#பருத்தியில் நுனி கிள்ளுதல்

#பருத்தியில் நுனி கிள்ளுதல்
ராவனேஸ்வரன் என்ற விவசாயி கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து பருத்தி சாகுபடி செய்து வருகிறார்
பருத்தி சாகுபடி ஒரு மரப்பயிராகும் இவை 5முதல் 8அடி உயரம் கூட வளரக் கூடியதாகும் இவ்வாறு மரமாக வளர்ந்து வருவதால் பக்க கிளைகள் அதிகம் வெடிக்காமல் மரம்போல வளர்ந்து விடுவது குறைந்து பக்ககிளைகள் அதிகம் எடுக்க வாய்ப்புள்ளது.
சென்ற வருடம் பக்க கிளைகள் அதிகமாக வளர என்ன செய்வது என்று பார்த்தேன். அதிகமாக வளரும் பருத்தி செடியை முதல் முறையாக மேலே வளரும் கொண்டையை ஒடித்துவிட்டு பார்த்ததில் பக்ககிளைகள் அதிகமாக தோன்றி உள்ளது; காய்கள் நன்கு பருத்து காணப்பட்டது
ஒரு பக்க கிளையில் 8 மேற்பட்ட காய்கள் இருந்தது என்கிறார் அப்படி பார்த்தால் ஒரு செடியில் 20 பக்க கிளைகள் உள்ளன 20 பக்க கிளைக்கும் குறைந்தது 160 காய்கள் இருக்கும் 150 காய்கள் என்று வைத்தால் கூட நமக்கு நல்ல மகசூல் கிடைக்கும்
அதனால இந்த வருடம் ஆட்களை விட்டு 80 நாட்கள் வயதுடைய பருத்தி செடியில் ஒரு செடியை எடுத்து கிளைகளை எண்ணி பார்த்தால் 18 முதல் 20 கிளைகளுக்குள் இருக்கனும் அப்பொழுது நுனி கிளைகள் வெட்டி விடனும் இதனால் நல்ல மகசூல் கிடைக்கும்
இதுவரை மழையில்லாமல் நிலம் தரிசாகவே இருந்தது இந்த வருடம் ஓரளவுக்கு மழையும் பெய்துள்ளது, அதில் உரமும் வைத்தேன் அதனால செடி நல்லா கொழுகொழு என்று வளர்ந்து விட்டது
எனவே நுனியைக் ஒடித்து விட்டு விடுகிறேன் காய் நன்றாக இருக்கிறது மனதுக்கு நிறைவாகவும் உள்ளது என்கிறார்
எனவே பருத்தி நடவு செய்துள்ள விவசாயிகள் நுனி கிள்ளும் முறையை கடைப்பிடித்து நல்ல மகசூல் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories