பொதுவாக மாதங்களை வைத்து மாதங்களில் நிலவும் சூழ்நிலைகளை வைத்து தான் விவசாய பணிகளை மேற்கொள்வார்கள் அந்த வகையில் இரண்டு மாதங்களில் நிலவும் சூழ்நிலையை அழகாக வேளாண்மைப் பழமொழி மூலம் உணர்த்துகிறது அதை பற்றி இங்கு காணலாம்.
ராகுலுக்கு விவசாயத்துல ஆர்வம் அதிகம்.அவன் தனது தந்தையிடம் மழைக்காலத்தை எப்படி பிரி க்கலாம் என கேட்டான். அதற்கு அவரது தந்தையை மழை அதிகமாகப் பெய்யும் காலத்தை அவ்விடத்திற்கு மழை காலம் என அழைப்பார்கள்.
அதாவது ஐப்பசி முதல் ஆவ னி வரை உள்ள நான்கு மாதங்களில் தென்மேற்கு பருவமழை காலம் எனவும் புரட்டாசி முதல் மார்கழி மாதம் வரையிலான உள்ள நான்கு மாதங்கள் வடகிழக்கு பருவமழை காலம் எனவும் குறிக்கப்படுகிறது என்றார்.
இவ்வாறான மழைக்காலத்தில் புரட்டாசியும் ஐப்பசியும் அடங்குமா என்று கேட்டான்.
அதற்குள் அவரது தந்தையோ ஆம் அடங்கும் என்றார் .ஆனால் முழுவதும் மழையாகப் பெய்வதில்லை. அவ்வப்போது மட்டும் மழை இருக்கும் என கூறியவாறு புரட்டாசியில் பெ ய்து பிறக்க வேண்டும் ஐப்பசியில் காய்ந்து பிறக்க வேண்டும் என்ற பழமொழியை கூறினார்.
அதற்கு ராகுல் ஏன் அப்பா அவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு அவனது தந்தையை விவசாயத்துக்கு மழை அவசியமான ஒன்றாகும் என்றார்.
அப்படிப்பட்ட மழை பெய்வது மாதத்திற்கு மாதம் மாறுபடும் .எல்லா மாதங்களும் மழை பெய்வதில்லை. அந்தவகையில் ஆவணி பிறந்த சில நாட்களில் இருந்தே மழை பெய்ததால் சிறப்பாக விளைநிலங்கள் மாறும். அந்த மழையின் குறிப்பு புரட்டாசி பாதி நாட்கள் வரை நீடிக்கும். இதை உணர்த்தும் வகையில் தான் புரட்டாசியில் பெ ய்து பிறக்க வேண்டும் என்று கூறுவார்கள் புரட்டாசியில் பாதி நாட்களுக்கு மழை பாதி நாட்களுக்குப் பிறகு மழை சிறிதும் வராமல் வறட்சியாக தான் இருக்கும் .இதனால் ஐப்பசி மாதத்தில் நிலமானது காய்ந்தது போல இருக்கும் .இதை உணர்த்தும் வகையில்தான் ஐப்பசி காய்ந்து பிறக்க வேண்டும்”என்று சொல்வார்கள் என்றார்.