பருத்தியின் நுனிகளைக் கிள்ளி விட வேண்டும் ஏன் எதற்காக?

பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தில் அரசு விவசாயிகளுக்கு மானியம் வழங்குகின்றது..

தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் கருவிகள் அமைப்பதற்கு சிறு குறு விவசாயிகளுக்கு 100 சத மானியம் வழங்கப்படுகிறது.

நெற் பயிர் வகைகள் தோகைகள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அதற்காக தீர்வு என்ன?

மழை பெய்து முடிந்த பிறகுவயல்களில் உள்ள நெற் பயிர் வகைகள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் ஒரு லிட்டர் நாட்டு பசு மாட்டின் கோமியம் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்.
இதனால் நெற்பயிருக்கு ஜிங்க் சல்பேட் கிடைக்கும் பூச்சி தாக்குதலும் குறையும்.

பயிர் காப்பீட்டு திட்டத்தின் குறிக்கோள் என்ன?

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் நடவு செய்ய இயலாமை விதைப்பு செய்த முதல் இடைப்பருவ இடர்பாடுகள் மகசூல் இழப்பு போன்றவற்றிற்கு நிவாரணம் பெற வழி வகுக்கப்பட்டுள்ளது.

பருத்தியின் நுனிகளைக் கிள்ளி விட வேண்டும் ஏன் எதற்காக?

பருத்திக்கு தழைச்சத்து உரங்கள் அதிகமாக விடுவதால் பயிர்கள் சில சமயங்களில் தேவைக்கு அதிகமாக வளரும்.

இதனால் பூ பிடிக்கும் திறன் பாதிக்கப்பட்டு காய்கள் பிடிப்பது குறைந்துவிடும். இந்த நிலையில் செடியில் வளரும் நுனிகளை கிளறி விடுவதால் பக்க கிளைகள் உருவாகி அதில் பூக்களும் காய்களும் அதிக எண்ணிக்கையில் உண்டாகும்.

 

கால்நடைகள் தீவனம் சரியாக எடுக்கவில்லை என்றால் சீரகம் 35 கிராம் ,கருப்பட்டி 175 கிராம், வெந்தயம் 175 கிராம், ஓமம் 50 கிராம் ஆகியவற்றை நன்றாக அரைத்து தேவையான அளவு பசும்பாலுடன் கலந்து அதனுடன் நல்லெண்ணெய் 175 மில்லி கலக்கி தினமும் ஒருவேளை வீதம் மூன்று நாள் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories