வாழை சாகுபடி

வாழை சாகுபடி

 

மண்வகை
நிலத்தை தயார்ப்படுத்துதல்
கேள்வி பதில்

மண்வகை

வாழையின் நல்ல வளர்ச்சிக்கும், நல்ல மகசூலுக்கும் ஆழமான நல்ல வடிகால்தன்மை கொண்ட, நீர்ம பிடிப்புக் கொண்ட அதிக அளவில் கரிமப்பொருட்களுடைய வண்டல் மண், கார அமிலத்தன்மை(PH 6-8) மண்வகைகள் மிகவும் நல்லது.

நிலத்தை தயார்ப்படுத்துதல்

  • நிலத்தை 3-4 முறை நன்றாக உழவு செய்தபின் ஹெக்டேருக்கு 10-15 டன்கள் நன்கு மக்கிய தொழுஉரத்தை நிலம் முழுவதும் இட்டு பின்பு மீண்டும் ஒருமுறை உழ வேண்டும். நிலமானது உவராக இருந்தால் பசுந்தாள் உரப் பயிரான தக்கைப்பூண்டு, சணப்பு ஆகியவற்றை வளர்த்து பூப்பதற்கு முன் அப்படியே நிலத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.
  • செம்பொறை மண் இருக்கும் இடங்களில் வேர் வளர்ச்சி தடைபடும் என்பதால் 2 அடி அகலமும் 2 அடி ஆழமும் உள்ள குழியில் மக்கிய தொழுஉரம், ஜிப்சம், நெல் உமிச் சாம்பல் ஆகியவை இட்டு நிரப்பி வாழை நடவு செய்ய வேண்டும்.
  • தோட்டக்கால் நிலங்களில் 2x2x2 அடி உயரம் ஆழம், அகலமுள்ள குழிகளில் கார்போபியூரான் 30gm DAP 10gm, புண்ணாக்கு 500 கிராம், மக்கிய தொழுஉரம் 5kg ஆகியவற்றை இட்டு பின்பு வாழை நடவு செய்யலாம்.

கேள்வி பதில்

1. சமையலுக்கு உகந்த வாழை இரகங்களை குறிப்பிடவும்.
மெந்தன், நேந்திரன், வயல் வாழை, மற்றும் சக்கியா

2. மலை பகுதிகளுக்கேற்ற வாழை இரகங்களை குறிப்பிடவும்.
விருப்பாக்சி, சிறுமலை மற்றும் லாடன்

3. வாழையில் ஏன் கிழங்கு நேர்த்தி செய்ய வேண்டும்?
1.சீரான வளர்ச்சி
2.நூற்புழு நோய் தாக்குதலை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.

4. வாழையில் பாலித்தீன் தாழ்கள் மூலம் தார்களை கட்டுவதனால் என்ன நன்மை?
1.சீரானா தார் முதிர்ச்சி
2.பூச்சி மற்றும் நோய் தாக்காத வாழைக்காய்கள்
3.கரும்புள்ளி மற்றும் அழுகல் அற்ற காய்கள்

ஆதாரம் : தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், திருச்சி.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories