மஞ்சள் மற்றும் நீல நிற அட்டையின் பயன்கள் என்ன?
மஞ்சள் நிறஅட்டையைப் பயன்படுத்தி வெள்ளை ஈ ,அசுவினி ,இலை சுருள் ஆகிய பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
நீல நிற அட்டையைப் பயன்படுத்தி இலைப்பேனை கட்டுப்படுத்தலாம்.
கொழுஞ்சி செடியில் கரும்புகை பூசண நோய் உள்ளது .அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
இந்த கரும் புகை பூசான நோய்க்கு காரணம் அஸ்வினி பூச்சிகள் மற்றும் மாவுபூச்சிகள் ஆகும்
இவற்றை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு4 கிராம் சூடோமோனாஸ் மற்றும் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து செடிகளின் மீது தெளிக்கலாம்.
சோளம் பயிரிடும் காலம் என்ன?
வைகாசி- ஆனி முதல் ஆவணி- புரட்டாசி வரை மக்காச்சோளம் பயிரிடலாம்.
மானாவாரியாக ஆடி( ஜூலை ஆகஸ்ட்) புரட்டாசி(செப்டம்பர் -அக்டோபர்)
ஆகிய மாதங்களில் மக்கச்சோளம் பயிரிடலாம்.
இறவைப் பயிராக தை ( ஜனவரி- பிப்ரவரி) மற்றும் சித்திரை (ஏப்ரல் -மே) ஆகிய மாதங்களில் மக்காச் சோளம் பயிரிடலாம்.
வெள்ளாடுகளின் வளர்ச்சி மற்றும் எடை அதிகரிக்க என்ன உணவு கொடுக்கலாம்?
பசுந் தீவனங்கள் உலர் தீவனங்களை கொடுக்கலாம் .மக்காச்சோளம் ,கம்பு, கோதுமை, கலந்த அடர் தீவனத்தை தண்ணீரில் பிசைந்து தினமும் கொடுக்க வேண்டும்.
அசோலாகொடுப்பதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.
மாட்டிற்கு மடி வீங்கி சிவப்பாக இருக்கிறது .எதற்கு தீர்வு என்ன?
மாட்டின் மடியில் ஐஸ் கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.
வேப்பிலை,சுண்ணாம்பு ,கற்றாழை சிறிதளவு கலந்து மடி வீக்கம் குறையும் வரை பூசி விடவும். மடியிலிருந்து பால் முழுமையாக கறந்து விடவும்.
மேலும் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும்.