செப்டம்பர் முதல் டிசம்பர் வரை என்னென்ன காய்கறிகள் பயிர் செய்யலாம்?
செப்டம்பர் – ( ஆவணி, புரட்டாசி] செடி முருங்கை, கத்திரி, முள்ளங்கி ,கீரைகள் ,பீர்க்கன் ,பூசணி.
அக்டோபர் – ( புரட்டாசி ஐப்பசி] செடி முருங்கை, கத்திரி, முள்ளங்கி.
நவம்பர் – ( ஐப்பசி கார்த்திகை] செடி முருங்கை, கத்திரி, தக்காளி, முள்ளங்கி ,பூசணி.
டிசம்பர் – (கார்த்திகை மார்கழி] கத்திரிக்காய் , தக்காளி ,சுரக்காய், பூசணி, முள்ளங்கி ,மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.
வாழை இலையில் கருகல் நோயை தடுக்கும் வழிமுறை யாது?
இந்த நோய் அசுவினிகள் நோய் தாக்கப்பட்ட கிழங்குகள் மூலமும் பரவுகிறது.
இதற்கு நோய் தாக்கிய கிழங்குகளை அப்புறப்படுத்த வேண்டும்.
5 கிலோ வேப்பம் புண்ணாக்கு இன் 200 மில்லி வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சோப்பு கரைசல் பஞ்சகாவியா கரைசலுடன் கலந்து 5 நாள்கள் கழித்து சொட்டுநீர் பாசனம் அல்லதுபாசன நீருடன் கலந்து விடலாம்.
எலுமிச்சையில் உள்ள பூக்களை எப்படி அதிகரிக்கச் செய்யலாம்?
எலுமிச்சை ஆண்டுகளுக்கு இ ரு முறை பூ பூக்க செய்வதால் அதிக வருவாய் கிடைக்க ஏதுவாகிறது.
இதற்கு டிசம்பர் ஜனவரி மாதங்களில் மரங்களுக்கு சுமார் 30 முதல் 40 நாட்களுக்கு நீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும் பிறகு வறட்சியை போக்க நீர்ப்பாய்ச்சவேண்டும். இதனால் மரங்கள் நன்றாக பூக்கத் தொடங்கும்.
முள்ளங்கி பயிரில் என்னென்ன ரகங்கள் உள்ளன?
முள்ளங்கி குளிர் கால பயிர் என்பதால் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பயிரிட ஏற்றதாக உள்ளது.
முள்ளங்கியில் சி .ஓ.1,பூச ஹிமாநீ ,பூச தேசி ,பூச ரேஷ்மி ,வெள்ளை நிஷாந்தி கல்யாணி வெள்ளை ஆகியவை முக்கிய காரணங்களாகும். கல்யாணி வெள்ளை என்ற ரகத்தை தவிர மற்றவர்களை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம்.
குடல் புழு நீக்கம் செய்வதினால் என்ன பயன்?
குடற்புழு நீக்கம் செய்வதால் கால்நடைகளுக்கும் சினை உற்பத்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் உணவு உட்கொள்ளும் திறனையும் அதிகரிக்கிறது.உணவில் உள்ள ஊட்டச்சத்தை முழுமையாக கால்நடைகளுக்கு கொண்டு சேர்க்கிறது.