ரோஜா சாகுபடி தொழில்நுட்பம்

ரோஜா சாகுபடி தொழில்நுட்பம்
ரோஜா வாங்கி நடவு செய்வதைக் காட்டிலும் ஒட்டு ரோஜா செடிகள் நடவு செய்தால் நல்ல விலை மார்க்கெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதுமட்டும் அல்லாது மாலை கட்டி வைத்தால் இரண்டு நாட்களுக்கு அப்படியே இருக்கும். சாதா ரோஜா செடி நடவு செய்வதை விட ஒட்டு ரோஜாவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது
மண் மற்றும் தட்பவெப்பநிலை :
நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் அல்லது
குறுமண் நிலம் ஏற்றது. சமவெளிப் பகுதியில் பயிரிடலாம்
ஒட்டும் கட்டிய செடிகளை வாங்கி நடவு செய்யலாம்
ரோஜா செடி நடவு செய்தவுடன் செடிகளுக்கு நீர்ப்பாய்ச்ச வேண்டும். செடிகள் வேர்ப்பிடித்து துளிர்விடும் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும், பின்பு மண் மற்றும் கால நிலைகளுக்குத் தகுந்தவாறு வாரத்திற்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
கவாத்து செய்தவுடன் செடியைச் சுற்றி 2 அடி தள்ளி தொழு உரத்துடன் உயிர் உரங்கள் கலந்து போடலாம்
ஒரு ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம் 5 கிலோ,
பாஸ்போபாக்டீரியா 5 கிலோ
வேம் 5 கிலோ,
பொட்டாஷ் பாக்டீரியா 5 கிலோ,
நன்கு மக்கிய தொழுவுரம் 200 கிலோ
முதலியவற்றை கொட்டி கட்டிகள் இல்லாமல் கலக்க வேண்டும். பிறகு அவற்றுடன் 2 கிலோ நாட்டு சர்க்கரையை தண்ணீர் ஊற்றி கரைத்து உயிர் உரக்கலவையில்ஊற்றி திரும்பவும் நன்கு கலக்க வேண்டும். அனைத்தும் கலந்த கலவை புட்டு பதத்தில் இருக்க வேண்டும்.
இக்கலவையை நிழலில் ஒருவாரம் வரை கோணிசாக்கு போட்டு மூடி வைக்க வேண்டும் தினமும் ஒரு முறை தண்ணீர் தெளிக்கவும் ஒரு வாரம் கழித்து எடுத்து பயிருக்கு போடலாம். இவற்றை போடும் பொழுது வயலில் ஈரம் இருக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
சிவப்பு செதில் பூச்சிகள் : இப்பூச்சிகள் செடிகளில் சாற்றை உறிஞ்சுவதால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனைக் கட்டுப்படுத்த நோய் தாக்கிய கிளைகளை அகற்றி எரித்துவிடவேண்டும். செதில் பூச்சி கூட்டமாகக் காணப்படும்
தண்டுப் பகுதியை டீசல் அல்லது மண்ணெண்ணெயில் முக்கிய பஞ்சினால் துடைத்துவிடவேண்டும்.
கவாத்து செய்யும்போது மற்றும் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் மாலத்தியான் 50 இசி 1 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
அல்லது செடி ஒன்றிற்கு கார்போபியூரான் 3 சதக் குறணை மருந்தை வேர்ப்பாகத்தில் இட்டு, மண்கொண்டு மூடி நீர்ப்பாய்ச்சவேண்டும்.
மாவுப் பூச்சி : இதனைக் கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் அல்லது மீதைல் பாரத்தியான் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
மொட்டுப்புழு இதனைக் கட்டுப்படுத்த 15 நாட்கள் இடவெளியில் பூ பூக்கும் பருவத்தில் மானோகுரோட்டோபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
அசுவினி மற்றும் இலைப்பேன் :
அசுவினிகள் இளந்தளிர்கள் மற்றும் பூ மொக்குகளில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் செடி மற்றும் பூ மொக்குகள் வாடிவிடும்.
இலைப்பேன்கள், இலைகள் மற்றும் மொக்குகளில் சாற்ற உறிஞ்சுவதால் இலைகள் சுருங்கி, சாம்பல் கலந்த வெண்மையான தேமல் ஏற்பட்டு நாளடைவில் காய்ந்து உதிர்ந்துவிடும்.
கட்டுப்படுத்த
மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி மருந்து ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.
அல்லது 3 சதம் வேப்ப எண்ணெய் தெளிக்கவேண்டும்.
அல்லது செடி ஒன்றிற்கு 5 கிராம் கார்போபியூரான் குறணை மருந்து மண்ணில் இட்டு நீர்ப் பாய்ச்சவேண்டும்.
நோய்கள்
கரும்புள்ளி நோய்கள் : இதனைக் கட்டுப்படுத்த கார் பென்டாசிம் 1 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.
சாம்பல் நோய்:
இந்நோய் இலைகளில் அடிப்பாகம், இலைக்காம்பு மற்றும் பூங்கொத்துகளில் வெள்ளை நிறப்படலம் போன்று காணப்படும்.
இந்நோய் தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடும். பூ மொட்டுகள் வளராமல் நின்றுவிடும். இதனைக் கட்டுப்படுத்த சாப் பவுடர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்
அறுவடை
ரோஜாச்செடிகள் நடவு செய்த முதல் ஆண்டிலேயே பூக்கத் தொடங்கினாலும், இரண்டாம் ஆண்டில் இருந்து தான் நல்ல மகசூல் கொடுக்க ஆரம்பிக்கும்.
கவாத்து செய்த 45 நாட்கள் கழித்து பூக்க ஆரம்பிக்கும். நன்கு மலர்ந்த மலர்களை அதிகாலையில் பறிக்கவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories