“புரட்டாசி பொன் உருக காயும், மண் உருக பெய்யும்”

அந்தக் காலத்தில் விவசாயத்திற்கு உதவும் வகையில் பெய்யும் மழையை வைத்து மாதத்தை நமது முன்னோர்கள் வர்ணிப்பார்கள் அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் பெய்யும் மழையின் சிறப்பினை இங்கு காணலாம்.

பிரபாகரனின் சொந்த ஊர் சிவகங்கை. ஆனால் அவர் சென்னையில் வசித்து வந்தார் .அவர் ஒருமுறை தனது தாத்தாவை பார்க்க அவரது ஊருக்குச் சென்றார் .அப்பொழுது புரட்டாசி மாதம். அந்த மாதத்தில் சற்று மழை பெய்தது.

அதை பார்த்த பிரபாகரன் என்ன தாத்தா இந்த மாதத்தில் கூட மழை பெய்யுமா என்றார். உடனே தாத்தா அட என்ன இவ்வாறு கேட்டு விட்டாய் என்றார்.”புரட்டாசி பொன் உருக காயும், மண் உருக பெய்யும்” என்ற பழமொழியை கூறினார்.

அதைக்கேட்ட அவனது பேரன் பிரபாகரன் எனக்கு புரியவில்லை தாத்தா கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள் என்றான்.

அதற்கு அவர் புரட்டாசியில் வெயில் பாதி னாலும் மழை பாதி னாலும் இருக்கும். எப்படி என்றால் பொன்னானது உருக எவ்வளவு வெப்பம் தேவையோ அதே போல இந்த புரட்டாசி மாதத்தில் அதிக வெயில் நிலவும் இதையே “புரட்டாசி பொன் உருக காயும் என்ற வரி உணர்த்துகின்றது.

எவ்வளவு அளவிற்கு வெயில் அடி க்கிறதோ அதே அளவிற்கு மழை பெய்யும் .அதாவது மண் இலகுவாகும் அளவிற்கு மழையும் பெய்யும். இதையே மண் உருக பெய்யும்” என்ற வரியில் உணர்த்துகிறது என்றார்.

சரி தாத்தா பொதுவாக தமிழகத்தில் மழைக்காலம் இப்பொழுதெல்லாம் வரும் என்றார்.

அதற்கு அவரது தாத்தா தற்போதுள்ள காலத்தில் மழை பெய்யும் காலம் மாறிவிட்டது ஆனால் அக்காலங்களில் பட்டம் தவறாமல் மழை பெய்யும்.

பொதுவாக அக் காலத்தில் மழை பெய்வதை வைத்து வைகாசி முதல் ஆவ னி வரை உள்ள நான்கு மாதங்களில் தென்மேற்கு பருவமழை காலம் எனவும் புரட்டாசி முதல் மார்கழி மாதம் வரையிலான நான்கு மாதங்கள் வடகிழக்கு பருவமழை காலம் எனவும் பிரிக்கப்படுகின்றது என்றார்.

அதைக்கேட்ட பிரபாகரன் நமது நாட்டின் இயற்கை வளம் மிகுந்த இருக்க இந்த மழை தான் காரணம். அதனால் தான் நிலத்தடி நீர் பெருகி விவசாயம் செய்கின்றது. நமது சந்ததியினருக்கு மழைநீர் முறையாக கிடைக்க மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் தாத்தா என்று தனது கருத்தை தாத்தாவிடம் தெரிவித்தார்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories