ராகி சாகுபடி தொழிற்நுட்பங்கள்

ராகி சாகுபடி தொழிற்நுட்பங்கள்

காலநிலை

ராகி பயிர், ஓர் வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல பயிராகும். இது, கடல் மட்டத்திலிருந்து, 2100 மீ உயரம் வரை மலை சரிவுகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் சாகுபடி செய்யலாம். அதிக உயரம் உள்ள பகுதிகளில் சாகுபடி செய்ய முடியும். இமலாயப் பகுதிகளில் 2300 மீ உயரம் வரை நன்றாக வளர்கிறது. மானாவாரியாகவும், பாசன வசதியிடனும் பயிர் செய்யலாம். ஈரப்பதம் உள்ள காலநிலைகளிலும் நன்றாக வளரும். மழையளவு 100 செ.மீ வரை உள்ள பகுதிகளிரலும் வளரும். அதிக மழையளவும், நீர் பாசனமும் உள்ள இடங்களில், நடவுப் பயிராக சாகுபடி செய்யலாம். தென்னிந்தியாவில், கோடை மற்றும் ராபி பருவப் பயிராகவும், வட இந்தியாவில், காரிப் பருவத்திலும் பயிர் செய்யப்படுகிறது.

அட்சரேகை மற்றும் கடல் மட்ட உயரம்

 • மத்திய ரேகையிலிருந்து, 45° வடக்கு வரை உள்ள பகுதிகளில் ராகி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
 • இந்தியாவில் உள்ள வேறுபட்ட கடல்மட்ட உயரம் மற்றும் காலநிலைகளில் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.
 • இந்தியாவில், 8-45° வடக்கு அட்சரேகைப் பகுதிகளில், 3000 மீ கடல்மட்ட உயரம் வரை உள்ள சாகுபடி பகுதிகளில் செய்யப்படுகிறது. எனினும், 1000-2000 மீக்கு அதிகமான கடல் மட்டப் பகுதிகளில், ராகி நன்றாக வளர்கிறது.

வெப்பநிலை

 • ராகி ஒரு வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பயிராகும். இதன் சாகுபடிக்கு சற்று அதிகமான வெப்பநிலை தேவை. (20-40º செல்சியஸ்)
 • ராகி பயிரின் வளர்ச்சிக்கு பகலில் 32° சி செல்சியஸ் மற்றும் இரவில் 25° சி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படுகிறது.

வளர்ச்சிப் பருவங்களும் அனுகூலமான வெப்ப நிலைகளும்

பருவம் அனுகூலமான வெப்பம் °சி (செல்சியஸ்)
முளைப்பு 25-32°
நாற்று வளர்ச்சி 25-30°
வேர் விடுதல் 25-28°
இலை நீளுதல் 31°
துார் பிடித்தல் 25-31°
கதிர் பிடிப்பு பருவம் 15-30°
மகரந்தக் காலம் 30-33°
முதிர்தல் 20-25°

சூரிய ஒளி

 • பயிரின் வளர்ச்சிக்கு, சூரிய ஒளி மிகவும் அவசியமாகும்.
 • கதிர் முதிர்ச்சி அடையும் கடைசி 35-45 நாட்களுக்கு கிடைக்கப்பெறும் சூரிய ஒளியைப் பொறுத்து கேழ்வரகு மகசூல் அமையும்.
 • பயிர் முதிர்வு காலத்தில் குறைந்த வெப்பநிலையுடன் கூடிய, நல்ல சூரிய வெளிச்சம், கதிர் மணியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
 • குறைந்த பட்சம் 300 கலோரி/செ.மீ/நாள் சூரிய ஒளி தேவைப்படுகிறது.
 • சூரிய ஒளிகதிர் வீச்சு, 500-700 கலோரி/செ.மீ/நாள் க்குள் இருக்கும் பொழுது, நல்ல மகசூல் கிடைக்கிறது.

மழை

 • சுற்றுச் சூழலை நிர்ணயிப்பதில் மழை முக்கிய பங்கு வகிக்கிறது.
 • ஆண்டு சராசரி மழையளவு 700-1200 மீ இருக்கும் பகுதிகளில், கேழ்வரகு சாகுபடி நன்றாக செய்யலாம்.
 • அதிகமான மழையைத் தாங்ககூடிய சக்தி கேழ்வரகிற்கு இல்லை. கதிர் முதிர்ச்சி அடையும் காலங்களில், மழையில்லாமல் இருக்கவேண்டும்.
 • மகரந்தக் காலங்களில் அதிக மழை பெய்தால், மலட்டுத் தன்மை வந்துவிடும்.
 • தேவையான மழையளவு இல்லாமல் போனால், மகசூல் குறைந்து விடும்.

ஈரப்பதம்

 • மழைக் காலத்தில் அதிகமான ஈரப்பதமும், மழையில்லா காலத்தில், வறண்ட வானிலையும் நிலவுகிறது.
 • காற்றின் ஈரப்பதம் செடியின் நீர் சம்பந்தப்பட்ட செயல்களை நேரடியாக பாதிப்பதோடு இலை வளர்ச்சி, ஒளிச்சேர்க்கை, நோய் தாக்கம் மற்றும் மகசூல் ஆகியவற்றை மறைமுகமாக பாதிக்கிறது.
 • அதிகமான ஈரப்பதத்தில் செடியின் இலைகளில் பூஞ்சாண வித்துக்கள் நன்றாக முளைக்கிறது.
 • அதிகப்படியான நோய்களும், பூச்சிகளும் மழைக் காலத்தில் தாக்குகிறது. அசுவுணி, செதில் பூச்சிகள், மாவுப்பூச்சிகள் கோடை காலத்தில் அதிகமாகத் தாக்கும்.
 • குளிர்காலத்தில் குலைநோய் பொதுவாக பயிரைத் தாக்கும்

காற்று

 • பொதுவாக ராகி சாகுபடி மற்றும் உற்பத்தியை காற்று பெரிதாக பாதிப்பதில்லை.
 • லேசான காற்று, காற்றை கிளறிவிட்டு, கார்பன் டை ஆக்ஸைடு இலைப் பரப்பிற்கு கிடைக்கச் செய்கிறது.

புயல் காலங்களில் தோன்றும் வேகமான காற்று, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

 • மகரந்த சேர்க்கை காலத்தில் பலமான காற்று வீசினால் மலட்டுத் தன்மை ஏற்படுதோடு, கருச் சூழ்தசையும் சிதைந்து விடும்.
 • பூக்கும் பருவத்தில் பலமான காற்று வீசுவது பயிருக்கு நல்லதல்ல.
 • பூப்பு காலத்தில் வேகமாக காற்று வீசினால் மகரந்தம் உலர்வதால், கதிர் கிளைகள் மலடாகின்றன.

சாகுபடி முறைகள்

இந்தியாவில் பயிர் செய்யப்படும் உணவு தானியங்களுள் கேழ்வரகு மிக முக்கியமான ஒன்றாகும். காலநிலை, பயிரின் நிலை, மண்ணின் வகை மற்றும் நீர் வளம் பொறுத்து வெவ்வேறு மாநிலங்களில் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.

 

கேழ்வரகுப் பயிரில் இரண்டு வகையான சாகுபடி முறைகள் பின்பற்றப்படுகிறது. அவை

பாசனப்பயிர் சாகுபடி முறை

 • டிசம்பர்-ஜனவரி மற்றும் ஏப்ரல்-மே பருவங்களில் பாசனப் பயிர் சாகுபடி செய்யலாம்.
 • தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்கள் முழுவதும் பாசனப் பயிர் சாகுபடி செய்யலாம்.
 • பருவ மழை துவங்கியவுடன் விதைக்க வேண்டும்.
 • வயலுக்கு போதுமான அளவு உரமிட்டு நீர் பாய்ச்ச வேண்டும்

இதில் மூன்று முறைகள் பின்பற்றப்படுகிறது. அவை,

 • நேரடி விதைப்பு முறை
 • நடவு முறை
 • திருந்திய கேழ்வரகு சாகுபடி

மானாவாரிப் பயிர் சாகுபடி முறை

 • மானாவாரி கேழ்வரகு சாகுபடிக்கு, 450-500 மி.மீ சராசரி மழையளவு போதுமானது.
 • இம்முறை ஜுன்-ஜூலை மாதத்தில் பின்பற்றப்படுகிறது. ராபி பயிராக குளிர் காலத்தில், செப்டம்பர்-அக்டோபரில் தமிழ்நாட்டில் நடவு செய்யப்படுகிறது.
 • கோடைப் பாசனப் பயிராக ஜனவரி-பிப்ரவரியில் நடவு செய்யப்படுகிறது.
 • பொதுவாக சோளம், கம்பு, எண்ணெய் வித்துக்கள் மற்றும் பயிறு வகைகளுடன் கலப்பு பயிராகவோ, ஊடு பயிராகவோ கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.
 • தரிசு உழவு செய்து, மண்ணின் ஈரப்பதத்தை சேமிக்கலாம்.
 • இம்முறையில் வரிசை விதைப்பு முறை ஏற்ற ஒன்று. விதையிடும் கருவியை பயன்படுத்தி வரிசைக்கு வரிசை 22.5-30 செ.மீ இடைவெளிவிட்டு விதைக்கவும். விதை மற்றும் உரமிடும் கருவியை பயன்படுத்தி வரிசை நடவு செய்வது நன்று.
 • பரிந்துரைக்கப்படும் விதையளவு ஒரு எக்டருக்கு 15-20 கிலோ ஆகும்.
 • பூக்கும் தருணங்களில் வறட்சியைத் தடுக்க, மானாவாரி பகுதிகளில் முன்கூட்டியே விதைத்துவிட வேண்டும்.
 • மானாவாரி சாகுபடி முறையில், அதிக மகசூல் கிடைக்க சரியான அளவு பயிர் எண்ணிக்கையை பராமரிப்பது அவசியம்.
 • விதை கடினப்படுத்துதல் முறையை மேற்கொள்வதன் மூலம் முளைப்புத் திறன் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நாற்றின் வீரியம் அதிகரிப்பதோடு வறட்சியை தாங்கும் திறனும் அதிகரிக்கிறது.
 • பரிந்துரைக்கப்பட்டுள்ள தழை:சாம்பல்:மணிச்சத்து, 40:20:20 கிலோ/எக்டர் என்ற உர அளவை பின்பற்றவும். 50 சதவீத உரத்தை விதைப்பின் போதும், மீதமுள்ள 50 சதவீதத்தை விதைத்து 35 நாட்கள் கழித்து இடவேண்டும்.
 • வரிசை விதைப்பு பயிரில், 2-3 இடை உழவு முறைகளை பின்பற்ற வேண்டும். மழை உத்தரவாதமுள்ள மற்றும் பாசனப்பயிர் பகுதிகளில் 2, 4 D சோடியம் உப்பை களை பின் கொல்லியாக @ 0.75 கிலோ /எக்டர் என்ற அளவில் விதைத்து 20-25 நாட்கள் கழித்து, களையை கட்டப்படுத்த தெளிக்கலாம்.
 • விதையை தூவி விதைக்கும் பயிரில், இடை உழவு செய்ய முடியாது என்பதால், இரண்டு முறை கைக்களை எடுத்து களையை கட்டுப்படுத்தலாம்.
 • முன் மற்றும் பின் விதைப்புக்களால், மகசூல் பாதிக்கப்படுகிறது.

நேரடி விதைப்பு முறை

சாகுபடி குறிப்புகள்

 • விதையளவு: 10 கிலோ/எக்டர்
 • இடைவெளி: 22.5 * 15 செ.மீ
 • விதை தூவும் முறை அல்லது வரிசை விதைப்பு முறை மூலம் நேரடி விதைப்பு செய்யப்படுகிறது.
 • பரிந்துரைக்கப்பட்டுள்ள இடைவெளியில், வரிசை விதைப்பு செய்யப்படுகிறது. பின்பு உழுதோ, விலங்குகளை கொண்டு மிதித்தோ மண் மூடப்படுகிறது.
 • தழை, மணி, சாம்பல் சத்து ஒவ்வொன்றையும் 22.5 கிலோ/எக்டர் என்ற அளவில், விதைப்பிற்கு முன்பும், விதைத்து 21 நாட்கள் கழித்து மேலுரமாகவும் இடவேண்டும்.
 • பாசனப் பயிருக்கு பார் மற்றும் சால்கள் அமைக்க வேண்டும். வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சி, நல்ல வளர்ச்சியையும் அதிகமான மகசூலையும் பெறலாம்.
 • விதைத்த 3 வாரத்திற்கு பின் களையெடுக்க வேண்டும், மேல் உரம் இடுவதற்கு முன் களையெடுப்பதை முடிக்க வேண்டும்.
 • பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த முறையாக பூச்சிக் கொல்லிகள் மற்றும் பூஞ்சாணக் கொல்லிகள் தெளிக்க வேண்டும்.
 • இரகம், பருவம் மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்து விதைத்த 3-5 மாதங்களில் முதிர்ச்சி அடைந்துவிடும்.
 • கதிர்கள் மஞ்சள் பழுப்பு நிறத்திற்கு மாறியவுடன் அறுவடை செய்ய வேண்டும்

நடவு முறை

சாகுபடி குறிப்புகள்

 • விதையளவு : 3-5 கிலோ/எக்டர்
 • இடைவெளி: பாசனப்பயிர்: 22.5 x 10 செ.மீ
 • மானாவாரிப் பயிர்: 22.5-30 x 7.5-10 செ.மீ
 • நாற்றங்கால் வயலை நன்கு உழுது தயார் செய்ய வேண்டும். பாத்திகள் மற்றும் வாய்க்கால்கள் அமைத்து விதைகளை ஒரே சீராக விதைத்து மண்ணை கிளறிவிட்டு மூட வேண்டும்.
 • நாற்றுகள் மூன்று வாரமாகும் போது, வயலில் நடவு செய்ய வேண்டும்.
 • வயலை 3-4 முறை உழுது, தொழு உரம் அல்லது மக்கிய உரம் இட வேண்டும்.
 • நடவு செய்தவுடனயே நீர் பாய்ச்ச வேண்டும். வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால், பயிரின் வளர்ச்சி அதிகரித்து மகசூலும் அதிகரிக்கும்.
 • தழை, சாம்பல் மற்றும் மணிச்சத்து ஒவ்வொன்றையும் @ 22.5 கிலோ/எக்டர் விதைக்கும் முன் அல்லது நடுவதற்கு முன் இடவேண்டும். நடவு செய்து 21 நாட்கள் கழித்து 22.5 கிலோ/எக்டர் மேலுரம் இடவேண்டும்.
 • விதைத்த மூன்று வாரம் கழித்து, களையெடுக்க வேண்டும், மேலுரம் இடுவதற்கு முன் களையெடுத்து முடிக்க வேண்டும்.
 • நோய் மற்றும் பூஞ்சாணக்கொல்லிகளை தெளித்து, பூச்சி மற்றும் நோயை கட்டுப்படுத்த வேண்டும்.
 • இரகம், பருவம் மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்து, விதைத்து 3-5 மாதங்களில் முதிர்ந்து விடும்.கதிர்கள் மஞ்சள் பழுப்ப நிறத்திற்கு மாறியவுடன் அறுவடை செய்யவும்.

திருந்திய கேழ்வரகு சாகுபடி

திருந்திய கேழ்வரகு சாகுபடியை, கர்நாடகாவில் “கல்லி ராகி” என்று உள்ளூர் மொழியில் அழைக்கின்றனர். இதில், திருந்திய கேழ்வரகு சாகுபடி போன்றே, இராசாயன உரங்கள் சாராத சாகுபடி முறைகள் பின்பற்றப்பட்டு, அதிக மகசூல் பெறப்படுகிறது.

திருந்திய கேழ்வரகு சாகுபடியில் குறைந்த இடுபொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. குறைந்த அளவு விதை, நீர், இராசாயன உரங்கள் மற்றும் நோய்க் கொல்லிகளும், அதிகமான அளவு இயற்கை உரங்களும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, சாகுபடி செய்யப்படும் கேழ்வரகில் பெரிய வேர்கள், அதிகமான துார்கள், பெரிய கதிர்கள் உருவாகின்றன. நன்கு நிறைந்த அதிக மணியுடைய கதிர் மணிகள் கிடைக்கிறது.

திருந்திய கேழ்வரகு சாகுபடியில், நீர் வெள்ளப்பாய்ச்சல் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதிலாக காய்ச்சலும், பாய்ச்சலும் முறையில் பாசனம் செய்யப்படுகிறது.

 • நாற்றங்காலை எவ்வாறு தயார் செய்வது?
 • அடிப்படைத் தேவைகள்
 • பயன்கள்
 • குறைகள்

நாற்றங்காலை எவ்வாறு தயார் செய்வது?

வறண்ட நிலையில் இருக்கும் பொழுது நிலத்தை தயார் செய்ய வேண்டும். தொழு உரம் இட்டு நன்றாக உழவேண்டும். தேவைப்பட்ட நீளமும், 1 மீ அகலமும் கொண்ட பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்தியின் இருபுறத்தில் இருந்தும் மண் எடுத்து போட்டு மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும். மண் அரிப்பு ஏற்படாமல் இருக்கவும், மழை அரித்து செல்லாமல் இருக்கவும், மூங்கில் தட்டைகள் நட வேண்டும். நடவு வயலுக்கு, அருகிலேயே நாற்றங்கால் பாத்திகளை உருவாக்க வேண்டும். இதனால் நாற்றுகளை பிடுங்கி நடவு வயலுக்கு கொண்டு செல்லும் நேரம் குறைகிறது.

விதைகளை 12 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். விதையை ஈரக்கோணியில் போட்டு 24 மணி நேரம் மூடி வைக்க வேண்டும். விதைப்படுக்கையை சமம்படுத்த வேண்டும். படுக்கையின் மேல் நன்கு மக்கிய தொழுஉரம் இட வேண்டும். அதற்கு மேல் விதைகளை பரவலாக தூவவேண்டும். 40 சதுர மீ பரப்பில் 1.25 கிலோ அளவு வதை போதுமானது. தொழு உரம் மறுபடியும் இட்டு விதைகளைப் மூடவேண்டும். ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் நீர் பாய்ச்ச வேண்டும். நாற்று படுக்கையில், எந்தவித இராசாயன உரங்களையும் இடக்கூடாது, 10-15 நாட்களில், நல்ல வளமான, வீரியமுள்ள நாற்றுக்கள் நடவுக்கு தயாராகிவிடும்.

திருந்திய கேழ்வரகு சாகுபடியின் அடிப்படைத் தேவைகள்

i. நல்ல இளம் நாற்றுகளை, நடவுக்கு பயன்படுத்துதல்

முன் நடவு செய்தல்:

இரண்டு இலைகளுடன் கூடிய 10-15 நாட்கள் வயதுள்ள நாற்றுக்களை நட வேண்டும். இதனால் அதிகத் துார்கள் உருவாகுவதோடு, அதிகமான வேர்கள் வளர்கின்றன. 30 துார்களை எளிதில் பெறமுடியும் சில சமயங்களில் செடிக்கு 50 துார்களை கூட பெறலாம்.

நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை எடுத்தல்:

நல்ல தரமான 18”/15” உள்ள இரும்பு அட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும். நாற்றங்காலில், 3 இஞ்ச் ஆழத்திற்கு அடியில் இந்த இரும்பு அட்டையை, உள்ளே செலுத்த வேண்டும். பிறகு மெல்ல தகட்டை வெளியே எடுக்க வேண்டும். இதனால் நாற்றுகள் மண்ணுடன் இரும்பு தகட்டின் மேல் வந்து விடும். நாற்றுகளை மண்ணுடன் நடவு வயலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் கொண்டு, நாற்றுகளை தனித்தனியே வேர்களுக்கு சேதமில்லாமல் மண்ணுடன் பிடுங்க வேண்டும். அகன்ற இடைவெளியில், சதுர வடிவில் நாற்றுகளை நடவும்.

நடவு வயலை தயார் செய்தல்:

நிலத்தை எப்பொழுதும் போல் நன்றாக உழ வேண்டும். இரண்டு மீட்டர் இடைவெளியில், 25 செ.மீ கால்வாய்கள் அமைக்க வேண்டும். கால்வாய் அமைக்க, தேவைப்பட்ட இடைவெளியில் குச்சிகளை, (2மீ, 30 செ.மீ) வயலின் வரப்புகளில் நட வேண்டும். வயலின் குறுக்கே 25 செ.மீ இடைவெளியில் கயிறு போட்டு, இரு கயறுகளுக்கும் இடையில் உள்ள மண்ணைத் தோண்டி இருபக்கமும் போட்டு, வாய்க்கால் அமைக்க வேண்டும். வயலை நன்றாக சமம்படுத்த வேண்டும். 25 செ.மீ இடைவெளியில் வாருகோல் கட்டையைப் பயன்படுத்தி கோடுகள் போட வேண்டும். பிறகு வாருகோல் கட்டை கொண்டு குறுக்கே கோடுகள் இழுக்க வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் சதுரக்கட்டங்களின் சந்திப்பு முனைகளில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

கர்நாடகாவில், நடவு செய்த 15 மற்றும் 45 நாட்களுக்கு இடையில், “கொருகு” வை வயலின் குறுக்கே பல முறை இழுக்க வேண்டும். இதனால் இளம் செடிகள் ஒடியாமல், செடிகள் அதிக துார்கள் மற்றும் வேர்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படுகிறது.

கர்நாடகாவில், “யாதே குன்டே” என்ற நீண்ட கைப்பிடியுடன் பிளேட் கொண்ட கருவியை, இரு வரிசைகளுக்கு (45 செ.மீ) இடையிலும், செடிகளுக்கு இடையிலும், பயன்படுத்தி, மண்ணில் காற்றோட்டம் ஏற்ப்படுத்தப்படுகிறது. இதனால் களைகள் அகற்றப்படுகிறது.

ii. கவனமாக நடவு செய்தல்

நாற்றுகளை பிடுங்கி நடவு செய்யும் போது ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பது அவசியம். நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை மிக கவனமாக மண்ணுடன் பிடுங்கி, நாற்றை அதிக ஆழமில்லாமல் நட வேண்டும். நாற்றுடன் விதை நன்றாக ஒட்டியிருக்க வேண்டும். நாற்றை பிடுங்கியவுடன் அரை மணி நேரத்திற்குள் அல்லது 15 நிமிடத்திற்குள் நடவு செய்துவிட வேண்டும். இதனால் நாற்று அதிர்ச்சி, நாற்றுக்கள் உலர்ந்து போதல் தவிர்க்கப்படும்.

நாற்றுகளை நடும்பொழுது, வேர் நுனி பாதிக்காதவாறு கவனமாக, நடவு செய்ய வேண்டும். வேர் நுனி மேல் நோக்கி ‘J’வடிவத்தில் மடிந்து இருந்தால், அது திரும்ப பழைய நிலைக்கு சாதாரணமாக வந்து வளர்வதற்கு ஒரு வாரம் ஆகிவிடும். எனவே நாற்றுகளை மண்ணில் அழுத்தக் கூடாது. எனவே, ஒவ்வொரு நாற்றையும், மெதுவாக மண்ணின் மேற்பரப்பிற்கு அருகிலேயே, வேர் சாய்வாக இருக்குமாறு நடவும். இதனால் வேர்கள் ‘J’ வடிவம் போன்று இல்லாமல், ‘L’ வடிவமாக இருக்கும் மற்றும் வேர்கள் கிழ்நோக்கி நன்றாக வளரும். சதுரக் கோடுகளின் சந்திப்பில் மட்டும் ஒற்றை நாற்றை மட்டுமே நடவேண்டும்.

iii. அகன்ற இடைவெளி

கேழ்வரகு செடிகளை, அகன்ற இடைவெளியில், அடர்த்தியில்லாமல் நடும் பொழுது, அதிகமான துார்கள், வேர்களின் வளர்ச்சி, கதிர் மணி முழுமையாக நிரம்புதல் ஆகியவற்றிற்கு ஏதுவாகுகிறது. 25 செ.மீ x 25 செ.மீ இடைவெளியில், சதுர வடிவில் நாற்றுகள் நடப்படுகிறது. அகன்ற இடைவெளிவிடும் பொழுது, வேர்கள் வளர அதிக இடம் கிடைக்கிறது. செடிகளுக்கு அதிக சூரிய ஒளி, காற்று மற்றும் சத்துக்கள் கிடைக்கிறது. இதனால் அதிக வேர் வளர்ச்சி மற்றும் துார்கள் உற்பத்தியாகிறது. சதுர வடிவ நடவு, இரு திசைகளிலும் களையெடுக்க வசதியாக்குகிறது. இதனால் ஒவ்வொரு செடியின் வளர்ச்சிக்கும் அதிக இடம் கிடைக்கிறது.

iv. களையெடுத்தல் மற்றும் காற்றோட்டம்

திருந்திய கேழ்வரகு சாகுபடி முறையில், வயலில், தண்ணீர் தேங்கி நிற்காததால், களைகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். சாதாரண கைக்கொத்து (சுழலும் கொத்து) பயன்படுத்தி மண்ணைக் கிளறி விட்டு களையைக் கட்டுப்படுத்தவும். களைக் கொத்தை 2-3 முறை சுழற்ற வேண்டும். இதனால் களை மண்ணோடு மண்ணாக சேர்ந்து விடுகிறது. நடவு செய்த 10-12 நாட்களில், முதல் களையெடுத்து, களைகள் முளைக்கும் போதே அகற்றிவிடவேண்டும். 10 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து களைகள் எடுக்க வேண்டும். சுழலும் கொத்து கொண்டு களையெடுப்பதால் நல்ல, காற்றோட்டம் மற்றும் அதிமான வேர் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், களையைக் கட்டுப்படுத்தி வேர்களுக்கு அதிக அளவில் பிராணவாயு மற்றும் நைட்ரஜன் கிடைக்க வழிசெய்யப்படுகிறது. மண்ணோடு மண்ணாக சேர்க்கப்பட்ட களைகளின் தழைகளினால், ஒரு எக்டருக்கு 1 டன் பசுந்தாள் உரம் ஒவ்வொரு களையெடுப்பின் போது சேர்க்கப்படுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது.

நீர் மேலாண்மை

திருந்திய கேழ்வரகு சாகுபடி முறையில், தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. முறையாக, சீரான பாசனம் செலுத்தி மண்ணை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சலும், பாய்ச்சலும் மூலமாக பாசனம் செய்தால், காற்றுள்ள மற்றும் காற்றில்லா சூழலை மண்ணில் ஏற்படுத்தி, எளிதாக நுண்ணுாட்டங்கள் பயிர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் வேர்கள் அழிந்து போவது தடுக்கப்படுகிறது. நீர் தேங்கிய நிலைமையில் இயந்திரம் மூலம் களையெடுப்பதால், மண்ணின் காற்றோட்டம் அதிகரிக்கப்படுகிறது. அதிக வேர் வளர்ச்சி உண்டாக்குவதால், மண்ணில் உள்ள சத்துக்கள் எளிதாக பயிர்களுக்கு சென்றடைகிறது.

தாவர அமைப்பு

ராகி – எல்லுாசின கோரகானா

வட்டாரப் பெயர்கள்

ஆங்கிலம்: பிங்கர் மில்லட், ஆப்பிரிக்கன் மில்லட்

ஹிந்தி: ராகி, மண்டிகா, மரவா, மட்டுவா

தெலுங்கு: ராகி, சோடி

தமிழ்: கேப்பை, ராகி, கேழ்வரகு

மலையாளம்: முத்தாரி, ராகி

கன்னடம்: ராகி

கேழ்வரகு வகைப்பாடு

தொகுப்பு: பிளேன்டே

பிரிவு: மேக்னோலியோபைட்டா

வகை: லில்லியோப்சிடா

வகுப்பு: போயேல்ஸ்

குடும்பம்: கிரமினே

துணைக்குடும்பம்: குளோரிடோய்டே

பேரினம்: எல்லுாசின

சிற்றினம்: கோரகானா

கேழ்வரகு செடியின் பாகங்கள்

வேர்

 • ராகி சல்லி வேர் அமைப்பை பெற்றிருக்கும்.
 • வேர் ஆழமில்லாமல், கிளைகளுடன் இருக்கும். கீழ்க்கணுக்களில் இருந்து வேர் மண்ணிற்கு போகும்.
 • விதை முளை விட ஆரம்பித்தவுடன், முளை வேர் வெளியே துளைத்து கொண்டு வந்து சல்லி வேராக மாறும்.
 • சல்லி வேரில் இருந்து பக்க வேர்கள் தோன்றும்.
 • நாற்று வளர வளர, அடிக் கணுவில் இருந்து, சல்லி வேர்கள் தோன்றும்.
 • நாற்றுகளை பிடுங்கும்போது வேர்கள் எளிதாக அறுந்துவிடும். இருப்பினும், புதிய வேர்கள் சீக்கிரமே தோன்றும்.

தண்டு

 • மெலிதான, நேரான, உள்ளடங்கிய நிலையில், மென்மையான தண்டுடன் காணப்படும். சில நேரங்களில் கிளைகள் இருக்கும்.
 • தண்டு, உள்ளடங்கிய நிலையில், நீள்வட்டமாக, பச்சை நிறத்தில் இருக்கும்.
 • செடி, பருமனாக அதிக துார்களுடன், ஒரு பருவ புல்லாக, 170 செ.மீ உயரம் வரை வளரும்.
 • தண்டின் இடைக்கணுப் பகுதியில் வெற்றிடமாகவும், கணுப்பகுதியில் கெட்டியாகவும் இருக்கும்.
 • அடிக்கணுக்கள், சிறியதாகவும், நீளமாக உள்ள நுனிக்கனு பூங்கொத்தைத் தாங்கியிருக்கும்.

இலை

 • சிறிய மெல்லிய தண்டின் மீது அதிகமான இலைகளைக் கொண்டிருக்கும்.
 • நீள் வட்ட தண்டின் இரு புறமும், மாற்றிலை அமைவுடன் இலைகள் அமைந்திருக்கும். பச்சைநிறத்தில் காணப்படும்.இலைகள் வரிசையாக, முழுமையாக வளரும்.
 • இலையுறை பட்டையாக, ஒன்றின்மேல் ஒன்றாக தண்டைச் சுற்றி காணப்படும். சில இடைக்கணுக்கள் வெளியே தெரியும்.
 • இலை பரப்பு தெளிவான நடு நரம்புடன், நுனியில் முடிக்கற்றைகளுடன் காணப்படும். இலைப்பரப்பு, நீண்டு, கூர்மையான நுனியுடன், மடிந்து கோடுகளுடன் காணப்படும்.
 • இலையின் வெளிப்புற வளர்ச்சி 1-2 மிமீ நீளத்துடன் புற நுண்ணிழைகளுடன் இருக்கும்.
 • நன்கு வளர்ந்த இலைகள், மேல் பாதிப் பகுதியில் இருந்து மடிந்து காணப்படும். எனவே, “மடிந்த இலைகள்” என்று அழைக்கப்படும்.
 • தண்டின் இடைக்கணுக்கள் ஒரே மாதிரியான நீளத்துடன் இருக்காது.
 • தண்டின் அடிப்பாகத்தில் கணுக்கள் கூட்டமாக காணப்படுவதை ‘நெருக்கமான கணுக்கள்’ என அழைக்கப்படுகிறது.
 • தண்டுப்பகுதயில் 2-4 கணுக்கள் கூட்டமாக அமைந்திருக்கும்.

கதிர்

 • தண்டின் நுனியில் மஞ்சரி (அ) கதிர் உருவாகும். முக்கிய கொத்திற்கு கீழே ஒன்று அல்லது அதற்க மேற்பட்ட 4-19 கிளைகளை உடைய இலைகளுடன் காணப்படும்.
 • செடியின் நீளமான காம்புப் பகுதியில் பூங்கொத்து தோன்றும். 3-20 எண்ணிக்கையிலான கதிர்கள் பறவையின் கால் அமைப்பு போன்று கதிர்க் கொத்தில் அமைந்திருக்கும். இது பார்ப்பதற்கு கையில் விரல்கள் அமைப்பு போன்று தோன்றுவதால் ‘பிங்கர் மில்லட்’ என்றழைக்கப்படுகிறது.
 • மலர்க் காம்புகள் தட்டையாக காணப்படும்.
 • கிளைகள், மெலிதாகவும், பருமனாகவும் காணப்படும். நீட்டமாகவும், நீள் உருண்டையாகவும், 24 செ.மீ நீளம் வரை கிளைகள் இருக்கும். ஒவ்வொரு கிளையிலும் 60-80 கதிர்க் கிளைகள் தோன்றும்.
 • நான்கு வகையான கதிர்கள் உள்ளன. அவை (1) மேல்புறம் வளைந்தவை (2) உட்புறம் வளைந்தவை (3) திறந்த நிலை கதிர் (4) மூடிய கதிர் ஆகும்.
 • உட்புறம் வளைந்த கதிரில், கதிர் கிளைகள் குட்டையாக, உள்நோக்கி வளைந்து, கதிருக்கு தலைகீழ் முட்டை வடிவத்தை அளிக்கும்.
 • மேற்பகுதி வளைந்த கதிரில், கதிர் கிளைகள் நீட்டமாக இருக்கும். மத்தியில் வெற்றிடமாகக் காணப்படும்.
 • திறந்தநிலைக் கதிரில், கதிர்கிளைகள் அதிக நீட்டத்துடன், புனல் போன்ற வடிவத்தில் காணப்படும்.
 • மூடிய கதிரில், கதிர் கிளைகள் முழுமையாக உள்நோக்கி வளைந்து, உருண்டை வடிவத்தில் தெரியும்.

கதிர்க்கிளைகள்

 • கதிரின் நுனிக் கிளைகளில் சிறிய கதிர் காம்பின் மீது கதிர்கிளைகள் காணப்படும்.
 • கதிர் கிளைகள், வளைந்து, கொத்தாக, 2-4 பூக்களுடன் காணப்படும்.
 • முட்டை அல்லது நீள்வட்ட வடிவத்திவ் 10 மிமீ வரை இருக்கும்.
 • கதிர் கிளைகள், காம்பில்லாமல் கதிர்காம்பின் ஒரு பக்கத்தில் இரண்டு வரிசைகளில் கதிர்காம்பின் மீது மாறி மாறி அமைந்திருக்கும்.
 • சுமார் 70 கதிர்கள் ஒன்று விட்டு ஒன்றாக மாற்றமைப்புடன் காணப்படும். 4-7 விதைகள் வரை ஒவ்வொரு கதிர் கிளையிலும் இருக்கும்.
 • ஒவ்வொரு கதிர் கிளையிலும் 3-7 பூக்கள், பூக்காம்புச் செதில் மற்றும் பூச்செதிலால் மூடப்பட்டிருக்கும்.
 • கீழ்க் கொம்பை, அகன்று, படகு போன்று, பக்க நரம்புடன் காணப்படும்.
 • மேல்க்கொம்பை, கீழ்க்கொம்பை போன்றே இருக்கும். ஆனால் சற்று நீளமாக இருக்கும்.
 • கீழ் இரண்டு கொம்பைகள் 1-4 மிமீ நீளத்துடன் மற்றும் 5-7 நரம்புகளுடன், கதிரில்லாமல் காணப்படும்.
 • இருபால் பூக்களை கொண்டிருக்கும். நுனிப்பூ சில சமயம் மலட்டுப்பூவாகவோ அல்லது ஆண் பூவாக இரண்டு வரிசையில் எதிர் எதிராக சிவிரிதழ்களோடு அமைந்திருக்கும்.
 • பூக்கும் பூக்காம்புச்செதில் முட்டை வடிவத்தில் கூர்மையாக, 3 நரம்புகளுடன் 2-5 மிமீ நீளத்துடன் இருக்கும்.
 • பூச்செதில், பூக்காம்புச் செதிலைவிட சிறிதாக, இரண்டு படகு போன்று, இரு இறக்கைகளுடன் தோன்றும்.
 • இரண்டு அகன்ற சிவரிதழ்கள் இருக்கும். 3 மகரந்த கேசரம், மேல் சூலகம், இரண்டு தனி சூழ் தண்டுடன், சூழ் முடியுடன் பூக்கள் காணப்படும்.
 • நான்கு வகையான கதிர் வகைகளிலும், கதிர்க்கிளை நீளம் வேறுபட்டிருந்தாலும், கதிர்க்கிளைப் பூக்களின் எண்ணிக்கையில் பெரிய வேறுபாடு இல்லை. ஒரு கதிர்க் கொத்தில் 67-73 கதிர்க் கிளைகள் காணப்படும்.
 • ஒவ்வொரு கதிர்கிளையிலும், கீழிருந்து மேல் நோக்கி பூக்கள் மலர்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு பூ மலர்கிறது. பூக்கும் காலம் முடிய 7-8 நாட்கள் ஆகும்.

கதிர் மணி

 • கதிர் மணி உருண்டையாக, மென் தோலுடன், நிறமற்று நெருக்கமாக இல்லாமல் காணப்படும்.
 • தோல் நீக்கப்பட்ட தானியம், உருண்டை வடிவத்தில், பழுப்பு நிறம், சிவப்பு கலந்த பழுப்பு நிறம், கருப்பு, ஆரஞ்சு சிவப்பு, ஊதா மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.
 • மணியின் அடிப்பகுதி தட்டையாக, சிறு குழி போன்ற விதைத் தழும்புடன் காணப்படும்.
 • தானியத்தில் தோன்றும் சிறிய தட்டையான பகுதி, முளைக் கருவின் இருப்பிடத்தைக் காட்டும்.
 • சூலகத்தின், இரண்டு சூல் உறைகளில் இருந்தும் விதை உறை உருவாகும். இது அடிப்பகுதியைத் தவிர, மற்றப் பகுதிகளுடன் ஒட்டாமல் காணப்படும்.
 • முதல் நிலைகளில், வெளிப்பகுதியை விட உட்பகுதிகளில், இரண்டு மடங்கு அதிகமான செல்கள் இருக்கும்.
 • வெளிப்புறத்தில் செல்கள் சுருங்குவதால், பல்வேறு சமமில்லாத மேடுகள் தோன்றும். முதிர்ந்த தானியத்தில் எண்ணற்ற அடர் அமைப்புகள் காணப்படும்

நாற்றங்கால் நிர்வாகம்

நாற்றங்கால் தயார் செய்தல்

நன்கு தயார் செய்யப்பட்ட நாற்றங்கால் பாத்திகளில், மே-ஜுன் மாதங்களில், நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாற்றுகள் 3-4 வாரங்களில், நடவிற்கு தயார் ஆகிவிடுகிறது.

நிலம் தயாரித்தல்

 • ஒரு எக்டர் வயலில் நடவு செய்யத் தேவைப்படும் நாற்றுகள் வளர்க்க 12.5 சென்ட் (500 மீ) நாற்றங்கால் பரப்பு தேவை.
 • நீர் தேங்காத, நீர் ஆதாரத்திற்கு அருகில் உள்ள இடமாக இருக்க வேண்டும்.
 • நாற்றங்கால் பாத்திகளை நல்ல புழுதி வருமாறு தயார் செய்து, இயற்கை உரங்கள் கலந்து ஊட்டமளிக்க வேண்டும்.
 • 37.5 கிலோ சூப்பர் பாஸ்பேட்டுடன் 500 கிலோ தொழு உரம் கலந்து, நாற்றங்கால் பாத்திகளில் சீராக பரப்பிவிடவும்.
 • இறக்கை கலப்பைக் கொண்டு 2-3 முறை அல்லது நாட்டுக் கலப்பை கொண்டு 5 முறை உழ வேண்டும்.

 

மேட்டுப்பாத்தி தயாரித்தல்

 • 3 மீ x 1.5 மீ அளவுள்ள 6 பாத்திகள் அமைக்கவும். ஒவ்வொரு பாத்திக்கும் நீர் பாய்ச்ச 30 செ.மீ இடைவெளி விடவும்.
 • இடைவெளியில் உள்ள மண்ணை 15 செ.மீ ஆழத்திற்கு தோண்டி வாய்க்கால் ஆக்கவும். தோண்டிய மண்ணை பாத்திகள் மேல் போட்டு சமப்படுத்தி விடவும்.

 

விதைகளைத் தேர்வு செய்தல்

விதையளவு: 4-5 கிலோ/எக்டர்

 • விதைகள் நல்ல இரகமாக இருக்க வேண்டும்.
 • விதைகளை சுத்தமாகவும், மற்ற விதைக் கலப்படமில்லாமலும் இருக்க வேண்டும்.
 • முதிர்ந்த, நன்கு உருவாகிய குண்டு விதைகளாக இருக்க வேண்டும்.
 • தரமில்லாமல் சேமிக்கப்பட்ட, வயதான விதைகளாக இருக்கக் கூடாது.
 • விதைகளின் முளைப்புத்திறன் அதிகமாக இருக்க வேண்டும்.

விதை நேர்த்தி

i. இரசாயண விதை நேர்த்தி

 • விதைகளை பாலீத்தின் பைகளில் போட்டு, திரம் 4 கிராம்/கிலோ (அ) கேப்டான் 4 கிராம்/கிலோ (அ) கார்பன்டசீம் 2 கிராம்/கிலோ மருந்துகளுடன் சீராக கலக்கவும்.
 • விதைகளின் மேல் இரசாயணப் பொருள்கள் கலக்க வேண்டியிருந்தால், முதலில் அதைச் செய்துவிட்டு, பிறகு விதைப்பதற்கு முன் உயிர் உரங்கள் இடவும்.

II. உயிர் உர விதை நேர்த்தி

 • அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட்/எக்டர் (600 கிராம்/எக்டர்) மற்றும் 3 பாக்கெட்/எக்டர் (600 கிராம்/எக்டர்) பாஸ்போ பாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்யவும். அல்லது அசோபாஸ் (1200 கிராம்/எக்டர்) பயன்படுத்தவும்.

விதைகளுக்கு உயிர் உரங்கள் உட்செலுத்தும் செயல்முறை

 • பயிருக்கான உயிர் உர ஊடகத்தை @ 25 கிராம்/கிலோ விதை என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.
 • நல்ல விதை நுன்ணுயிரேற்றலுக்கு, ஒட்டும் திரவம் தேவை. 25 கிராம் வெல்லம் அல்லது சக்கரையை 250 மில்லி தண்ணீரில் கலந்து, 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு இந்த கரைசலை குளிர வைக்கவும்.
 • தயார் செய்யப்பட்ட ஒட்டும் திரவத்தை விதையுடன் நன்கு பூசவும். பிறகு, நுண்ணுயிர் ஊடகம் படியுமாறு நன்றாக கலக்கவும்.
 • நுண்ணுயிர் ஏற்றப்பட்ட விதைகளை கட்டியாகாமல் இருக்கும் நிழலில் உலர்த்தவும்.
 • நுண்ணுயிர் ஏற்றப்பட்ட விதைகளை விதைக்கவும்.

iii. மாட்டுக்கோமயம் விதை நேர்த்தி

 • விதைகளை மாட்டுக் கோமியம், உப்புத் தண்ணீர் மற்றும் பெருங்காயத்துடன் கலந்து விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
 • 1 பகுதி மாட்டுக் கோமியத்தை 10 பகுதி தண்ணீருடன் கலக்கவும்.
 • கேழ்வரகு விதைகளை இந்த கரைசலில் போட்டு 15 நிமிடம் காத்திருக்கவும்.
 • பிறகு பதரான மிதக்கும் விதைகளை அகற்றவும்.
 • கடினமான விதைகளை பிரிக்க தண்ணீரை கீழே ஊற்றவும்.

விதை விதைத்தல்

 

 • வரிசை விதைப்பாகவோ (அ) கை விதைப்பாகவோ 5 கிலோ விதைகளை பாத்திகளில் சீராக விதைக்கவும். திருந்திய கேழ்வரகு சாகுபடியில், ஒரு எக்டருக்கு 1.5 கிலோ நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் பயன்படுத்தவும்.
 • மண்ணின் மேல் லேசாக கிளறிவிட்டு மண்ணை மூடவும்.
 • 500 கிலோ தொழு உரத்தை பாத்திகளின் மேல் துாவிவிட்டு விதைகளை மூடிவிட்டு மேற்பரப்பை சிறிது இறுக்கமாக்கவும். (விதைகளை ஆழமாக உழுதால், முளைப்பு பாதிக்கும்)

நீர் மேலாண்மை

ஒவ்வொரு நாற்றங்கால் பகுதிக்கும், ஒரு உள்வாயில் அமைக்கவும். உள்வாயில் மூலம் தண்ணீர் விட்டு வாய்க்காலைச் சுற்றி தண்ணீர் விடவும். மேட்டுப் பாத்திகள் ஈரமடையும் வரை, வாய்க்காலில் தண்ணீர் விட்டு பின் நிறுத்திவிடவும். மண்ணின் வகையைப் பொருத்து, நீர் பாசன இடைவெளி வேறுபடும்.

 

பாசன எண்ணிக்கை

செம்மண்

கடின மண்

முதல் முறை

விதைத்தவுடன்

விதைத்தவுடன்

இரண்டாவது

விதைத்த பின் 3 ஆம் நாள்

விதைத்த பின் 4 ஆம் நாள்

மூன்றாவது

விதைத்த பின் 7 வது நாள்

விதைத்த பின் 9 வது நாள்

நான்காவது

விதைத்த பின் 12 வது நாள்

விதைத்த பின் 16 வது நாள்

ஐந்தாவது

விதைத்த பின் 17 வது நாள்

—–

 • செம்மண்ணிற்கு, மூன்றாவது நாள் நீர் பாய்ச்சி, கடின மேற்பரப்பு இலகுவாக்கப்படுகிறது. இதனால் நாற்றுகள் எளிதாக முளைத்து விடும்.
 • முறையாக, சீரான நீர் பாய்ச்சி, நாற்றங்கால் பாத்தியில் பிளவுகள் ஏற்படாவாறு பார்த்துக் கொள்ளவும்.

பயிர் பாதுகாப்பு

 1. வெட்டுப்புழு

புழு பொதுவாக நாற்றங்காலில் உண்கிறது. புழு, பகலில் மண்ணில் மறைந்து கொண்டு, இரவில் இலைகளை உண்ணும். இளம் புழுக்கள், நாற்றுக்களின் அடிப்பாகத்தை வெட்டும். இறுதியாக செடி முழுவதையும் உண்டுவிடும்.

எண்டோசல்பான் 35 EC @ 0.75 லிட்டர்/எக்டர் (அ) கார்பரில் 50 WP 2.5 கிலோ/எக்டர் (அ) குளோர்பைரிபாஸ் 20 EC 2 லிட்டர்/எக்டர் (அ) பேசலோன் 35 EC @ 1.25 லிட்டர்/எக்டர் தெளித்து பூச்சியைக் கட்டுப்படுத்தவும். களை மற்றும் எஞ்சிய பயிர் கழிவுகளை அகற்றவும். கோதுமைத் தவிடு 1 கிலோ + மோனோகுரோட்டோபாஸ் (10 மில்லி) 100 கிராம் வெல்லம் ஈரப்படுத்த தண்ணீர் கலந்து நச்சுப் பொறி வைக்கவும்.

 

ii. வெட்டுக்கிளி

வெட்டுக்கிளி பல தாவர உண்ணும் பூச்சியாகும். இது கேழ்வரகின் இளம் இலை மற்றும் தண்டுகளை உண்கிறது. இளம் குஞ்சுகளும், முதிர் பூச்சிகளும் இலை உண்டு, இலைகளின் ஓரத்தில் உண்ட குறிகளை ஏற்படுத்தும். கைவினை முறைகளான, உழுதல், சுத்தமாக வைத்தல், கவர்ச்சி பயிரிடுதல், முன் விதைப்பு, முன் அறுவடை போன்றவற்றை பின்பற்றி நீண்ட கால அளவில் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். எண்டோசல்பான் 35 EC 400 மில்லி/லிட்டர் (அ) கார்பரில் WP 400 கிராம்/லிட்டர் தண்ணீர் தெளிக்கவும்.

 

iii. குலைநோய்

முளைத்த இரண்டாம் வாரத்தில் இருந்து குலைநோய் தாக்கம் நாற்றங்காலில் தோன்றும். துவக்க நிலையில், இலைகளில், நீள் உருண்டை வடிவப்புள்ளிகள், மஞ்சள் விளிம்புகளுடன் சாம்பல் நிற மைத்துடன் காணப்படும். பின்னர் புள்ளி சாம்பல் வெள்ளை நிறத்தில் மாறி, இறுதியாக இளம் இலைகள், நாற்றங்காலிலேயே காய்ந்து விடும்.

பூஞ்சாணக் கொல்லிகளை, கார்பன்டசீம் 0.1% (அ) எடிபென்பாஸ் (10 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து) போன்றவற்றில் ஏதாவது ஒன்றை, 3 சென்ட் நாற்றங்கால் பரப்பை கவரக்கூடிய, அதிக அளவு தெளிப்பான் பயன்படுத்தி, விதைத்த 10-12 நாட்களுக்கு பின் தெளிக்கவும். கார்பன்டசீம் 1 கிராம்/ 1 கிலோ விதை உபயோகப்படுத்தி விதை நேர்த்தி செய்யவும். சூடோமோனாஸ் (2 கிராம்/லிட்டர் தண்ணீர்) உயிர் பூஞ்சாணக் கொல்லியை நோய் அறிகுறி கண்டவுடன் தெளிக்கவும். நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட கோ (ஆர்.ஏ) 14, பையூர் (ஆர்,ஏ) -2, ஜி.பி.யு- 28, ஜி.பி.யு- 45, ஜி.பி.யு- 48, எல்-5, இரகங்களை பயிர் செய்யவும். வளமான விதைகளை பயன்படுத்தி குலைநோயை தவிர்க்கவும்.

 

iv. நாற்று கருகல்

நோய்க் கிருமி, நாற்றுகளையும், பெரிய செடிகளையும் தாக்குகிறது. முதல் அறிகுறி இளம் இலைகளில், லேசான காப்பி நிற புள்ளிகளாகத் தோன்றி பின்னர் அடர் காப்பி நிறத்திற்கு மாறிவிடும். நாற்றுகள் வளர வளர, இப்புள்ளிகள் நீண்டு 1 செ.மீ நீளம் , 1-2 மி.மீ அகலத்திற்கு மாறி அடர் காப்பி நிறத்திற்கு மாறிவிடும். இவ்வாறு உள்ள புள்ளிகள் இணைந்து இலைகளில் தழும்புகளாகத் தோன்றும். பாதிக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து, நாற்றுகள் செத்துவிடும்.

மான்கோசெப் 1.2 கிலோ/எக்டர் (அ) டைத்தேன் Z -78 (2கிராம்/லிட்டர் தண்ணீர்) (அ) 1% போர்டோ கலவை (அ) காப்பர் ஆக்சிகுளோரைடு தெளிக்கவும். நோய்வாய்ப்பட்ட செடிகளை கண்டவுடன், பிடுங்கி அழித்துவிட வேண்டும்.

 

நாற்றுகளை நடவுக்காக பிடுங்குதல்

விதைத்த 17-20 ஆம் நாளில் நாற்றுகளை, நடவுக்காக பிடுங்கலாம். இரகம் மற்றும் வயதைப் பொருத்து, நடவு நாற்றுக்களுக்கான வயது நிர்ணயம் செய்யப்படுகிறது. ஈரமான, இலகிய மண்ணில், நாற்றின் வேர்களை கட்டை விரலால் அழுத்தி நடவு செய்யவும்.

நடவு நாற்றின் வயது பயிரின் வளர்ச்சியையும், மகசூலையும் நிர்ணயிக்கிறது. மிகக் குறைந்த வயதான (அ) அதிக வயதான நாற்றுகளை நடும் போது மகசூல் பாதிக்கிறது. வயதான நாற்றுகள் நடுவதைத் தவிர்க்கவும்.

 

நாற்று நேர்த்தி

நடுவதற்கு முன் நாற்றுகளை உயிர் உரங்களுடன் நேர்த்தி செய்து மகசூலை அதிகரிக்கலாம். அதன் செய்முறை.

 • ஒரு வாளி தண்ணீர் எடுக்கவும்.
 • பரிந்துரை செய்யப்பட்ட உயிர் உரத்தை, அசோஸ்பைரில்லம் (1000 கிராம்/எக்டர்) பாஸ்போபாக்டீரியா (1000 கிராம்/எக்டர்) எடுத்து தண்ணீரில் கலக்கவும்.
 • நாற்றுகளின் வேர்கள் கரைசலில் படுமாறு 20-30 நிமிடங்கள் நனைக்கவும்.
 • நாற்றுகளை எடுத்து உடனடியாக நடவு செய்யவும்.

பருவம் மற்றும் இரகங்கள்

ராகி பருவம் சார்ந்த பயிராக இல்லாததால், ஈரப்பதம் இருப்பினும் வருடம் முழுவதும் பயிர் செய்யலாம்.

காரீப் பயிர், மே – ஜுன் மாதத்தில் விதைக்கப்படுகிறது. மழை சரியான நேரத்தில் பெய்யவில்லை என்றால் ஆகஸ்ட் மாதம் வரை விதைக்கலாம். பூக்கும் பருவத்தில், பயிருக்கு ஏற்படும் அழுத்தத்தை தவிர்க்க, மானாவாரி சாகுபடியில், முன் விதைப்பு செய்யவேண்டும். நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில், பருவமழை பெய்தவுடன்,விதைக்க வேண்டும். உயரமான வட இந்திய மலை பகுதிகளில் ஜுன் மாதத்தின் இடையில் விதைக்கலாம். மானாவாரியாக, ஏப்ரல் அல்லது மே மாதம் முதலில் விதைக்கலாம். செப்டம்பர்-அக்டோபரில் ராபி பயிர் விதைக்கப்படுகிறது. கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் ஒரு பருவத்திற்கு மேலாக ராகி சாகுபடி செய்யப்படுகிறது. பாசனப் பயிர் சாகுபடியில் ஜுன்-ஜூலையிலும், கோடைப்பருவத்தில் பாசனத்துடன் டிசம்பர் – ஜனவரியிலும் நடவு செய்யப்படுகிறது.

வெவ்வேறு மாநிலங்களில் ராகியின் விதைப்பு மற்றும் அறுவடை பற்றிய விபரங்கள்:-

மாநிலம் விதைப்பு அறுவடை
முன் காரீப் காரீப் பின் காரீப் ராபி கோடை
பருவம்
முன் காரீப் காரீப் பின் காரீப் ராபி கோடை
பருவம்
கர்நாடகா ஏப்ரல்-மே ஜுன்-ஜூலை ஆகஸ்ட்-செப்டம்பர் அக்டோபர்-டிசம்பர் ஜனவரி-மார்ச் வருடம் முழுவதும்
தமிழ்நாடு சித்திரைப்
பட்டம் (ஏப்ரல்-மே)
ஆடிப்பட்டம் (ஜுன்-ஜூலை) புரட்டாசிப்
பட்டம் (செப்டம்பர்-அக்டோபர்)
மார்கழிப்
பட்டம் (டிசம்பர்-ஜனவரி)
செப்டம்பர்-அக்டோபர் நவம்பர் -டிசம்பர் மே- ஜுன் மே- ஆகஸ்

கேரளா :

கேரளாவில் பின் வரும் பருவங்களில் சாகுபடி செய்யப்படுகிறது

முன்பருவம் : ஜுன் – செப்டம்பர்

பின்பருவம் : ஜூலை – அக்டோபர்

கோடைப்பருவம் : டிசம்பர் – ஜனவரி முதல் மார்ச் – ஏப்ரல்

இரகங்கள்

மாநிலங்களுக்கான இரகங்கள் பற்றிய விபரங்கள்:-

மாநிலம் இரகங்கள்
கர்நாடகா இண்டாப் 5, இண்டாப்9, எல் 5, , ஜி.பி.யு 48*, ஜி.பி.யு 45*, எம்.ஆர் 6*, ஜி.பி.யு 28*, எம்.ஆர் 1, எம்.ஆர் 2, ஹெச் ஆர் 911, காவேரி, ஹம்சாஸ், அன்னபூர்னா, ஹகேரி 1, ஹகேரி 2, சக்தி ஹுலுபிலி, ஹஸ்தா, பி. எம் 9-1, பி.ஆர் 202(கோதாவரி),
தமிழ்நாடு கோ.ஆர்.ஏ (14) *, கோ 1**, கோ 2**, கோ 3, கோ 4, கோ 5, கோ 6, கோ 7**, கோ 8**, கோ 9**, கோ 10**,கோ 11**, கோ 12**, கோ 13**, கே1, கே2, கே5, கே6, கே7, டி.ஆர்.ஒய் 1, பையூர் ஆர்.ஏ (2) **, பையூர் 1**, ஜி.பி.யு 28, ஜி.பி.யு 48*, இண்டாப் 5, இண்டாப் 7, இண்டாப்9, பி.ஆர் 202
கேரளா பி.ஆர் 202, கே2,கோ 2**, கோ 7**, கோ 8**, கோ 9**, கோ 10**
* குலைநோய்க்கு எதிர்ப்புசக்தி உடையது
** வறட்சியைத் தாங்கக் கூடியது

மாநிலங்களுக்கான இரகங்கள் பற்றிய விபரங்கள்

தமிழ் நாட்டிற்கான இரகங்கள் பற்றிய விபரங்கள்-

வ. எண் இரகம் வயது பருவம் வெளியான வருடம் மகசூல் பண்புகள்
பாசனப் பயிர் மானாவாரி பயிர்
1 கோ 13
(கோ 7 x
டி.எ.எச் 107)
95 -100 நாட்கள் (மத்திய கால இரகம்) மார்கழிப்
பட்டம்
(டிசம்பர் –
ஜனவரி)
சித்திரைப்
பட்டம்
(ஏப்ரல்-மே)
ஆடிப்பட்டம்
(ஜுன்-ஜூலை)
புரட்டாசிப்பட்டம் செப்டம்பர்-அக்டோபர்
1988 – தானியங்கள்
பயிர் பெருக்க நிலைய விஞ்ஞானிகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.
தானிய மகசூல் பாசனப்பயிர்: 3600
கிலோ /எக்டர்
மானாவாரிப்
பயிர்: 2300
கிலோ /எக்டர்
வைக்கோல் மகசூல்
பாசனப்பயிர்: 10000
கிலோ /எக்டர்
மானாவாரிப்
பயிர்: 7500
கிலோ /எக்டர்
* எல்லா பருவங்களிலும்
பயிர் செய்யலாம்.

*கடலூர்,
விழுப்புரம்,
சேலம்,
நாமக்கல், தர்மபுரி, கோயமுத்தூர், ஈரோடு ஆகிய இடங்களில்
சாகுபடி செய்யப்படுகிறது.

* வறட்சியைத் தாங்கக் கூடிய தன்மை பெற்றது.

2 கோ 11
(எம்.எஸ் 2584 இல் இருந்து தனிவழித்
தேர்வு)
90-95 நாட்கள் (குறுகிய கால இரகம்) மார்கழிப்
பட்டம்
(டிசம்பர்-
ஜனவரி)
சித்திரைப்
பட்டம்
(ஏப்ரல்-மே)
ஆடிப்பட்டம்
(ஜுன்-ஜூலை)
புரட்டாசிப்பட்டம் செப்டம்பர்-அக்டோபர்
1978 தானிய மகசூல் மானாவாரிப்
பயிர்: 3250
கிலோ /எக்டர்
பாசனப்
பயிர்: 4750
கிலோ /எக்டர்
வைக்கோல் மகசூல் பாசனப் பயிர்: 8750
கிலோ /எக்டர்
மானாவாரிப்
பயிர்: 6250
கிலோ /எக்டர்
* வறட்சியைத் தாங்கக் கூடிய தன்மை பெற்றது.
3 கோ 10
மருவா ராகியிலிருந்து தனிவழித்
தேர்வு
85 நாட்கள் பிப்ரவரி-மார்ச்
1973 தானியம்: 3500 கிலோ /எக்டர் * வறட்சியைத் தாங்கக் கூடிய தன்மை
பெற்றது.
4 கோ 9 –
வெள்ளை
ராகி
100 நாட்கள் (குறுகிய கால இரகம்) மார்கழிப்
பட்டம்
(டிசம்பர்-
ஜனவரி)
சித்திரைப்
பட்டம்
(ஏப்ரல்-மே)
1970 – தானியங்கள்
பயிர் பெருக்க நிலைய விஞ்ஞானிகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.
தானியம்: 4500 கிலோ /எக்டர் * வறட்சியைத் தாங்கக் கூடிய தன்மை
பெற்றது.
* கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்கள்
தவிர பிற
அனைத்து
தமிழக மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.
5 கோ 10
(தனிவழித்
தேர்வு)
100 நாட்கள் (குறுகிய கால இரகம்) மார்கழிப்
பட்டம்
(டிசம்பர்-
ஜனவரி)
சித்திரைப்
பட்டம்
(ஏப்ரல்-மே)
ஆடிப்பட்டம்
(ஜுன்-ஜூலை)
புரட்டாசிப்பட்டம் செப்டம்பர்-அக்டோபர்
1953 தானிய மகசூல் மானாவாரிப்
பயிர்: 2750
கிலோ /எக்டர்
பாசனப்பயிர்: 4500
கிலோ /எக்டர்
வைக்கோல் மகசூல்
பாசனப்பயிர்: 7500
கிலோ /எக்டர்
மானாவாரிப்
பயிர்: 5000
கிலோ /எக்டர்
* வறட்சியைத் தாங்கக் கூடிய தன்மை
பெற்றது.
* மானாவாரி மற்றும் நீர்
பாசன
வசதியுடன் கூடிய சாகுபடிக்கு ஏற்றது
6 டி.ஆர்.ஒய் 1
ஹெச் ஆர் 374 இல் தேர்வு செய்யப்பட்டது
100 நாட்கள் (குறுகிய கால இரகம்) மார்கழிப்
பட்டம்
(டிசம்பர்- ஜனவரி)
1989 – அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
திருச்சி.
தானிய மகசூல் 4011
கிலோ /எக்டர்
வைக்கோல் மகசூல்
பாசனப்பயிர்: 6800
கிலோ /எக்டர்
* உவர் தன்மையைத்
தாங்கி நல்ல மகசூல் தரவல்லது.
* தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்கள்
தவிர அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி
செய்யலாம்.
7 கோ (ஆர்.ஏ)
14 – மாலவி
1305 x கோ 13
105-110 நாட்கள் (மத்திய கால இரகம்) மார்கழிப்
பட்டம்
(டிசம்பர்-
ஜனவரி)
சித்திரைப்
பட்டம்
(ஏப்ரல்-மே)
ஆடிப்பட்டம்
(ஜுன்-ஜூலை)
புரட்டாசிப்பட்டம் செப்டம்பர்-அக்டோபர்
2004 – தானியங்கள்
பயிர் பெருக்க நிலைய விஞ்ஞானிகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்
தானிய மகசூல் மானாவாரிப்
பயிர்: 2794
கிலோ /எக்டர்
பாசனப்பயிர்: 2892
கிலோ /எக்டர்
வைக்கோல் மகசூல் பாசனப்பயிர்: 8113
கிலோ /எக்டர்
மானாவாரிப்
பயிர்: 8503
கிலோ /எக்டர்
*எளிதாகக் கதிரடித்து விடலாம். சீரான முதிர்ச்சி மற்றும் சாயாத தன்மை பெற்றது.கழுத்து மற்றும் கதிர் குலை நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது.
* தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.
8 கோ 12
ரெட்டபுரான்
பி.ஆர் 722 இல் இருந்து
தேர்வு செய்யப்பட்டது.
110-120 நாட்கள் (மத்திய கால இரகம்) ஜுன்-ஜூலை
மற்றும்
டிசம்பர்-ஜனவரி
1985 தானிய மகசூல்
பாசனப்பயிர்: 4750
கிலோ /எக்டர்
மானாவாரிப்
பயிர்: 3250
கிலோ /எக்டர்
வைக்கோல் மகசூல் பாசனப்பயிர்: 8750
கிலோ /எக்டர்
மானாவாரிப்
பயிர்: 6250
கிலோ /எக்டர்
* குலை நோய்க்கு எதிர்ப்புசக்தி உடையது.
* வறட்சியைத் தாங்கக் கூடியது.
9 பையூர் 1
தனி வழித்
தேர்வு
115 – 120 நாட்கள் (மத்திய கால இரகம்) ஆடிப்பட்டம்
(ஜுன்-ஜூலை)
புரட்டாசிப்பட்டம் செப்டம்பர்-அக்டோபர்
1985 – மண்டல ஆராய்ச்சி நிலையம்-பையூர் தானிய மகசூல் : 3125
கிலோ /எக்டர்
வைக்கோல் மகசூல்: 5250 கிலோ /எக்டர்
* தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்
* வறட்சியைத் தாங்கக் கூடிய தன்மை பெற்றது
10 பையூர் (ஆர்.ஏ)
2 வி.எல் 145/செலக்சன்
10 இன் ஒட்டு
115 நாட்கள் (மத்திய கால இரகம்) ஆடிப்பட்டம்
(ஜுன்-ஜூலை)
புரட்டாசிப்பட்டம் செப்டம்பர்-அக்டோபர்
2008 – மண்டல ஆராய்ச்சி நிலையம்,
பையூர்
தானிய மகசூல் : 3150
கிலோ /எக்டர்
* இலைக் கொள்ளை நோய்க்கு முழு எதிர்ப்புத் திறன் கொண்டது. கழுத்து மற்றும் கதிர் குலைநோயை ஓரளவு தாங்கக் கூடிய தன்மை பெற்றது.
* தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சாகுபடிக்கு ஏற்றது.

