லாபம் தரும் கருவேப்பிலை

லாபம் தரும் கருவேப்பிலை

சமையலுக்கு மணத்தை அள்ளித் தரும், சத்துகள் நிறைந்த கருவேப்பிலை சாகுபடியில் தகுந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றினால் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நல்ல வருவாய் ஈட்டலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ரகங்கள்:

செண்காம்பு, தார்வாடு 1 , தார்வாடு 2 ஆகிய ரகங்கள் சிறந்தவை.

மண் மற்றும் தட்பவெப்பநிலை:

சிறந்த வடிகால் வசதியுடைய செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. மிதமான வெப்பநிலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

பருவம் மற்றும் நடவு:

ஜூலை, ஆகஸ்ட் மாதம் கருவேப்பிலை சாகுபடிக்கு உகந்தது. விதைகளை பறித்த 3 அல்லது 4 நாள்களில் பாலித்தீன் பைகளில் விதைக்க வேண்டும். ஒரு வயதுடைய நாற்றுகள் நடவுக்கு உகந்தவை.

நிலம் தயாரித்தல்:

நிலத்தை நன்கு உழுது மண்ணைப் பண்படச் செய்தல் வேண்டும். கடைசி உழவின்போது மக்கிய தொழு உரம் ஒரு ஹெக்டேருக்கு 20 டன் என்ற அளவில் இடவேண்டும். 1.2 முதல் 1.5 மீட்டர் இடைவெளியில் 30-க்கு 30 செ.மீ என்ற அளவில் குழிகள் எடுத்து 2 அல்லது 3 மாதம் கழித்து நடவு செய்ய வேண்டும். குழிகளின் நடுவே ஒரு நாற்றை நடவு செய்யவேண்டும்.

நீர் நிர்வாகம்:

நடவு செய்தவுடன் தண்ணீர் பாசனம் செய்ய வேண்டும். உயிர் தண்ணீர் மூன்றாவது நாளும் அதன் பின்னர் வாரம் ஒரு முறையும் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.

பின்நேர்த்தி:

களையை அவ்வப்போது நீக்கவேண்டும். நடவு செய்த முதலாம் ஆண்டில் பயறுவகைப் பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். கருவேப்பிலை செடிகள் ஒரு மீட்டர் வளர்ந்தவுடன் நுனிக் கொழுந்தினை கிள்ளிவிடுவதன் மூலம் பக்க கிளைகளின் வளர்ச்சி தூண்டப்படுகின்றது. ஒரு செடிக்கு 5 முதல் 6 கிளைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories