விதைத்தல்
நாற்றுகள் 6 வாரங்களில் நான்கு முதல் ஐந்து இலைகளுடன் காணப்படும். அப்பொழுது நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.
விதைகளை நேரடியாக விதைத்தும் சாகுபடி செய்யலாம் . அதாவது \விதைகளை மணலுடன் கலந்து 5 முதல் 6 சென்டிமீட்டர் இடைவெளியில் வரிசையில் சிறிது சிறிதாக விதைத்து அவற்றை மேல்மண் கொண்டு மூடிவிட வேண்டும்.
தண்டுகள் மூலம் சாகுபடி செய்ய துளசியின் நுனிகளை வெட்டி அக்டோபர் டிசம்பர் மாதங்களில் நடவு செய்தால் 90 முதல் 100 சதவீதம் முளைத்துவிடும் .இதற்கு 8 முதல் 10 கனு க்குகள் மற்றும் 10 முதல் 15 சென்டிமீட்டர் நீளம் உடைய தூண்டுதல் தேவை. முதல் இரண்டு மூன்று ஜோடி இலைகளை தவிர மற்றவற்றை அகற்ற வேண்டும். பிறகு அவற்றை நன்கு தயாரிக்கப்பட்ட நாற்றங்கால் படுக்கைகளில் அல்லது பாலித்தீன் பைகளில் நடவு செய்ய வேண்டும். 4 முதல் 6 வாரங்களில் வேறு பிடித்துவிடும். அவற்றை வரிசைக்கு இடையே 40 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.