 

கர்நாடகா மாநிலத்திற்கான இரகங்கள் பற்றிய விபரங்கள்-

வ. எண் இரகம் வயது பருவம் வெளியான வருடம் மகசூல் பண்புகள்
1 ஜி.பி.யு – 28
(கிருஷ்ணா)
இண்டாப் 5 x ஐஈ 1012
மத்திய கால இரகம் (110-115 நாட்கள்) பாசனத்துடனும் (கோடைப்பயிர்) மானாவாரியாகவும் (காரீப்) சாகுபடி செய்யப்படுகிறது 1998 – அனைத்திந்திய ஓருங்கிணைந்த சிறுதானிய மேம்பாட்டுத்திட்டம்,
யு.ஏ.ஸ், ஜி, கே. வி. கே, பெங்களூர்
பாசனப்பயிர்:
40 – 45 குவிண்டால்/எக்டர்
மானாவாரிப் பயிர்:
30 – 35 குவிண்டால்/எக்டர்
* அதிக மகசூல் தரக்கூடியது. கழுத்து மற்றும் கதிர் குலைநோய் எதிர்ப்புத் திறன் கொண்டது.
* கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முழுவதும் சாகுபடி செய்ய ஏற்றது.
2 ஜி.பி.யு – 26 குறுகிய கால இரகம் (90-100 நாட்கள்) பாசனத்துடனும் (கோடைப்பயிர்) மானாவாரியாகவும் (காரீப்) சாகுபடி செய்யப்படுகிறது 1998 – அனைத்திந்திய ஓருங்கிணைந்த சிறுதானிய மேம்பாட்டுத்திட்டம்,
யு.ஏ.ஸ், ஜி, கே. வி. கே, பெங்களூர்
30-35 குவிண்டால்/எக்டர் * இண்டாப் 9 இரகத்திற்கு இணையானது.
* மானாவாரியாக ஆகஸ்ட் மாதம் வரை பின் விதைப்பு, மற்றும் பாசன வசதியுடனும் கோடைப்பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. * கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முழுவதும் சாகுபடி செய்ய ஏற்றது.
3 ஜி.பி.யு 45 மத்திய கால இரகம் (105-110 நாட்கள்) மானாவாரி (காரீப்) சாகுபடி செய்யப்படுகிறது 2001 –யு.ஏ.ஸ், பெங்களூர்   * மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஜார்கண்ட், மஹாராஸ்டிரா ஆகிய மாநிலங்களில் சாகுபடி செய்ய ஏற்றது
4 4. ஜி.பி.யு 48 குறுகிய கால இரகம்
(90-100 நாட்கள்)
பாசனப்பயிர் யு.ஏ.ஸ், பெங்களூர் 37 குவிண்டால்/எக்டர் * குலைநோய் எதிர்ப்புத் திறன் கொண்டது. பாசன வசதி உள்ள இடங்களில் கவர்ச்சிப் பயிராக சாகுபடி செய்யலாம்.
* கர்நாடகா முழுவதும் மற்றும் தமிழ்நாட்டில் சில இடங்களில் சாகுபடி செய்ய ஏற்றது
5 எல்.5 நீண்ட கால வயதுடைய இரகம்
(115-120 நாட்கள்)
மானாவாரி பயிர் 2000 – வேளாண்மை
ஆராய்ச்சி நிலையம் – நாகனஹெல்லி,மைசூர்,
கர்நாடகா
3604 கிலோ/எக்டர் * இண்டாப் 9 இரகம் போன்று ஊதா நிறத்துடன் காணப்படும்.
* கழுத்து மற்றும் கதிர் நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது.
* கர்நாடக பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்றது
6 எம்.ஆர் 6 மத்திய கால இரகம்
(120 நாட்கள்)
பாசனத்துடனும் மானாவாரியாகவும் சாகுபடி செய்யப்படுகிறது யு.ஏ.ஸ், பெங்களூர் பாசனப்பயிர்:
45 – 50 குவிண்டால்/எக்டர்
மானாவாரி ப்பயிர்:
30 – 35 குவிண்டால்/எக்டர்
* கழுத்து மற்றும் கதிர் நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது
7 இண்டாப் 5 மத்திய கால இரகம் (105-110 நாட்கள்) பாசனப்பயிர்: கார்த்திகை & மார்கழிப்பட்டம் (அக்டோபர்-டிசம்பர்) மானாவாரி ப்பயிர்: ஆடிப்பட்டம் (ஜுன்-ஜூலை 1977 – யு.ஏ.ஸ், பெங்களூர் தானிய மகசூல் பாசனப்பயிர்:
4000 கிலோ /எக்டர்
மானாவாரிப்பயிர்:
2500 கிலோ /எக்டர்
வைக்கோல் மகசூல் பாசனப்பயிர்:
7500 கிலோ /எக்டர்
மானாவாரிப்பயிர்:
5200 கிலோ /எக்டர்
* அதிக மகசூல் தரக் கூடியது.
*தமிழ்நாடு (காஞ்சிபுரம், திருவள்ளூர்,.வேலூர், திருவண்ணாமலை, கடலூர்/விழுப்புரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, கோயமுத்தூர், ஈரோடு) மற்றும் கர்நாடகா முழுவதும் சாகுபடி செய்ய ஏற்றது.
8 இண்டாப் 7 110 நாட்கள் (மத்திய கால இரகம்) செப்டம்பர்- பிப்ரவரி 1980 தானிய மகசூல் மானாவாரிப்பயிர்:
4500 கிலோ /எக்டர்
பாசனப்பயிர்:
5000 கிலோ /எக்டர்
 
9 இண்டாப் 5 90 – 105 நாட்கள் ஜூலை – ஆகஸ்ட்
ஜனவரி – பிப்ரவரி
1988 தானிய மகசூல் மானாவாரிப்பயிர்:
4500 கிலோ /எக்டர்
பாசனப்பயிர்:
6000 கிலோ /எக்டர்
* அதிக மகசூல் தரக்கூடியது.
* கழுத்து மற்றும் கதிர் குலைநோய் எதிர்ப்புத் திறன் கொண்டது.
10 எம்ஆர் 1 120 – 135 நாட்கள் காரீப் 1998 – வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் – வி. சி. பார்ம், யு.ஏ.ஸ், மாண்டியா,   தென் கர்நாடகாவில், மானாவாரியாக காரீப் சாகுபடி செய்ய ஏற்றது
11 எம்ஆர் 2 125 – 130 நாட்கள்   1995 –யு.ஏ.ஸ், கர்நாடகா தானிய மகசூல் 3500 – 4000 கிலோ /எக்டர் கர்நாடகா முழுவதும் சாகுபடி செய்ய ஏற்றது
12 பைரபி
(பி. எம். 1)
106 – 108 நாட்கள் காரீப் & ராபி 1999 – ஓ. யு. ஏ. டி, பெர்கம்பூர்., மேற்கு வங்காளம் தானிய மகசூல் 2500 – 3000 கிலோ /எக்டர் கர்நாடகாவில், மத்திம நிலம் மற்றும் பாசன வசதி உள்ள இடங்களில் சாகுபடி செய்ய ஏற்றது
13 பி.ஆர் 202 100 – 105 நாட்கள் (மத்திய கால இரகம்) ஜூலை – ஆகஸ்ட் 1976 – ஆந்திராவில் வெளியிடப்பட்டது தானிய மகசூல் 5000 கிலோ /எக்டர் கர்நாடகா முழுவதும் சாகுபடி செய்ய ஏற்றது

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories