடன் நுனிகிளைகளை ஒடித்து விடனும் அப்பொழுது மரம் நன்றாக படர்ந்து கிளைகள் விடும். அதேபோல 20 கிளைகள் வரை வளரவிட்டு நுனியை வெட்டிவிடனும். முருங்கை பூ பூக்கும் சமையத்தில் தண்ணீர் பாய்ச்சுவதை குறைக்க வேண்டும். காலை வேளையில் எந்தவொரு வளர்ச்சி ஊக்கியையும் தெளிக்கக் கூடாது அவ்வாறு தெளித்தால் அயல்மகரந்த சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் இளப்பு ஏற்படும்.
முருங்கையில் பூ எடுக்கும் சமையத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2மில்லி நன்கு புளித்த தயிரை அடித்தால் பூக்கள் நிறைய பிடிக்கும் கொட்டாது